எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2018

பனகல் பார்க்கில் ஒரு பொடி நடை.

சிலஆண்டுகளுக்கு முன் காலையில்  கட்டாய வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. சென்னை டி நகர் , பி கே ஆரில் தங்கியிருந்தபோது பக்கத்தில் இருக்கும் பனகல் பார்க்கில் வாங்கிங் சென்று வந்தோம். ரொம்பப் புத்துணர்வா இருந்தது. இப்ப எல்லாம் மக்கள் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மூத்த குடிமக்கள் அநேகர் அங்கே கான்வாஸ் ஷூ போட்டு வாக்கிங் போயிட்டு இருந்தாங்க. சிலர் உடற்பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. அங்கே வாக்கிங் செய்த்துட்டு வந்தப்புறம். காலை நேரப் புத்துணர்வு வெகு நேரம் நீடித்தது.

சுமார் ஒன்றேகால் கோடி ரூபாயில் 2009இல் இது புதுப்பிக்கப்பட்டிருக்கு. 3 பக்கமும் எண்ட்ரி ஆகலாம். நாலாபக்கமும் சாலைகள், சொல்லப்போனா ஆறு பக்கம் பெரிய சாலைகள் இருக்கு.

உஸ்மான் ரோடு, வெங்கட்ரமணா சாலை, ஜி என் செட்டி சாலை, தியாகராஜா சாலை, தெற்கு உஸ்மான் ரோடு, துரைசாமி சாலை என்று.

பரபரப்பான சென்னை மாநகரின் நடு மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவை உருவாக்கியவர் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சரா இருந்த பனகல் அரசர். அதுனால அவருக்கு அங்கே சிலை ஒண்ணு எழுப்பி இருக்காங்க. ( விவரத்தைத் தெலுகுல எழுதி இருக்காங்க.)


நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும்.


இவர்தான் இதை உருவாக்கிய பனகல் அரசர்.
நிறைய செடி கொடிகள், பெயர் தெரியாப் பறவைகளின் கானங்கள்.என்று இனிமையாய் இருந்தது மாநகரின் மையம்.


அங்கங்கே ரெஸ்ட் எடுக்க பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட எட்டு ஏக்கரில் அமைஞ்சிருக்காம் இந்தப் பூங்கா !

வெறுங்காலோடு வாக்கிங் போனாலும் அக்யுபங்க்சர் எஃபக்ட் கொடுக்க  அக்கறையோடு உருவாக்கப்பட்ட நடை பாதைகள்.

மழைநீர் வடிய இடம் இருக்கு. அங்கே அவ்வப்போது போர்டுகளில் ஹெல்த் சம்பந்தமா நடக்கும் இலவச மருத்துவ சிகிச்சைகள் பற்றிய அறிவிப்பு, இரத்ததான முகாம் பற்றிய அறிவிப்பு, யோகா , கண்பார்வை பயிற்சிகள் ஆகியன காணக் கிடைத்தன.



வெளியே வந்தா குமரன் சில்க்ஸ்.

அதன் பக்கத்தில் காமதேனு சிலை கொண்ட போத்தீஸ்.
உங்க உடல்நலமும் உங்க ஆரோக்கியமும்தான் உங்களுக்குக் கிடைச்ச காமதேனுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களோ. :)

விருட்சங்களால் காற்றுத் தூய்மை, மழை நீர் சேகரிப்பு, பல்வேறு வகையான பறவைகளுக்குப் புகலிடம்/சரணாலயம்/வாழ்வாதாரம், மக்களின் உடல்நலம் பேணுதல், ஆரோக்கியக் காற்று, நகரின் நெரிசலை மட்டுப்படுத்துதல் ,  ஆகியவற்றை வழங்குவதில் இந்தப் பூங்காக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதை அமைச்ச பனகல் அரசருக்கும் ,பராமரித்து வரும் சென்னை மெட்ரோ கார்ப்பரேஷனுக்கும் ,பாழ்படுத்தாம,  சீர் குலைக்காமப் பயன்படுத்தும் சென்னை மக்களுக்கும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

சென்னை நகரில் இருந்தா ஒரு தரமாவது இந்த பனகல் பார்க்கில் போய் வாக்கிங் போயிட்டு வாங்க. புத்துணர்வா உணர்வீங்க. 

7 கருத்துகள்:

  1. நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்களோ...!

    பதிலளிநீக்கு
  2. பலமுறை இந்தப் பூங்காவின் வழி சென்றிருக்கிறேன். ஆயினும் பூங்காவிற்குள் சென்றதில்லை

    பதிலளிநீக்கு
  3. ஒருமுறையாவது இதன் உள்ளே சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். வர்ச்சுவல் ஆக அழைத்து கொண்டு போய் காட்டி விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சென்னை தி.நகரைப் பற்றி நினைவலைகள். நடேசன் பார்க், ஜீவா பார்க் கூட நன்றாக
    தேனம்மா. மிக நன்றி படங்கள் அருமை. ஏதோ துபாய் பார்க் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. தங்களுடைய கட்டுரைகளைப் பேச்சு நடையில் எழுதத்தொடங்கியது ஏன் ?. உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இளம் வாசகர்களுக்குத் தவறான முன்னுதாரணத்தைத் தருவது வருத்தமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஆம் ஸ்ரீராம்

    ஒரு முறை போய் வாருங்கள் ஜெயக்குமார் சகோ :)

    நன்றி டிடிசகோ

    நன்றி பானுமதி

    நன்றி வல்லிம்மா

    ஆம் ஆருர் பாஸ்கர் சகோ. என்னவோ அப்படியே பழகிவிட்டது :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...