எனது 24 நூல்கள்
வெள்ளி, 31 டிசம்பர், 2021
ஓங்காரத்தால் ஜெயித்தவள்.
திங்கள், 27 டிசம்பர், 2021
திங்கள், 20 டிசம்பர், 2021
காக்கைச் சிறகினிலே.. காலத்தால் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்.
ஹீராவாகவும் வில்லனாகவும் சாதித்தவர்களைப் பட்டியலிட்டு விடலாம், எம் ஆர் ராதா, சத்யராஜ், ரகுவரன், அரவிந்தசாமி, ரகுமான் என்று. அதிலும் குணச்சித்திரப் பாத்திரத்திலும் பரிணமித்தவர் ரகுவரன். மென்மையும் வன்மையும் வில்லத்தனமும் ஒருங்கே குடி கொண்ட அதிசயம் அவர். இவ்வளவையும் சாதிப்பது ஒரு சிலருக்கே சாத்தியம்.
நானா படேகர் போல் நடிப்பின் பல பரிமாணங்களில் என்னை அசத்தியவர் ரகுவரன். அந்தத் தீவிரமான பார்வை, கரகரப்போடு கூடிய மெருகான ஆண்குரல், தீர்க்கமான நாசி, பளிச்சென்ற உயரமான உருவம், மெஜஸ்டிக்கான தோற்றம், எளிய ஹீரோ தோற்றம், பணக்கார வில்லத் தோற்றம், குணச்சித்திர தந்தைத் தோற்றம் எல்லாமே அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்ஸ்.
திங்கள், 13 டிசம்பர், 2021
யூ ட்யூபில் 61 - 70 வீடியோக்கள்.
61. #மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=CNglsMf1_Q8
#மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்
#MANCHALUMKUNGUMAMUM#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN
அமேஸானில் என் இருபத்தியைந்தாவது மின்னூல் “ மஞ்சளும் குங்குமமும்” வெளியாகி உள்ளது.
விலை ரூ. 100/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/B07PRPLMPH
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
///நமது பாரம்பர்ய விஷயங்களை அதன் மூலத்திலிருந்து அறியும் முயற்சியாகவும் தற்கால அறிவியலோடு ஒப்பு நோக்கியும் அதன் பயன்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக எழுதப்பட்டது இந்நூல்.///
62. #பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0DPsy2_sp94
#பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்
#PENARAM #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN
எனது இருபதாவது மின்னூல்.”பெண் அறம்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/-
பெண் அறம்
https://www.amazon.in/dp/B0881NQHLM
///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்///
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
வியாழன், 9 டிசம்பர், 2021
மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்
மன்னார்குடி - இராஜ மன்னார்குடி ஒற்றைத் தெருவில் இருக்கும் ஆனந்த விநாயகரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின் தரிசித்தேன்.
கணவருக்கு மன்னார்குடியில் அலுவலக வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. உடனே நானும் பையனும் கூடக் கிளம்பி விட்டோம். முக்கிய காரணம் அங்கே என் தோழி ப்ரேமலதா தியாகராஜன் இருப்பதால்தான்.
முகநூலில் என்னைத் தேடி இணைந்து வாட்ஸப்பில் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அன்புப்பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது. எனக்கும் போக ஆசைதான் . ஆனால் நேரம் ஒத்துழைக்கவில்லை.
கணவர் மன்னார்குடி என்றதும் உடனே கிளம்பி அவளையும் அவளின் அன்பு முயற்சியால் இன்னும் சில தோழியரையும் ( வஹிதா, அமுதா, வசந்தி ) சந்தித்துவிட்டு வந்தேன்.
அந்தப் பயணத்தின் போது நான் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் பள்ளி, இரண்டாம் வகுப்பு & எட்டு முதல் ப்ளஸ்டூ வரை படித்த செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றையும் நாங்கள் குடியிருந்த 18, சிங்காரவேலு உடையார் தெரு, லெக்ஷ்மி காலனி வீட்டையும், ஆனந்த விநாயகர் & இராஜகோபால சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.
பிரேமலதாவின் அன்பில் தோய்ந்த நிறைவான பயணம். ( ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வரை இருவரும் படித்தோம். அவளுக்குத் திருமணமாகிவிட நான் கல்லூரிக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் அன்பு மடல்களாக வரைந்து தள்ளி இருந்திருக்கிறோம். அதை எல்லாம் பத்திரமாக வைத்துள்ளாள். அவளது மருமகள் அன்பும் அழகும் அறிவும் வாய்ந்த பாசமான பெண். அவளின் முயற்சி மூலமே நாங்கள் சந்தித்தோம். )
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்
கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்
காரைக்குடியில் ஆவுடையான் செட்டியார் வீட்டில் பிறந்த பார்வதி தமிழ்த்துறை & தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு மாஃபா.க. பாண்டியராஜன் அவர்களிடம் தம் கல்விப்பணிக்காகச் சாதனைப் பெண் விருது வாங்கி இருக்கிறார். மழலையர்க்கான கல்விக் கூடத்தைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருவதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிகு அவ்விருதுக்குப் பொருத்தமானவர் அவர். இவ்வாறு சிறப்புப் பெற்றவரிடம் அவரது பள்ளி குறித்துக் கேட்டு அறிந்ததை இங்கே கொடுத்துள்ளேன்.
இவரது கணவர் பெயர் சிவகுமார் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மிரா கண்ணாத்தாள், ஐஸ்வர்யா. இவரது மாமியார் வீடு நாட்டரசன்கோட்டை.
வெள்ளி, 3 டிசம்பர், 2021
ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும் !
2941. Today released a children book by Udaishankar at Karaikudi M A M Mahal Book Fair.
2942. My book was released by Kalaivani , headmistress of Sirugappatti govt school and received by Jeeva Sinthan Sir, சிவகங்கைக் கிளைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம். உடன இருப்பவர் என்னை உதயசங்கரின் நூலை வெளியிட அழைத்த காரைக்குடி பாரதி புத்தகாலயத்தின் ஜீவாநந்தன் சார்