இரும்பு அதிகமாகக் கிடைப்பதால் ஜெர்மனியில் இரும்பிலான சிலைகள் நினைவுச் சின்னங்கள், கலைச் சின்னங்களாக இங்கே நிறுவப்படுகின்றன.
அவற்றில் ஒன்றுதான் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன் என்பது. இதை அடையும் வழியே மிகப் பெரிய மாஜிக்தான். கிட்டே சென்று சேரும் வரை அது ஒரு மலை என்றோ அதன் மேல் இவ்வாறான மல்டிபிள் ஸ்டேர்கேஸ் அமைப்பு இருக்கும் என்றோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
மாலை வேளைகளில் இங்கே நடைப்பயிற்சியாகவும் சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள் மக்கள். செங்குத்தான (நெட்டுக்குத்தான ) ஏற்ற இறக்கங்கள் கொண்ட குறுகலான, முள் செடிகள் நிறைந்த பாதையில் சில இளையவர்கள் சென்றுவிட நாமோ விழி பிதுங்கி சுற்றிச் சுற்றி வந்து ரோட்டுப் பாதையில் மேலேறி வந்தோம்.
வந்தால் கண்ணைக் கட்டும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம்.. இது வடமேற்கு ஜெர்மனியின் பதினைந்தாவது பெரிய நகரமான டூயிஸ்பர்க்கில் இருக்கிறது. ஆங்கர்பர்க் என்னுமிடத்தில் குட்டிக் குன்று இருக்க அதன் மேல் கால்வனைசேஷன் ஸ்டீல் எனப்படும் எஃகிரும்புடன் துத்தநாக கோட்டிங் கலவை கொண்டு தயாரிக்கப்படுவது.
2011 இல் கட்டப்பட்ட இது இருபத்தியொரு மீட்டர் உயரம் கொண்டது. இதை அமைக்க இரண்டு மில்லியன் யூரோ செலவாயிற்றாம். ( ஒரு யூரோ = 72/ ரூ ) . இதை வடிவமைத்தவர்கள் உல்ரிச் கெந்த் & ஹெய்க் மத்தர். (ULRICH GENTH & HEIKE MUTTER )
இது ரோலர் கோஸ்டர் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் விரும்பிச் சுற்றி ஏறி மகிழ்கின்றனர்.
தூரத்தில் இருந்து தெரிவது இதுதான் . மலையே தெரியவில்லை அல்லவா.
இந்த போர்டில் இதன் அமைப்பு பற்றியும் எங்கே ஏறி எங்கே இறங்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.
குன்றின் இறக்கத்தில் பாதை நெடுகிலும் மழைத்தண்ணீர் ஓட கருங்கற்கள் போடப்பட்டு கால்வாய் போல் ஓட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒருவழியாக இதோ வந்துவிட்டது டைகர் டர்ட்டில் மேஜிக் மவுண்டனின் ரோலர் கோஸ்டர்.
எதிரே ரைன் நதியும் அதை ஒட்டிய தொழிற்சாலைகளும் அழகான சூரிய அஸ்தமனமும்.
சுற்றிலும் நெருக்கமான வீடுகள்
சுற்றுப் பாதையும் நகரமும் மிக அழகாகத் தெரிகின்றன அந்தி வெய்யிலில்.
மேலேயிருந்துகொண்டு ஒருத்தர் இறங்கவே மாட்டேன் என்கிறார். எனவே நாம் இங்கே புகைப்படம் எடுத்துக் கொண்டு இறங்க வேண்டியதுதான்.
பார்க்கும்போதே தலையை சுத்துதா :)
ஆகாயம் மேலே..
சரி வாங்க இறங்கிப் போய் அந்தப் பக்கமும் ஏறிப் பார்க்கலாம்.
ஒரு பக்கம் மெல்ல மெல்ல ஏறி இறங்குவது. இன்னொரு பக்கம் சரேலெனெ உயரமா படிகள் அமைக்கப்பட்டிருக்கு.
இங்கேயும் காதலர்களின் மூட நம்பிக்கையாக சில விஷயங்கள். ஹார்ட் போட்ட பூட்டுக்களை இந்த ஸ்டேர்கேஸின் கைப்பிடிகளில் பூட்டி இருக்கின்றார்கள். நான் ஏதோ இதை அமைத்தவர்களே பூட்டுடன் தயாரித்திருப்பார்களோ என நினைத்தேன். ஆனால் மகன் சொன்னான் இது நம்மூரில் மலையில் காதலியின் பெயர் வெட்டுதல், பெயிண்ட் அடித்தல், கோயில்களில் மரங்களில் துணியால் முடிச்சுப் போடுதல் போன்று இங்கேயும் காதலர்கள் தங்கள் காதல் நிறைவேற வேண்டி பூட்டுப் போட்டுப் பூட்டுகின்றார்கள் என்றான். தங்கள் காதல் இந்தப் பூட்டைப் போல பக்காவாக தங்கள் காதலைப் பூட்டி வைக்கும் என நினைக்கின்றார்களோ என்னவோ.
இரவானதும் இந்த மேஜிக் ஸ்டேர்கேஸில் அமைக்கப்பட்ட சின்னச் சின்ன தொடர் விளக்குகள் ஒளிவிடத் தொடங்குகின்றன. மிக அழகான காட்சி அது. நாம் இருட்டுவதற்குள் மலையை விட்டு இறங்கும் எண்ணத்தோடு விரைவாக நடக்கத் தொடங்கினோம்.
தூரத்தே ட்ராம் ஸ்டேஷனில் இருந்து எடுத்தேன். 2013 இல் இந்த டைகர் & டர்ட்டில் மேஜிக் மவுண்டனின் மிகச் சிக்கலான அமைப்புள்ள இந்த ஸ்டேர்கேஸஸ் ஆறாம் இடத்தைப் பெற்றிருப்பதா ஹப்போஸ்ட் என்னும் ப்லாகில் சொல்லி இருக்காங்க .
டூயிஸ்பர்க் போனால் இந்த டைகர் & டர்ட்டில் மேஜிக் மவுண்டனைப் பார்க்காமல் வந்துடாதீங்க. ஆமா இதுக்கு ஏன் புலி & ஆமை மந்திர மலைன்னு பேர் வைச்சாங்களோ தெரில.
ஒருவேளை ஆமைமாதிரி இருக்கும் மலையில் புலி மாதிரி இந்த ஸ்டேர்கேஸ் பத்து வருஷமா தாக்குப்பிடிச்சு உயர்ந்து நிக்குதுன்னோ என்னவோ :)

காற்றில் கிடுகிடுத்த இந்தப் படிகளை மேலே ஏறிய இளையர்கள்
வேறு கத்தி ஆட்டி கிடுகிடுக்க வைத்தார்கள். சடசடவென ஏறுவதும் இறங்குவதும் ஓடுவதுமாக
இருந்தார்கள். நாமும் நடுங்கிக் கொண்டே மேலே ஏறினோம். என் சின்ன மகன்தான் அழைத்துச்
சென்றான். இதோ இந்த உச்சி வளையத்திற்கு வந்தாச்சு.
சுற்றுப் பாதையும் நகரமும் மிக அழகாகத் தெரிகின்றன அந்தி வெய்யிலில்.
இங்கே இந்த செங்குத்து வளையத்தில் அரைப்பங்கைத்
தடுத்து வைத்திருக்கின்றார்கள். வெர்டிகிளாக ஏற முடியாது என்பதால் தடை போட்டு கதவு
போட்டுப் பூட்டி இருக்கின்றார்கள்.
மேலேயிருந்துகொண்டு ஒருத்தர் இறங்கவே மாட்டேன் என்கிறார். எனவே நாம் இங்கே புகைப்படம் எடுத்துக் கொண்டு இறங்க வேண்டியதுதான்.
பார்க்கும்போதே தலையை சுத்துதா :)
ஆகாயம் மேலே..
சரி வாங்க இறங்கிப் போய் அந்தப் பக்கமும் ஏறிப் பார்க்கலாம்.
ஒரு பக்கம் மெல்ல மெல்ல ஏறி இறங்குவது. இன்னொரு பக்கம் சரேலெனெ உயரமா படிகள் அமைக்கப்பட்டிருக்கு.
இங்கேயும் காதலர்களின் மூட நம்பிக்கையாக சில விஷயங்கள். ஹார்ட் போட்ட பூட்டுக்களை இந்த ஸ்டேர்கேஸின் கைப்பிடிகளில் பூட்டி இருக்கின்றார்கள். நான் ஏதோ இதை அமைத்தவர்களே பூட்டுடன் தயாரித்திருப்பார்களோ என நினைத்தேன். ஆனால் மகன் சொன்னான் இது நம்மூரில் மலையில் காதலியின் பெயர் வெட்டுதல், பெயிண்ட் அடித்தல், கோயில்களில் மரங்களில் துணியால் முடிச்சுப் போடுதல் போன்று இங்கேயும் காதலர்கள் தங்கள் காதல் நிறைவேற வேண்டி பூட்டுப் போட்டுப் பூட்டுகின்றார்கள் என்றான். தங்கள் காதல் இந்தப் பூட்டைப் போல பக்காவாக தங்கள் காதலைப் பூட்டி வைக்கும் என நினைக்கின்றார்களோ என்னவோ.
இரவானதும் இந்த மேஜிக் ஸ்டேர்கேஸில் அமைக்கப்பட்ட சின்னச் சின்ன தொடர் விளக்குகள் ஒளிவிடத் தொடங்குகின்றன. மிக அழகான காட்சி அது. நாம் இருட்டுவதற்குள் மலையை விட்டு இறங்கும் எண்ணத்தோடு விரைவாக நடக்கத் தொடங்கினோம்.
தூரத்தே ட்ராம் ஸ்டேஷனில் இருந்து எடுத்தேன். 2013 இல் இந்த டைகர் & டர்ட்டில் மேஜிக் மவுண்டனின் மிகச் சிக்கலான அமைப்புள்ள இந்த ஸ்டேர்கேஸஸ் ஆறாம் இடத்தைப் பெற்றிருப்பதா ஹப்போஸ்ட் என்னும் ப்லாகில் சொல்லி இருக்காங்க .
டூயிஸ்பர்க் போனால் இந்த டைகர் & டர்ட்டில் மேஜிக் மவுண்டனைப் பார்க்காமல் வந்துடாதீங்க. ஆமா இதுக்கு ஏன் புலி & ஆமை மந்திர மலைன்னு பேர் வைச்சாங்களோ தெரில.
ஒருவேளை ஆமைமாதிரி இருக்கும் மலையில் புலி மாதிரி இந்த ஸ்டேர்கேஸ் பத்து வருஷமா தாக்குப்பிடிச்சு உயர்ந்து நிக்குதுன்னோ என்னவோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!