எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.




Reviews.-- Manavalan.A.

"Sadhanai Arasigal" - An initiative to Motivate all Ladies through the Success story of other Ladies in various field .

Posted by A. Manavalan, Ahmedabad. on 29th Jan 2012

The writer did a case study on 17 ladies personalities who have achieved something in their life through their tireless efforts without any facilitator for them by themselves with their own courage, hard work, passion, positive actions, never giving up the desire at any stage of their life, belief in themselves etc.

The writer's book is really a positive thinking in writing the book itself to motivate other ladies to start something of their own with confidence with the tips given in the book.

I recommend this book worth reading by all especially the beginners and the young ones who wants to do really something positively for themselves and to the society.

   -- பதிவர் நூல்கள்

   -- வாழ்க்கை

   -- சுயமுன்னேற்றம்

   -- 2011-12 வெளியீடுகள்

  -- Buy Online Tamil Books

*****************************

ங்கா



http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D



தேனம்மை லெக்‌ஷ்மணனின் குட்டீஷ்களைப் பற்றிய குட்டி குட்டிக் கவிதைகள் அடங்கிய தொகுப்புதான் “ங்கா..” , முழுவதுவது வண்ணத்தாளில் அழகான குழந்தையின் படங்களும், நச்சென்று  10 நிமிடத்தில் படித்து முடிக்கும்படியான தொகுப்பு முழுதும்,  நான்குவரி கவிதைகளாக அனைத்து பக்கங்களும் மிக நேர்த்தியாக மின்னுகிறது.

படிக்க நேரமில்லாத
புத்தகம் போல
சிதறிக் கிடந்தன
குழந்தையின்
பதில் கிடைக்காத
கேள்விகள்.



விளையாட்டாய்

நீ உடைத்த

பொருளெல்லாம்

நினைவுச்

சின்னமாகிறது

எனக்கு!

 இப்படி தொகுப்பு முழுதும் உள்ள கவிதைகளை உதாரணமாக சொல்லலாம்.

   -- பதிவர் நூல்கள்ங்கா..

   -- கவிதைகள்ங்கா..

   -- 2011-12 வெளியீடுகள்ங்கா..

  -- Buy Online Tamil Booksங்கா..

******************************

அன்ன பட்சி.



http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795&search=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

தேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே  குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல.
சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவற்றுக்கு அமைந்து விடுகிறது. அன்ன பட்சியிலிருக்கும் அருமையான  சொல்லாட்சிகளும்  பொருள் நுட்பங்களும் நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய் உறைந்திருக்கும்.


· எம்.ஏ.சுசீலா


************************************

அன்ன பட்சி




http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

அன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.

அன்னபட்சியில் இருந்து பால் என்று தனித்துப்பிரிக்கத் தண்ணீர் ஏதும் கலக்கப்படவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, விளையாட்டு பொம்மை கவிதையில், குழந்தையிடம் பேசும் பொம்மை, தூங்கப் படைக்கப்படாத நான் உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் நீ எழுந்தவுடன் திரும்ப விளையாட என்ற வரிகளும், விவ ‘சாயம்’ எனும் கவிதையில், ரசாயனங்களால் பாழ்பட்டுப் போன பூமி பற்றி வரும் கீழ்கண்ட வரிகளான “குடிச்சுக் குடல் அழிஞ்சு புண்ணாகிக் கிடக்கு சுரப்புத் தட்டிப்போய் வெடிச்ச முலைக் காம்பாட்டம் எனக்குப் பாலூட்டிய பூமி’ என்ற வரிகளா கட்டும் அன்னபட்சியின் சிறப்புக்கான அடையாளங்கள்.

   -- கவிதைகள்அன்ன பட்சி

   -- 2014 வெளியீடுகள்அன்ன பட்சி.


***********************************************

பெண் பூக்கள்.

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

/////பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..

 
தலைப்பை ஆராய்வதை விட்டு விடுவோம்.  புத்தகம் ஒவ்வொரு பூவைப் பற்றியும் ஒரு கவிதை சொல்கிறது.  இது இந்தப் பதிப்பகத்தின் ஆறாவது புத்தகம்.  தேனம்மைக்கு இது நாலாவது புத்தகம் என்கிறது புள்ளிவிவரம். பரவசப்பூ, வெட்கப்பூ, காதல் பூ, எமாற்றப்பூ, ஏமாற்றும் பூ என்று என பல்வேறு உணர்வுகளில் கவிதைகள்  --- எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம். .////

புதிய தரிசனம் பதிப்பகம்.

விலை ரூ . 60.


8 கருத்துகள்:

  1. டிஸ்கவரியில் தோன்றியுள்ள சாதனை அரசி நம் ஹனி மேடம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தளத்திற்கு முதன் முதலாய் வந்திருக்கிறேன்...
    முந்தைய பதிவுகள் ஏதும் படிக்கவில்லை.
    பின்னர் படிக்கிறேன்.
    இந்த பதிவை படித்தேன்
    அருமை வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் சகோ!
    தங்களின் பங்களிப்பு எங்களின் இதழுக்கும் தேவை. தங்களை தொடர்பு கொள்ள முடியாததால் இங்கே தெரிவிக்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது தங்கள் அலைபேசி என்னை அதில் தெரிவியுங்கள். மிக்க நன்றி!

    senthil.msp@gmail.com

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜோசப்

    நன்றி செந்தில்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...