எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 செப்டம்பர், 2015

பட்டு நெசவில் பட்டர்ஃப்ளை டிசைன்.

கலர் வேண்டாம், பென்சில் வேண்டாம், க்ரேயான்ஸ், ஸ்கெட்ச், ( இந்தியன் இங்க் ) பேனா, ( போஸ்டர்கலர், வாட்டர் கலர், ஆயில் ) பெயிண்ட்ஸ், எதுவுமே வேண்டாம்., ஏன் ப்ரஷுமே வேண்டாம்.  நீங்க மவுஸோட அமர்ந்து மவுஸை இயக்கினா போதும். ஓவிய டிசைன்கள் உருப்பெற ஆரம்பிச்சிடும். ஓரிரு தரம் கசா முசா ஆனாலும் மூன்றாவதா வரையும்போது பிடிபட்டுடும். அப்புறம் என்ன நீங்கதான் பிகாஸோ, நீங்கதான் மாடர்ன் ரவிவர்மா.

பட்டு நூல் டிசைன் மாதிரி இந்த ஓவியங்கள் உருவாகுது. கலர்ஃபுல்லா பார்க்கவே அற்புதம். நாமதான் போட்டமான்னு திகைக்க வைக்குது.

முதல் மூன்றிலும் சிறிது சிவன் டச். ஏன்னா உடுக்கை சூலம், நாகம்னு ஏதேதோ ஞாபகம் வந்தது.

இதுல திரிசூலம் போட நினைச்சேன். ( COSMIC DANCER  - THEME )
 

இதுல சூலம் நீலமாச்சு :) மனிதருக்குள்ளே இருக்க ஆன்ம சக்தி போல ஒரு வெளிச்சம். நீலச் சூரியன் :) ஆரஞ்சு பர்ப்பிள் வெளிச்சம். :)


இதுதான் ஒஹ்ஹ் பட்டர்ஃப்ளை .. பட்டர்ஃப்ளை. ஒரு முடிவோட வரைஞ்சேன். இதைக் கொண்டுவந்தே ஆகணும்னு :)  இணைப்பை அனுப்பிய என் சின்னப்பையனே சொல்லிட்டான் அம்மா பட்டர்ஃப்ளை சூப்பர்னு. அப்புறம் வேறென்ன வேண்டும். :) சேமிக்கும்போது படம் கட் ஆகி சேவ் ஆகுது. அதைப்  பிறிதொருநாள் பார்க்கணும் :)

ஒரு முறை என் சின்னப் பையன் இந்த லிங்கை அனுப்பிச்சான். அன்னிக்கு ஒரு மணி நேரம் இதுலேயே பொழுதைக் கழிச்சிட்டேன். ஆனா கடைசியா நிறைவா இருந்தது. நீங்களும் பொழுது போகலைன்னா இந்த லிங்கை க்ளிச் செய்து வரைஞ்சு பாருங்க. :) நிறங்களையும் தேர்ந்தெடுக்கலாம். அதுலேயே நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு அதையும் உபயோகப்படுத்துங்க. வரைய வரைய கத்துக்கலாம்.

இதை வழங்கி இருக்கவங்க இவங்கதான்.ரொம்ப ரொம்ப ஈஸி. வரைஞ்சு பழகலாம் வாங்க :)

http://weavesilk.com/


3 கருத்துகள்:

  1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. முயற்சிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ. முயற்சி செய்தீங்களா. நல்லா வந்ததா.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...