எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 நவம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !



முகநூலில் நட்பாகி அம்மா என்று அழைப்பவர் அருண் கருப்பையா. இவர் ஆஃப்கானிஸ்தான் மஸாரில் செஃபாக இருக்கிறார். குழந்தை போன்று நல்ல சிரித்த முகம். மனித நேயப் பகிர்வுகள்தான் அவர் பக்கம் முழுதும் இருக்கும். அதேபோல மருத்துவம், தாய் மீது அன்பும் பெற்றோரிடம் பாசம், குழந்தைத் தொழிலாளி எதிர்ப்பு, வேலைக்காரர்களை அடிமை போல் வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு உள்ள ஸ்டேடஸ்களைப் பகிர்ந்து இருப்பார். 

ஆஃப்கானிஸ்தானா.... அங்கே இருப்பது ரிஸ்க் இல்லையா .. அதோடு எப்படி வேலை செய்ய முடிகிறது என்று இன்பாக்ஸில் கேட்டிருந்தேன். பதில்களைப் படித்ததும் ஆடிப் போய்விட்டேன். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து பணம் சம்பாதிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்லவே. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல அருண் சொல்லிச் சென்றிருந்தாலும் பட்ட சிரமங்கள், தொடர் முயற்சி ஆகியன மிகவும் யோசிக்க வைத்தன. அவரிடம் கேட்ட கேள்வி இதுதான்  

/// ஆஃப்கானிஸ்தானில் செஃபாக இருக்கும் உங்கள் அனுபவங்கள், மற்றும் கேக் செய்ததில் ஏற்பட்ட வித்யாச அனுபவங்களை என்னுடைய வலைத்தளம் “சும்மா” வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்ளுங்கள். ///

வணக்கம் அம்மா என் அனுபவங்கள் ரொம்பக் கஷ்டமானது. இருந்தாலும் ரிஸ்க் எடுத்துத்தான் செய்கிறேன். என்னுடைய முழுப் பெயர் கே அருண்ராஜ். சொந்த ஊர் திருச்சியிலிருந்து 27 கிமீ தூரத்தில் உள்ள புலிவலம். நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் அங்கேதான். 


ப்ளஸ்டூ முடித்து கேட்டரிங் காலேஜில் 2004 – 20005 ஒரு வருடம் படித்தேன். ( ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங் டெக்னாலஜி கவர்ன்மெண்ட்).


காலேஜ் திருச்சியில் உள்ள துவாக்குடியில் இருக்கு. அப்பா பெயர் கருப்பையா. அம்மா பெயர் செல்லப் பாப்பு. ஜூன் 6 . 86 இல் பிறந்தேன். ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்க வைச்சாங்க. எங்க அப்பா அம்மா, ஒரு தம்பி பேர் கோபிநாத். எம் ஏ முடிச்சிட்டு இருக்கார். சென்னையில்தான் வேலை செய்கிறார். 2 அக்கா இருக்காங்க. ஒரு அக்காவுக்கு ஊட்டில கல்யாணம் ஆயிடுச்சு. இன்னொரு அக்காவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இருவருக்கும் குழந்தைகள் இருக்காங்க.




நான்முதலில் 2004 டிசம்பரில் உடுமலைப் பேட்டையில் உள்ள ராயல் பேக்கரியில் ட்ரெயினிங்கா வேலை பார்த்தேன். ஒரு ரெண்டு மாசம்தான் அப்புறம் ஏப்ரல் 2005 இல் சென்னையில் கேக் வேர்ல்ட் பேக்கரியில் பேஸ்ட்ரி அசிஸ்டென்டா வேலை செய்தேன். இங்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். 13 மணி நேரம் வேலை வாங்குவார்கள். பாத்திரம் விளக்க விடுவார்கள். தரைதுடைக்க வேண்டும். டேபிள் எல்லாம் க்ளீன் பண்ண சொல்வாங்க. வேலை மட்டும் கற்றுத் தர மாட்டாங்க. அடிப்பாங்க. கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க. அப்புறம் எல்லாம் வேலை செய்து சாப்பிட்டும் சாப்பிடாமயும் நேரம் ஓடிடும். ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் சம்பளம் கட் பண்ணுவாங்க.

அப்புறம் அண்ணா நகர் வெஸ்ட் ல 2006 இல் வேலை பார்த்து கொஞ்சம் கற்றுக் கொண்டேன். அப்புறம் 2007 இல் சரவண பவன் பேக்கரியில் இருந்து 6 மாதம் வேலை பார்த்தேன்.

அங்கேயெல்லாம் கஷ்டப்பட்டு வேலை கற்றுக் கொண்டு 2008 ல மஹாராஷ்ட்ரா நாக்பூர்ல ஹாட் ப்ரெட் பேக்கரியில் முதன் முதலில் கேக் மாஸ்டரா வேலைக்கு சேர்ந்தேன். 6000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். படிப்படியா கற்றுக் கொண்டு பெரிய பெரிய கேக் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.


சாக்லெட் கேக், வனிலா கேக் பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்ச் கேக் வகைகள், மௌஸீ, டெசர்ட், புட்டிங், எல்லாம் கற்றுக்கொண்டேன். ஸ்வீட் ப்ரெட், சால்ட் ப்ரெட், ஃப்ரூட் ப்ரெட், ஃபோஸியா ஃப்ரெட், பன் வகைகள், பர்கர், பிஸ்ஸா, எல்லாம் கற்றுக் கொண்டேன்.


அப்புறம் 2009 இல் முதன் முதலில் மும்பைக்குப் போனேன். அங்கே என் ஃப்ரெண்ட் மூலமா ஒரு பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைத்தது. இண்டர்வியூ எடுத்து தேர்ந்தெடுத்தாங்க. இங்கிலீஷ்தான் மெயின். இங்கிலீஷ் தெரியலைன்னா ரொம்ப கஷ்டம்,. எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதை வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். ஒரு வருடம் முடிந்தது, அப்புறம் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலீஷ் பேச ஆரம்பித்தேன்.

வேலைக்கு போயிக்கிட்டே எங்காவது கம்பெனிகள் வெளிநாட்டுக்கு  ஆட்  ( விளம்பரம் ) போட்டுருக்காங்களான்னு தேட வேண்டும். ரொம்ப கஷ்டப்பட்டு அங்கேயும் இங்கேயும் மொழி தெரியாத் ஊர்ல ஓடி ஓடி கம்பெனி இண்டர்வியூ போவோம். அங்கே போய் பார்த்தா நம்மள மாதிரி 200 க்கு மேல் இருப்பாங்க. இண்டர்வியூவுக்காக காத்திருப்பாங்க. அதும் தாண்டி இண்டர்வியூ காலையில் ஆரம்பிச்சு சாயங்காலம் 6 மணிக்குத்தான் முடியும். சாப்பாடு இல்லாம ஒண்ணும் இல்லாம உக்கார்ந்து இருந்து வெயிட் பண்ணி இண்டர்வியூ போனா இங்கிலீஷ் சரியா தெரியலைன்னு வெளில போன்னு சொல்லி கொஞ்சம் நல்லா இங்கிலீஷ் பேச கற்றுக் கொண்டு வா என்பார்கள். இது மாதிரி நிறைய இண்டர்வியூ ல ஃபெயில் ஆகியிருக்கேன். மனசு உடைந்து ஏண்டா இதைப் படித்தோம் என்று கூடத் தோன்றும். பட் இருந்தாலும் மனசத் தேற்றிக் கொண்டு நம்ம குடும்பத்தை நினைத்து அம்மா அப்பாவை நினைத்துக் கஷ்டப்பட்டு பொறுத்துக்கிட்டு, ஒரு கம்பெனியில் செலக்ட் ஆனேன்.

அதுதான் ஆஃப்கானிஸ்தான் சுப்ரீம் க்ளோபல் சர்வீஸ். 2010 ஜூன்ல 10 ஆம் தேதி மும்பையில் ஃப்ளைட். ஏறிப் போனேன். முதன் முதலா ஃப்ளைட் ல ஏறயில பயத்துல கை கால் எல்லாம் நடுங்குது. கேள்வி மேல கேள்வி கேப்பாங்க. ஏர்போர்ட்ல. எங்க போறே, என்ன பண்றே, அப்பிடின்னு. நாம இந்த மாதிரி சொல்லவேண்டும். இந்த கம்பெனியில் செலக்ட் ஆகி போறேன் என்று. அவங்க ஆஃப்கானிஸ்தான் கண்டிஷனெல்லாம் தெரியுமா, சேஃப்டி கிடையாதுல அப்புறம் ஏன் போறீங்கன்னு கேப்பாங்க.

ஹிந்தி லாங்க்வேஜில் கேப்பாங்க. ஹிந்தி கொஞ்சம் தெரியும். அதை வைத்து சமாளித்துப் பேச வேண்டும். நான் மட்டும் இல்ல எல்லா நாட்டுக்காரர்களும் வேலைக்கு வருவாங்க. அங்க அப்புறம் ஒரு வழியா ஏர்போர்ட்ல இருந்து துபாய் போனோம்.

துபாய்ல ரெண்டு நாள் ஸ்டே. மெடிக்கல் போயிட்டு ஆஃப்கன் ஃப்ளைட் ஏறணும். அரைவல் இன் காபூல் அப்புறம் அங்கே போனா ஏண்டா போனோம் என்று இருந்தது. க்ளைமேட் எல்லாம் செட்டாகல. ஒரே பாலைவனம். மலை ப்ரதேசத்துல வேற மாசம் பத்துத்தடவை பாம் வெடித்துக் கொண்டே இருக்கும்.

தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கன் ஆர்மிக்கும் சண்டை நடந்துகொண்டேதான் இருக்கும். எங்களுக்கும் சேஃப்டி கொடுப்பாங்க. பட் இருந்தாலும் பயம் இருந்துகொண்டே இருக்கும். எப்ப பாம் விழுமோ என்று. 13 மணி நேரம் வேலை பார்க்கணும். பாலைவனத்துல ஒரு டெண்ட் மாதிரி அடித்துக் கொடுத்துருவாங்க. அதுலதான் எல்லாம் தூங்கணும். கிட்டத்தட்ட ஒரு டெண்ட்ல 800 பேர் தூங்குவோம். தமிழர்கள், பெங்காலி, ஸ்ரீலங்காகாரர்கள். இதில் இந்தியன் பீபிள்தான் அதிகம் இருப்பார்கள்.


அமெரிக்கன் எல்லாம் தனியா டெண்ட் அடித்துத் தூங்குவார்கள். ஒரு பெரிய கேம்ப் மாதிரி செய்து இருப்பாங்க. அப்புறம் ஆந்தி காற்று அதிகம் அடிக்கும். என்ன பண்றதுன்னு தெரியாம போவோம் வேலைக்கு. டிசம்பர் மாதத்தில் கூலிங் அதிகமா இருக்கும். கை கால் எல்லாம் வெடிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்ப்போம். நாங்க எல்லாம் ஒரு பெரிய டெண்ட் மண்டபம் மாதிரி பண்ணி அதுல சமைக்கணும். அவங்களுக்கும் ரெடி பண்ணிக் கொடுக்க வேண்டும். அவங்க எல்லாம் மெனு பார்த்துட்டுத்தான் சாப்பிடுவாங்க. நிறைய டிஷஸ் ஸ்பெஷலா பண்ணிக் கொடுப்போம்.


தனித் தனி டிபார்ட்மெண்ட் இருக்கு. நான் பேக்கரி கேக் வகைகள் செய்வேன். எனக்கு இரண்டு அஸிஸ்டெண்ட் கொடுப்பார்கள். கிச்சனுக்கு தனித்தனியா இருப்பார்கள். காய்கறி கட் பண்ணத் தனியா இருப்பார்கள். அவர்கள் மொத்தம் 17,000 பேர். அமெரிக்கன் மட்டும். லைன்ல வந்து வாங்கி சாப்பிடுவாங்க. அது போக வேற நாட்டுக்காரர்களும் வருவாங்க. பிலிப்பைனீஸ், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஆஃப்ரிக்கா, நைஜீரியா, ப்ரிட்டிஷ், எல்லாம் இருப்பாங்க. எல்லாரும் வந்து சாப்பிடுவாங்க. டெய்லியும் நிறைய சமைப்பார்கள். நிறைய வேஸ்டேஜ் ஆகும். ஆர்மி லேடீஸ் இருப்பாங்க.

அப்பிடி இப்பிடின்னும் கஷ்டத்துல வேலை பார்த்துக்கிட்டுத்தான் இருந்தோம். சில நேரம் தீவிரவாதிகள் வேற நாட்டுக்காரர்களைக்கடத்திக்கொண்டு போய் கழுத்தையெல்லாம் அறுத்துருவாங்க.  இந்த மாதிரி நிறைய நாட்டுக்காரர்கள் அவங்க கழுத்த அறுத்திருக்காங்க. அதுனால ரொம்ப சேஃப்டியா இருப்போம்

ஒரு தடவை லீவுக்கு ஊருக்கு வந்து மறுபடியும் போய் வேலை பார்த்துட்டு கொஞ்சம் பணம் சேர்த்து வீடு கட்ட ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் என்னோட காண்ட்ராக்ட் முடிந்தது. அதுக்கு அப்புறம் வந்துட்டு மறுபடியும் இன்னொரு கம்பெனியில் வேலை கிடைத்து மறுபடியும் டெல்லி போய் கம்பெனிய பார்த்துட்டு டெல்லி ஏர்போர்ட்ல இருந்து ஆஃப்கானிஸ்தான் மஸார் என்று ஒரு ஸ்டேட்டில் ஸாலிபோர்ட் க்ளோபல் கம்பெனி என்று ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ அதுலதான் வேலை செய்கிறேன். மாதம் 60000 ரூ சம்பளம். இங்கே வேலை செய்றேன். ஆனா இந்தக் கம்பெனியும் காண்ட்ராக்ட் முடியப்போகுது. மறுபடியும் மும்பைதான் போகணும்.


எங்க அம்மா அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டுக் கடன் வாங்கிப் படிக்க வைச்சாங்க. சோறு தண்ணி இல்லாம ஸ்கூலுக்குப் போவேன். காலேஜ் போகையில் காசு இல்லாம அம்மா அடுத்தவங்ககிட்ட வாங்கி கொடுப்பாங்க. ஆனா எனக்கு வீடு கட்டிட்டேன். கொஞ்சம் கீழே இருந்து மேலே வந்துருக்கோம்.


////////HOW TO MAKE CAKE .SATHARANA CAKE SEIYA ,FLARE,SUGAR,BAKING POWDER,CAKE GEL AND EGG .ETHU 5 PORULUM oil, one kg cake ku ,egg,30 eduthu oru bowli udaika vendum,900 gram sugar eduthu kola vendum 2um mikes panni nanraga perya cake mixeril pottu michenai otta armpika vendum nanraga karaitha piraku 10 minities odittu then cake gel maitha ellam pottu mikes panna vendum,more 15 mintues fastta mikes panna vendum,then athai eduthu,oru satharana china mould ,caketrail otthi samam panni oven min mika perya power aduppil v aika vendum 40 mintes il ready agividum,athai eduthu frigeil vaithu cool pannitu athai 2 aga aruthu layer pannittu creame apply pannittu ungaluku enna flaver cake vendumo antha flaver fruts edthu crèmeil mikies panni apply pana vendum,then athai correcta cut panniseithu,crème pottu decresion seithu kodukka vendumcusttamerku enna flaver vendumo ,ella ethavathu toys varyavendumo.and drawing panni punching pannikodu kalam oru resipil neraiya model cake seiyalam ,orange cake ,carrot cake banana cake,chocolate ckae triple item vagaigal, cup cake periya periya festival cake ,ethavathu fungsion vantha periya cake seiven pudding item, mouse item,pie item apple pie blue berry,cheery streaberry pie ellam seivencoppler item seiven.croissants bread seiven ,dough nut,cinnamon roll,neai ya item eruku cake decresion mattum 200 ku mel desine eruku but enaku 20 desien mattum thnerium///



/// sweet bread,1kg maitha 200 gram sugar,yeast 50 gram.salt,one teaspoon also hot water 400 gram,milk also everthing mix to big bowl .after put bread mould rest to 45 minitues

then put the oven, 250 degree cellsious hot time 45 mintes///

///ethu ,apple pie pecan pie ,power aduppula ulla vaikren ,one hour agum,///



Arun Karuppiah////

இந்த டிபார்ட்மெண்டில் கத்துக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. பட் நானே இன்னும் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. உங்ககிட்ட நேரில் பேசினால் எல்லாம் புரியவைத்து விடுவேன். ஆனால் சாட்டில் முடியாது. J

இதை முதலில் ட்ராயிங் பண்ணிட்டு அதன் பின்  க்ரீம் பேஸ்ட் பஞ்சிங் பண்ணனும். ஆறு மணி நேரம் ஆகும் அம்மா. ! இந்த யூ எஸ் ஃப்ளாக் கேக்கு( கழுகு ) க்குத்தான் எம்ப்ளாயி ஆஃப் த மன்த் அவார்டு கிடைச்சுது எனக்கு. !


டிஸ்கி:- அஹா வாழ்த்துகள் தம்பி. எவ்வளவு அபாயகரமான இடத்தில் உயிரையும் பணயம் வைத்துப் பணி புரிகிறீர்கள் அருண். நீங்கள் கூறிய விஷயங்களைப் படித்து ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பத்ரமாய் இருக்கவேண்டுமே என்று பதைக்கிறது மனது. 

இந்த அபாயங்களிலும் மிகவும் ரசனையோடு பணி செய்யும் உங்களைப் பாராட்டுகிறேன் அருண். செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்கும் உங்களை நிச்சயம் கடவுள் பாதுகாப்பார். 

உலகத்தில் எவ்ளோ விஷயம் இருக்கு இன்னும் தெரிந்துகொள்ள.. நீங்க விஷய ஞானத்தோடு அதைக் கலையாகவும் வெளிப்படுத்துவது அழகு தம்பி. ஆர்ட்டிஸ்டிக் ஹாண்ட். அடுத்து இதுபோல் சிக்கல்கள் இல்லாத நல்ல நாட்டில் பணி கிடைக்கப்பெற்று  இன்னும் பல சிறப்புகள்  பெற்று அமோகமாக இருக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு. 


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.

10 கருத்துகள்:

  1. மனம் நெகிழ்ந்தது. புகைப்படத்தில் அவர் தாயின் கண்ணீர், சோகம் பார்த்து கண் கலங்கியது.

    வாழ்த்துகள் அருண். கஷ்டப்பட்டவர்கள் நஷ்டப்பட்டதில்லை. மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும் என்று உங்கள் சிரமங்கள் சீக்கிரம் குறைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஸ்ரீராம் எனக்கும் மனம் கலங்கிவிட்டது. அந்தப் புகைப்படம் பார்த்ததும். அவர் அனுப்பிய தகவல்களைப் படித்ததும் அதை விட அதிகமாக.. நல்வாக்கு சொன்னீர்கள் அருணுக்கு. நன்றி ஸ்ரீராம்.

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. பதிவில் சகோ.அருண் கூறிய தகவல்கள் மனதை கனக்கச்செய்துவிட்டது. எவ்வளவு தூரம் மிக வும் ஒரு கஷ்டமான சூழலில் வேலையை செய்கின்றார். நிச்சயம் கடவுள் அவருடன் கூட துணையிருந்து, ஒவ்வொரு நொடியும் காப்பார். இவ்வளவு கஷ்டப்பட்டவருக்கு இனிமேல் நல்லகாலம் கண்டிப்பா வரும். வாழ்த்துக்கள் சகோ அருண். அவரின் அம்மாவின் கண்ணீர் என் இதயம் கனத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. அக்கா,
    அபுதாபியில் வேலை செய்யவே பிடிக்கலை... அருண் ஆப்கானிஸ்தானில்... எத்தனை கஷ்டங்களை மனிதர் கடந்து வந்திருந்தால் இப்படிப்பட்ட பூமிக்கு வேலைக்குப் போகும் முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

    தினம் தினம் உயிர் பயத்தோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும் போதே மனசு கலங்குகிறது.

    பதிலளிநீக்கு
  7. ஊக்கம் அளிக்கும் பதிவு , நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. ஆம் படிக்கும்போதே கண் கசிந்தது . கருத்துக்கு நன்றி ப்ரிய சகி அம்மு

    ஆம் குமார். ரிஸ்க்கான வேலைதான்.. ஹ்ம்ம்

    நன்றி ராம்ஜி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. Nalla future irukku Arun.. Keep going 😍.. Aandavan namma pakkam nu ninaikkiratha Vida, Naama Aandavan pakkam irukkirom nu velai seivom.. Nallathe varum.. Take care😍 Good luck...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...