எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாயமான் ஆன மாரீசன்

மாயமான் ஆன மாரீசன்

தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.

சாட்டர்டே போஸ்ட். தலைமை ஆசிரியை கலைவாணி கூறும் இணையவழி வகுப்பின் இன்னொரு பக்கம்

 காரைக்குடியில் 2016 இல் த.மு.எ.க.ச கூட்டம் ஒன்று மகரிஷி வித்யா மந்திரில் நடைபெற்றது. உறவினரோ நண்பரோ ( ஞாபகமில்லை ) அது பற்றிச் சொன்னதால் அங்கே சென்றேன். அந்த நிகழ்வுக்குச் சென்றபோது கலைவாணி ஒரு நூல் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார். அதுதான் முதல் சந்திப்பு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருக்கிறோம், நேரிலும் முகநூலிலும். அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். அக்கா என்று உரிமையாய்ப் பாசத்தோடு அழைப்பார். 


தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவினரும் இணைந்து நடத்திய கண்காட்சியில் விஞ்ஞானி ரகுபதி விருது பெற என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார் . ( திரு வினைதீர்த்தான் சாரும். இருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். ).

புதன், 25 ஆகஸ்ட், 2021

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

 நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் முப்பது வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

இதில் முப்பத்தியொன்றாவது வீடியோவில் இருந்து நாற்பதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன். இவை முழுக்க முழுக்க யூரோப் ட்ரிப்பில் எடுக்கப்பட்டவை. 


31. BATEAUX MOUCHES, PARIS, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=FD7EnFWqJmI


32. BATEAUX MOUCHES, PARIS, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=s7qqOFUGqcY

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

வசந்த மாளிகையும் புதிய பறவையும் தனவணிகன் இதழில்..

வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-





 1972 இலும் 1964 இலும் வந்த இந்த ரெண்டு படங்களையும் பார்க்காதவங்களே இருக்க முடியாது. 750 நாள் எல்லாம் ஓடின படங்கள். இன்னைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லா கல்லா கட்டாம போகாது. 

இந்த இரண்டு படங்கள் மட்டுமில்ல இன்னும் பல படங்கள் பார்த்து சேலை முந்தானையைப் பிழிந்து தொடைச்சுக்குற அளவுக்கு ஒரே அழுகாச்சியா அழுதிருக்கேன். ஆனா இவை இரண்டும் இன்னிக்குப் பார்த்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிற ஸ்பெஷல் படங்கள்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

விராதன் தும்புரு ஆன கதை

விராதன் தும்புரு ஆன கதை

காமம் குரோதம் லோபம் மதம் மாச்சர்யம் ஆகிய ஐந்து கீழ்நிலைக் குணங்களும் வந்துவிட்டால் ஒரு மனிதன் உயர முடியாதது மட்டுமல்ல. கீழான நிலைக்கும் போய்விடுவான். அப்படி ஒரு கந்தர்வன் தன் கீழ்நிலைக் குணத்தால் அரக்கனானதும் அதன்பின் சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனானதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ராமனும் சீதையும் இலக்குவனும் கைகேயி தயரதனிடம் கேட்டுப் பெற்ற வரத்தினை நிறைவேற்றப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யப் புறப்பட்டனர். அப்படி அவர்கள் சித்திரகூடத்தில் தங்கி அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத் தென்திசை நோக்கிச் சென்றார்கள்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் எதிர்ப்பட்டது. அங்கே அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வரவேற்று உபசரித்தனர். அனுசூயாதேவி தன் ஆபரணங்களை சீதைக்குப் பூட்டி அழகு பார்த்தார். அவர்களிடம் விடைபெற்று ராமனும் இலக்குவனும் சீதையுடன் தண்டகாரண்யம் நோக்கிப் பயணமாயினார்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

வேட்டைச் சமூகமாக இருந்த நாம் வேளாண் சமூகமாக மாறும்போது நமது தெய்வ வழிபாடுகளும் இன்னொரு பரிமாணம் அடைந்தன. நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்திய நாத்திகமும் என்ற நூலில் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சிதான் என்றும் வணிகம், மதம் பேரரசு போன்றவை மக்களின் வழிபாடுகளையும் விருப்பங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாட்டார் தெய்வங்கள், குலதெய்வங்கள் போன்ற சிறுதெய்வ வழிபாட்டை மக்கள் தாங்களாகவே கைக்கொள்ளுகிறார்கள்.

யுத்தங்கள், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மதமாற்றங்கள் போன்றவை நிகழ்ந்தாலும் ஓரிறை வழிபாட்டை அவை வலியுறுத்தினாலும் நம் அடிப்படையான பல தெய்வ வழிபாட்டையே கைக்கொண்டிருக்கிறோம். இனக்குழுக்களாக நாம் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோது நம் இறை நம்பிக்கையையும் எடுத்தே சென்றிருக்கிறோம்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 6

அயனம், ருதுக்கள், பக்ஷ்ம், யுகம், வருஷம், ராசி, ரத்னம். 

அதாவது

தை மீ முதல் ஆனி மீ வரை க்ஷமீ ( க்ஷ - மேற்படி, மீ - மாதங்கள் ) உத்தராயணம்

ஆடி மீ முதல் மார்களி மீ வரை க்ஷமீ தக்ஷணாயனம்  


ருதுக்களாவன.

சித்திரையும் வைகாசியும் வஸந்த ருது

ஆனியும் ஆடியும் கிருஷ்ம ருது

ஆவணியும் புரட்டாசியும்  வருஷ ருது

ஐப்பசியும் கார்த்திகையும் சரத ருது

மார்கழியும் தையும் ஹேமந்த ருது

மாசியும் பங்குனியும் சசி ருது

ஆக மீயஉ க்கு ருதுக்கள் சன


பக்ஷ்மாவன

பூர்வபக்ஷ்ம் சுக்கிலபக்ஷ்ம் - தேய்பிரை

அமரபக்ஷ்ம் கிருஷ்ணபக்ஷ்ம் - வளர்பிரை

அதாவது அமாவாசை கழித்த பிரதமை முதல் பௌர்ணமை வரைக்கும் பூர்வபக்ஷ்மென்றும் சுக்லபக்ஷ்மென்றும் பெயர். 

பௌர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை வரை அமரபக்ஷ்மென்றும் கிருஷ்ணபக்ஷ்மென்றும்பெயர்.  

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

 கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

ராசி நாழிகையாவன, ஒன்பது நவக்கிரகங்கள், தெசா வருசங்களாவன, குளிகை காலமாவன, யோகமாவன, நக்ஷத்திரமாவன, இராகுகாலமாவன, பக்ஷம், திதியாவன, கரணம், வாகனம்.


ராசி நாழிகையாவன

மேஷம் சவ

விருஷபம் சளு

மிதுனம் ருவ

கடகம் ருஇ

சிம்மம் குவ

கன்னி ரு

துலாம் ரு

விருச்சிகம் ருவ

தனுசு ருஇ

மகரம் ருவ

கும்பம் சளு

மீனம் சவ

ஆக ராசி 12 க்கு நாளிகை சுய


ஒன்பது நவக்கிரகங்கள்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

வியாழன்

சுக்ரன்

சனி

றாகு

கேது

ஆக நவக்ரகங்கள் கூ


தெசா வருஷங்களாவன 

சூரியனுக்கு இல சூ

சந்திரனுக்கு இல ய

செவ்வாய்க்கு இல எ

புதனுக்கு இல யஎ

வியாழனுக்கு இல எசு

சுக்கிரனுக்கு இல உய

சனிக்கு இல யகூ

ராகுவுக்கு இல யஅ

கேதுவுக்கு இல எ

அக நவக்கிரகங்கள் 9 க்கு மகாதிசை இல ள உய. 

 


Related Posts Plugin for WordPress, Blogger...