எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 ஏப்ரல், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் அந்த ஐந்து பேருக்கு நன்றி. !

சாட்டர்டே போஸ்டில் இன்று ஒரு வித்யாசமான தகவலுடன் திரு விவிஎஸ் சார் அவர்கள் உஙக்ளை சந்திக்கிறார்கள். 
முன்னோர் அஸ்தியை வைத்து செடியை நட்டுவிடுகிறார்கள். அப்படி வளர்ந்த செடி இது. வருடா வருடம் குடும்பத்தினர் அங்கே சென்று தியானம் செய்கிறாரகள்.

அந்த ஐந்து பேருக்கு நன்றி !

“ஸார்,  நா எல் ஐ சி-ல ஒரு ஜீவன் ஆனந்த் பாலிஸி போட்டேன்.  ஒரு லட்சத்துக்கு.  15 வருஷ டேர்ம்(term).  7200 ரூபா பிரீமியம்.  அடுத்த வருஷம் மெச்சூர் ஆகுது.   மெச்சூரிடீ அமவுண்ட் 140000 ரூபா வரும்ன்னு சொல்றாங்க.  என்ன ஸார் இது அநியாயமா இருக்கு ?  நா கட்டினது ஒரு லட்சத்தி பத்தாயிரம்.  அதுக்கு வெறும் முப்பதாயிரம் ரூபா மட்டும்தான் பெனிஃபிட்டா ?”

ஒரு தொலைக்காட்சி நேரலையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.  கேள்வி என்று கூடச் சொல்ல முடியாது.  புகார்.

இந்தியாவிலேயே, ஏன் இந்த வேர்ல்ட்லேயே ஜீவன் ஆனந்த் பாலிஸி ஒரு பெஸ்ட் பாலிஸி.  (கரகாட்டக்காரன் கவுண்டமணி வாய்ஸில் படிக்கவும்.)


பிறந்தவர் யாவரும் இறந்திடல் இயற்கை.  அவர்களது இறுதிக் கடன் என்பதில் சாங்கியங்கள் பல உண்டு.  மறைந்தவர் சார்ந்த மதம் (அ) இனத்தைப் பொருத்து செலவினங்களும் உண்டு. 

இதைத் தவிர்க்கவும் முடியாது.  தள்ளிப் போடவும் முடியாது. ஏனென்றால் இது உணர்வு சம்பந்தப் பட்டது.  அதிலும் எதிர்பாராத மரணம் வீட்டாரை இக்கட்டில் விட்டு விடும். 

அவசரத்திற்குக் கடன் வாங்கினாலும் கூட குறுகிய காத்தில்  திரும்பத் தர வேண்டும் அல்லவா ?  இல்லையென்றால் இறந்தவரைப் பற்றியும் இகழ்ந்து பேசுவார்களே !

ஜீவன் ஆனந்த் பாலிஸி ஒரு வரப்பிரசாதம்.  பாலிஸிதாரர் 15 அல்லது 20 வருடங்களுக்குப் பணம் கட்டுகிறார்.  அதிக பட்சம் 35 வருடங்கள்.  சாதாரண எண்டெளமென்ட்  பாலிஸியை விட இதில் பிரீமியம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

காப்பீடு முதிர்ந்த உடன் பாலிஸித் தொகையோடு கொஞ்சம் பேனஸ்ஸையும் சேர்த்துத் தந்து விடுவார்கள்.  இதுவும் கூட எல்லா திட்டங்களையும் போலத்தான்.  ஆனால் ஒரு வித்தியாசம்.  தொகையோடு பாலிஸி பத்திரத்தையும் நம்மிடமே தந்து விடுவார்கள்.  நிறுவனத்திற்கும் நமக்கும் உள்ள பந்தம் இன்னமும் முடியவில்லை.   பாலிஸி நாம் பத்திரத்தைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

பாலிஸிதாரரின் வாழ்நாளுக்குப் பிறகு மேலும் ஒரு முறை ரூ 1 லட்சத்தை வாரிசுதாரருக்குக் கொடுப்பார்கள்.  அதாவது பாலிஸித் தொகை இரண்டாம் முறையாக வந்து சேரும்.  ஆக முன்னர் பெற்றது ரூ 1,40,000 (சுமாராக)  இப்போது மீண்டும் ஒரு ரூ 1,00,000.  மொத்தம் ரூ 2,40,000.  இப்ப சொல்லுங்க.  பட் இப்ப இந்த டீலிங் ஒங்களுக்குப் புடிச்சிருக்குமே !

ஒருவரது இறுதி யாத்திரைக்கு அவரே சேமித்து வைக்கிறார்.  நாம் அனைவருமே “செத்தும் கொடுத்த சீதக்காதி”யாக இருக்கலாம்.  வாரிசுகளின் தலையில் அனாவசியச் செலவை ஏற்றாமல்.

நாலு பேருக்கு நன்றி என்றுதான் வழக்கமாகச் சொல்வோம்.  நாலோடு ஐந்தாவதாக எல் ஐ சி-யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.   அந்த ஐந்து பேருக்கு நன்றி !

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...