எனது நூல்கள்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஸ்வயம்.:- 2ஸ்வயம்.:-
மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு

விசிலடிக்கும்
மூங்கில் மரங்கள்
பக்கம் ஓடி
மடுவுக்குள்
உடல் கலக்கி
கந்தைத் துணிகளை
முகர்ந்து முகர்ந்து

மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு.

மேய்ச்சல் மறந்து
குளம்புகள் தீய
உடலை அரிக்கும்
உண்ணிகள் மறந்து

மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு.

கொட்டிலுக்குள்
வட்டிலுக்கருகில்
பனைபிரிந்த
பழைய குடிசையோரம்
புற்களுக்குள்
வாய்க்கால் கரைகளில்
பால்பாத்திரம் உதைத்து
மரப்பசுவைப் பிரித்து

மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு.

-- 84 ஆம் வருட டைரி.

2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை ஆனால் ஏதோ ஒரு சிறு வருத்தம் கலந்த தேடல் போல்!!!?

Thenammai Lakshmanan சொன்னது…

கடவுளைத் தேடும் தேடல்தான் துளசி சகோ & கீத்ஸ் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...