எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 அக்டோபர், 2021

டூயிஸ்பர்க்கில் நடைப்பயிற்சி. HEALTHY LIVING AT DUISBURG

 ஜெர்மனியின் டூயிஸ்பர்க் நகரில் இரு மாதங்கள் மகனோடு வசித்து விட்டு வந்தோம். மிக அருமையான நகரம். ஜெர்மனியின் மேற்கில் ரைன் நதிக்கரையின் வடக்கில் அமைந்த நகரம். ஜெர்மனியின் பெரிய நகரங்களில் 15 ஆவது இடம் வகிக்கிறது. ரைன், ரூர் என இரு நதிகள் பாய்கின்றன. ரைன் நதிக்கரையோரம் இண்டஸ்ட்ரியல் ஏரியா. இரும்பு, எஃகு, ரசாயனத் தொழிற்சாலைகள் அதிகம். இங்கே நதி வழி சரக்குப் போக்குவரத்து முக்கியமானது. இப்போது இந்தத் தொழிற்சாலைகளில் பாதிக்குமேல் செயல்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. 

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளால் அதிகம் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட ஊர்தான் டூயிஸ்பர்க். காரணம் இங்கே உள்ள தொழிற்சாலைகளும் அதனால் நாட்டின் முன்னேற்றமும்  வசதிகளும் அவர்களின் கண்ணை உறுத்தியதுதான். இருந்தும் தனது 1100 வது பிறந்தநாளை 1983 இல் கொண்டாடியதாம் சரித்திரப் புகழ் வாய்ந்த டூயிஸ்பர்க். ( இதற்கு அரண்போல் மதிற்சுவரின் எச்சங்கள் எல்லாம் இருக்கு !) 

பேருந்துப் போக்குவரத்து சாலையின் இரு மருங்கும். நடுவில் எஸ்பான், டி பான், ரைன் பான் என ரயில்வே சிஸ்டம். ட்ராம் வண்டிகளும் ஓடுகின்றன. ஹாபன்ஹாஃப் என்பது ரயில்வே ஜங்க்‌ஷன். ஆட்டோ பான் என்பது சாலைப் பேருந்துப் போக்குவரத்து. 

ஒரே நாள் இரவிலேயே ட்ராக் ரிப்பேர் எல்லாம் செய்து ட்ராக்கையே மாற்றி விடும் கில்லாடிகள் ஜெர்மானியர்கள். முதல்நாள் ஒரு ட்ராக்கில் பயணித்தோம். அர்த்த ராத்திரியில் இன்னொரு ட்ராக்குக்கு தண்டவாளங்களை இணைத்து விட்டார்கள்!

சரி வாங்க ஒரு நாளைக்கு ஒரு ரோடு என நடந்து உலா வந்து ரசிப்போம். 

நாம் செல்லும் வழியில்தான் டூயிஸ்பர்க்கின் உள் துறைமுகம், ரயில் போக்குவரத்துப் பாலம், லைப்ரரி, ஜிம் செண்டர், ஓல்ட் ஏஜ் ஹோம், கடைத்தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், சர்ச்சுகள், தொழிற்சாலைகள், தாவரவியல் பூங்கா ஆகியன உள்ளன. 

டூயிஸ்பர்க் ரூஹ்ராட்டர்ஹாஃபன்  என்பது உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுத் துறைமுகம். இதில் 100 கார்களுக்குமேல் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்குக் கப்பல்களை எல்லாம் பார்த்தோம். அது எல்லாம் இன்னொரு இடுகையில். இப்போது நடக்க ஆரம்பிப்போம்.



சாலையில் இரு மருங்கிலும் கார், பஸ் செல்ல வழிகள், நடுவில் ட்ராம்,எஸ் பான் போக்குவரத்து. 
இந்த ட்ராம் வண்டியிலேயே குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்கள் செல்லும் வண்டிகள் வரும்.ஒரு பக்கம் டுசில்டார்ஃப் செல்லும் வழி. இன்னொன்று டோர்ட்மெண்ட் என நினைக்கிறேன். 

ஒரு நாள் இரவிலேயே ட்ராம் போக்குவரத்தை இருபுறமும் சீர்படுத்தி விட்டு நடுவில் புது ட்ராக் போடுகிறார்கள் மெட்ரோ ட்ரெயினுக்காக.

ரெவே என்னும் சூப்பர் மார்க்கெட் அருகில்தான் இருக்குன்னு போர்ட் சொல்லுது. 

பீர் விளம்பரம் 

டூயிஸ்பர்க் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழி. 
பேக்கரி ?!


பொம்மீஸ் கிங் என்பது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் விற்கும் கடை !விதம் விதமான சாஸ்களோடு பொரித்த உருளைக்கிழங்கை உண்பது இவர்களுக்குப் பிடிக்கும்.

இது வீட்டிலிருந்து இன்னொரு பக்கம் சென்றபோது எடுத்தது. 

மிகப் பெரும் நகரம் இது. மக்கள் தொகை 5,00,000.ஆனால் வெகு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். நானோகார் மாதிரி ஒன்று நிற்கின்றது. 

ஜெர்மனியின் வீடுகள் அநேகம் மொட்டைமாடிப்பகுதி அல்லது மேல் தளத்தின் மேற்கூரை கூம்பு வடிவிலேயே ( நம்மூரு ஓட்டு வீடு ஸ்டைல் ) அமைக்கப்படுகிறது. ஏனெனில் குளிர்காலத்தில் பனி மழை பொழியும்போது பனி உருகத் தோதாக இப்படி அமைக்கிறார்கள். 

வெய்யிலில் படர்ந்திருக்கும் பனி உருகி வழியத் தோதாது இந்தக் கூம்பு அமைப்புத்தான். 
ரைனஸ்ஷ் போஸ்ட் என்றொரு பத்திரிக்கை அலுவலகம் . 1946 இல் இருந்து வெளிவருகிறதாம். 

நைஹோஃப்ஸ் என்றொரு கடை, காஃபி ஷாப்பா அல்லது ஹோட்டலா தெரியவில்லை. 

ரிஃபார்ம் பயோ மார்க்கெட். 


டூயிஸ்பர்க்கின் முக்கிய சாலை. இங்கே சாலைகளை ஸ்ட்ராஸே என்பார்கள். 

ஒரே சாலையில் இருபுறமும் நடைபாதை ( வீடுகளை ஒட்டி ) பத்து அடி. கற்கள் பதித்து இருப்பார்கள்.  அதன்பின் ஒரு சரிவுப்பாதை 5 அடிக்கு சிவப்புக் கல் பதித்தது. அது சைக்கிளில் ஓட்டுவோர் செல்ல. அதன்பின் 10 அடிக்கு ஒரு சரிவு நடைபாதை. அது மழை நீர் வடிய.

அதன் பின் பேருந்துப் போக்குவரத்துக்காகப் பத்தடி. ட்ராம் வண்டி வரப் போக 20 அடி.

கிட்டத்தட்ட ஒவ்வொரு சாலையுமே 100 முதல் 130 அடி வரை இருக்கிறது. 

இவை எல்லாம் குறுக்குப் பாதைகள். 
 இதன் பெயர் மைக்கேல் ஸ்ட்ராஸே

நீலக் கலர் போர்ட் ஐன்பான் ஸ்ட்ராஸே என்கிறது. அதாவது ஒன் வே ட்ராஃபிக் ரோட் , ஒருவழிப் பாதையாம். 

இது இன்னொரு புறம் ரைன் நதிக்குச் செல்லும் பாதை. வழியில் அநேகக் கடைகள். துருக்கியர்கள் கடை அதிகம் உண்டு. குப்பை போட ஆங்காங்கே போஸ்ட் பாக்ஸ் மாதிரி நீல மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி !

ஒரு கதீட்ரல் இருக்கிறது. இங்கே உள்ள சர்ச்சுகளின் கோபுரங்களில் எல்லாம் சேவல் ( திசைகாட்டி, காற்றின் திசைகாட்ட) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. 
இது மகன் வீட்டுக்கு எதிரில் உள்ள சிற்றுண்டி நிலையம். 

ஸம் லாட்டர்ன்சேன்.  என்றால் தொங்கும் விளக்கு ( லாந்தர் போல ) 

தங்கும் விடுதி & மதுக்கூடம். இங்கே வெறும் பீரை மட்டும் வாங்கி அருந்துகிறார்கள். இல்லாவிட்டால் பிங்க் கலர் சாஸ் தொட்டு உருளையோடு சாப்பிடுகிறார்கள். 

குடியிருப்புப் பகுதியும் கடை வீதியும். 
மேம்பாலப் போக்குவரத்து. விண்ட்தோர் ஸ்ட்ராஸே என்று போட்டிருக்கு. 

சாலை , நடைபாதை, சைக்கிள் பாதை, பேருந்து, ரயில் போக்குவரத்து , ட்ராம் போக்குவரத்து, சில இடங்களில் மெட்ரோ போக்குவரத்து, இத்துடன் மழை நீர் வடிய வசதி மேலும் நெடுச்சாலையைக் கீறாத சாக்கடைப் போக்குவரத்து,  எனப் பக்காவாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன இச்சாலைகள். அனைத்தையும் பக்காவாக அமைத்திருப்பதோடு சாலையும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது.

அங்கே இருந்த இரண்டு மாதங்கள் தினம் தோராயமாக 5 கிலோ மீட்டர் நடந்து சிறிது ஃபிட்டாகவும் கம்ஃபர்டாகவும் உணர்ந்தேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...