எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மே, 2023

சாட்டர்டே போஸ்ட் - நான் மீடியா நாகாவின் நான் ஸ்டாப் நான் எஃப் எம்.

என் முதல் நூலான சாதனை அரசிகள் வெளியீட்டு விழாவின் போது 2012 ஜனவரி 8 அன்று ஆர்ஜே நாகா என்னை எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம் க்காகப் பேட்டி எடுத்தார். அதன்பின் டிஸ்கவரி  புக் பேலஸில் எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம்மின் முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக ஏழெட்டுப் பெண் ஆளுமைகளுடன் உரையாடி நிகழ்வைத் தொகுத்தளித்தேன். 


இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எஃப் எம்மிலும் பல்வேறு துறைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கும் நாகாவிடம் அவரது எஃப் எம் மற்றைய துறைகள் பற்றிக் கேட்டேன். அதை இங்கே தருவதில் மகிழ்கிறேன். 




///பேரன்பு வணக்கங்கள், 

நான் RJ நாகா.   நான் மீடியா NAAN MEDIA என்ற ஊடக நிறுவனத்தை கடந்த 2 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகிறேன். பொருளாதார நெருக்கடியால் நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல்,  அடிக்கடி உண்டாகி விடுகிறது. 

நான் ஊடகத்  துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி கொண்டிருப்பவன்.  நிருபராக, உதவி ஆசிரியராக , பத்திரிகை வெளியீட்டராக,  பத்திரிகை ஆசிரியராக,  எழுத்தாளராக 12 புத்தகங்கள் எழுதியவனாக, இலங்கை , துபாய் உள்ளிட்ட நாடுகளில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறேன். 

இணைய வானொலி, சிற்றலை வானொலி, செயற்கைக்கோள் வானொலி, சமுதாய வானொலி என பல வடிவங்களில் என் ஊடக அனுபவங்கள் ஏராளம். 

சொந்தமாக 24 மணிநேரம் இயங்கும்  "நான் FM" என்ற இணைய  வானொலியை நடத்திக் கொண்டிருக்கிறேன்.  இணையதளம் ஒன்றும் 2 youtube  தளங்களும் செயல்  பாட்டில் இருக்கிறது. 

2003 ஆகாசவாணி விருது, 2018 அன்று அபுதாபி தமிழ்ச்சங்கம் வழங்கிய விருது மற்றும் புஜைரா தமிழ் சங்கம் வழங்கிய விருது என மிக முக்கிய விருகளை வாங்கி இருக்கிறேன். 

இரண்டு பிள்ளைகள். மகள் மற்றும் மகன். 
சென்னையில் வசிக்கிறேன். 

தீக்குச்சி விரல்கள்  - கவிதைத் தொகுப்பு - 1998
என் வீடு ஒரு குருவிக்கூடும்  - கவிதைத் தொகுப்பு - 2000
மேற்கு கோபுர வாசல் வழியே  – சிறுகதைத் தொகுப்பு - 2000
வேர்  – நாவல்  - 2002
வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை  – நாவல்  2003
இருப்பிடம் – நாவல்  - 2007
வடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை - கவிதைத் தொகுப்பு - 2008
சயனக் கிளைகளில் கீழிறங்கும் வனம் - கவிதைத் தொகுப்பு - 2008
ஆதாமும் ஏவாளுமான  சில ஆப்பிள் கதைகள் -  கவிதைத் தொகுப்பு - 2017
பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை - கவிதைத் தொகுப்பு -2018
இசையின் நிறம் தேடும் தூரிகை - கவிதைத் தொகுப்பு -2019


ஒரு குறும்படத்தையும், ஒரு முழுநீள திரைப்படத்தையும் எழுதி இயக்கிய அனுபவமும் இருக்கிறது. என்னுடன் இணைந்து செயல்படவிரும்பும் நண்பர்கள் என்னை அணுகலாம். 


எங்கள் வானொலி NAAN FM ஐ உங்கள் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து 24 மணிநேரமும் எந்த இடையூறும் இல்லாமல் கேளுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பாருங்கள்


அணுகவேண்டிய தொலைப்பேசி எண் +91 9150263294
மின்னஞ்சல் முகவரி :  naanmedia2020@gmail.com

டிஸ்கி:- அடேயப்பா. வானொலி மற்றும் யூ ட்யூப்பில் உங்கள் படைப்புகள் பற்றி அறிவேன். ஆனால் 12 புத்தகங்கள், 2 சிறப்பு விருதுகள், ஒரு குறும்படம், ஒரு திரைப்படம் ஆகியன இயக்கி இருக்கீங்கன்னு கேள்விப்படும்போது ஆச்சர்யமா இருக்கு. தொடரட்டும் உங்கள் சாதனைகள். உங்களுடன் கரம்கோர்த்துச் செயல்பட விரும்புவோர் நிச்சயம் தொடர்பு கொள்வார்கள். வாழ்த்துக்கள் நான் மீடியா நாகா :) 

2 கருத்துகள்:

  1. பெயரில்லா20 மே, 2023 அன்று 6:49 PM

    All the best for his future endeavors.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி பெயரில்லா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...