யூ ட்யூபில் என்னுடைய நூல் பார்வை குறித்தும், நூல் அறிமுகம் குறித்தும் மேலும் அமேஸானில் வெளியாகியுள்ள என்நூல்கள் குறித்தும் நண்பர்கள் சிலரின் பார்வைகளை இங்கே அறியத்தருவதில் மகிழ்கிறேன்.
1. செவ்வரத்தை என்ற நூல் பார்வை ஒன்றை யூ ட்யூபில் வெளியிட்டு இருந்தேன். 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது. முழுக்க முழுக்க ஈழம் வாழ் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கியது. அதில் 15 கதைகள் பரிசு பெற்றவை. அதற்கு பொதி என்பவர் வான் அவை குழுமத்தில் வெளியிட்ட கருத்து இது. நன்றி பொதி சார்.
#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s
திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களே!
"செவ்வரத்தை"நூல்பற்றிய தங்களின் பார்வையும்,பாராட்டுகளும் மனநிறைவைத் தந்தது.உண்மையில் இது பாரிய முயற்சி இது.இந்தக்காலத்தில் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக நான் இருந்தேன்.
இந்தப்போட்டியில் 149 சிறுகதைகள் வந்திருந்தன.ஒவ்வொரு கதைகளையும் ஐந்து தடவைக்கு மேல் வாசித்திருப்பேன்.மிகவும் கஸ்ரமான வேலைத்திட்டமிது.என்னுடன் அன்றைய நிர்வாகத்தினரும் சேர்ந்து பயணித்திருந்தோம்.உங்களைப்போன்றோரால் சிறந்த நூலாகப் பாராட்டைப் பெறும்போது மனம் நிறைவு பெறுகிறது.
தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.
2. மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை (Tamil Edition) Kindle Edition
https://www.amazon.in/dp/B0956LVQS1
@Thenammai Lakshmanan I read this book...it has intros or reviews of 19 books translated into tamil from various languages... A few books are not read by me so, the intros gave me a fair idea about those books... Some intros are informative and a few are little longer and not conveyed the content or crux of the book...
Overall, it is good to get to know about books authored by great writers and translators..
I agree with your views on translation and translators (ref. 3rd article வனக்கோயில்)...
By Siddharthan.
--Thanks Siddharthan Sir !
3. தனிமையில் ததும்பும் இதயம் (Tamil Edition) Kindle Edition
https://www.amazon.in/dp/B08WHBVPFP
இந்தக் கவிதை நூலுக்கு நண்பர் ஒருவர் எழுதிய பின்னூட்டத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
///நூறு நூறாய் எண்ணி எண்ணி விழுகிறது..... கவிதை....
உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.
எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்
இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.
ஏன் பேசுகிறோம்
எதற்கு சந்திக்கிறோம்
என்ன உண்கிறோம் என்பது
சிந்தனைக்கு உரியதாயில்லை.
முதல் முதல் ஏற்பட்ட
ஒரு சந்திப்பு மட்டுமே
வித்யாசமாய் இருந்ததால்
நினைவில் இருக்கிறது.
அடுத்தடுத்து நட்பும் பிரிவும்
சகஜமாகிப்போவதால்
எல்லாமே ஒரு
சாதாரண விஷயமாகிறது.
ஆனாலும் முதல் சந்திப்பின்
ஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்
புரையேற்றிக் கொண்டேயிருக்கிறது
திரும்பச் சந்திக்கும் ஆவலை.
எல்லா சந்திப்புகளையும்
தூக்கிப்போட்டுவிட்டுப்
போகச் சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை.
ஏதோ ஒன்று இனிமையைத்
தூண்டிக்கொண்டே இருப்பதால்
இன்னும் விட்டுப் போகாமல்
தொடர்கிறது சில சந்திப்பு.
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றிருந்தேன்..
அதனையும் உம்மிடமே பெற்றேன்...
"தெரிந்தோ தெரியாமலோ
கிடைத்த
விபரீத ராஜ யோகம்"
சிலவற்றை சுருக்கி...
இன்னும் சில நெருக்கி..
பிண்ணியிருந்தால் இன்னும் மணமாயிருந்திருக்கும் தொகுப்பு..
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உலகம்...பல கவிதைகளில் சம்பவங்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது..
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஆணாகவும் விரிகிறது கவித்தோகை..
கண்ணன் என் காதலன்னே வச்சுருக்கலாம்...
நீளமா எழுதுனா...ஒவ்வொரு ரசனையும் எழுதனும்...
மிட்டாயிலிருந்து ...வழியும் முத்தங்கள் வரை
முத்தங்களை ஆபாசங்களில் இருந்து பிரிக்கும் அன்னமாயிருக்கிறாய்...
காமத்திற்கும்...காதலுக்குமான மெல்லிய நூலில் பறந்திருக்கிறாய்...
சின்ன சின்ன விசயங்கள் தான்...அந்த கவிதை முழுவதும்...
அவன் வந்து போவதை கொண்டாடும் உற்சாகம்...
அவன் கன்னக்கதுப்புகளில் காணும் கவிதைகள்...
ஒவ்வொரு கவிதைக்கு தலைப்பு வேண்டுமா எனத்தோன்றியது
ஓ..சிரமப்படும் கவிதைகள் இல்லை எதுவும்...அதுவே வெற்றி தான்..
எங்கே கண்டுபிடித்தாய் என்னை...?
அந்த கவிதைகள் யாவும் தண்ணீராய் இருக்கிறது...
படிப்பவர் பாத்திரமாகி ஏந்திக்கொள்வர்...நான் உள்பட...
அதன் மகரந்த பொடிகளில் வீசும் தேன் வாசத்தை எப்படி அப்படியே எழுத...?
உண்மையில் ...
நான் முழுமையாய் வாசித்ததை அறிவாய் தானே?
எல்லா சந்திப்புகளையும் தூக்கிபோட்டுவிட்டு போகச்சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை...
இப்டி...முழுசாவே வாசித்ததுல...கொஞ்சம் மெல்ட் ஆயிட்டேன்...
நான் இந்த கவிதையை ...காணிக்கையாக்குகிறேன்...
யாருக்கோ...
ஒன்றுமறியாத
பூனைக்குட்டியாய்
அமர்ந்திருந்தாய்..
உன் கண்களிலிருந்து
மீன்கள் துள்ளியது
உணராமல்.
--நன்றி நண்பரே மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கு !!!
4. எனது முகஸ்துதி கவிதை குறித்து திரு சங்கரசுப்ரமண்யன் சாரின் கருத்துக்கள்.
முகஸ்துதி..
சரியாகச் சொன்னீர்கள்
அந்தக்காலத்தில மன்னர்கள் ,சிற்றரசர்களை சுற்றி புலவர்கள் கூட்டம் இருக்கும்
அவர்கள் மன்னனைப்பாடி பரிசில் பெறுவர் என்பதை நாம் அறிவோம்
அதன் நவீன கால வடிவமே தங்கள் கவிதை
அக்காலத்திலும் இக்காலத்திலும் சுயலாபம் கருதி இத்தகைய முகஸ்துதி பிழைப்புவாதிகள் இலக்கியவாதிகளாக பீற்றி திரிந்தார்கள்
அதே சமயத்தில் மக்கள் பிரச்சுனைகளை பேசிய, அதிகாரத்துக்கு மசியாத இலக்கியவாதிகள் அக்காலத்திலும் இக்காலத்திலும் இருக்கிறார்கள்
அவர்கள் மக்கள் இலக்கியம் படைக்கிறவர்கள், கலைஞர்கள்
அவர்கள் இருக்கிற இந்த சமூகத்தை ஓரடியாவது முன்னோக்கி நகர்த்துபவர்கள்
அத்தகைய எழுத்தாளர்கள், கலைஞர்களை கொண்ட அமைப்பாக இயங்குவதை இலக்காக கொண்டு தமுஎகச இயங்குகிறது
உங்களது இலக்கிய திறமையை, உங்களது கலை ஆற்றலை
வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடையாக இருக்க தமுஎகச பெரும் மகிழ்வு அடைகிறது.
-- நன்றி சங்கரசுப்ரமணியன் சார்!
https://honeylaksh.blogspot.com/2012/04/blog-post_05.html
என் பள்ளித் தோழிகளில் ஒருவர் குழுமத்தில் குறிப்பிட்டு இருந்தது இது.
///தேனம்மை மேடம் இன்று உங்கள் சிவப்பு பட்டு கயிறு கதை படித்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்கள் நடை மிகவும் இயல்பாக இருக்கிறது கதை களத்தில் நானும் உடன் இருப்பது போல் இருந்தது அருமை//
-- நன்றி சீதா!
6. பெண்ணின் மரபு (Tamil Edition) Kindle Edition
https://www.amazon.in/dp/B08ZJYKMSB
எனது பெண்ணின் மரபு நூல் பற்றி முதுபெரும் தமிழறிஞர் ஒருவரின் கருத்து !
Congrats Thenammai! பிடியுங்கள்
முதலில் பாராட்டு மலர்களை, மிக நேர்த்தியான அட்டைப் படத்திற்காக! மிக சக்திவாய்ந்த நுண்ணிய கண்கள், ஒளிஓவிய காந்தம்! உள்ளே படித்ததும் மீதி வரும்!
7. https://youtu.be/luaudWoRY0A
இப்பொழுது நேரலையில், சித்திரையின் கலை இரவு
ஒருமணி நேர முடிவில் " குலதெய்வங்களும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும் " என்ற தலைப்பில் என்னுரையும் இடம் பெற்றுள்ளது. நன்றி புதிய தரிசனம் 🙂😊
சித்திரையின் கலை இரவை தவறவிட்டவர்கள், முழுமையாக காண இயலாதவர்கள் மறுபடியும் காண விரும்புபவர்கள் பார்த்து மகிழுங்கள். பார்த்து விட்டு கருத்திடுங்கள்.
8. துண்டு:-
https://honeylaksh.blogspot.com/2016/06/blog-post.html?m=0
எனது துண்டு என்ற கவிதை இந்த இணையங்களிலும் வெளியாகி உள்ளது.
--ஆஸ்த்ரேலியா தமிழ் முரசு, ஈகரை தமிழ்க்களஞ்சியம், தமிழ்த்தோட்டம், ராம்மலர், முதுகுளத்தூர்.காம்.
நன்றி அனைவருக்கும் !!!
உங்களின் படைப்பாக்கங்களுக்குக் கிடைத்த விலைமதிப்பில்லாத எந்த ஒரு அவார்டையும் எதையும் ஈடு செய்யமுடியாத பொக்கிஷங்கள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளசி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!