எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 செப்டம்பர், 2011

கழுமரம்.

கழுமரம்.:-
**************

பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி

முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்

வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்

தாமதத்துக்கு ஃபைன் கட்டலும்
கடந்த கணனி யுகத்தில்
கண நேர சந்தேகக் கணை
ஆசிரியர் பாய்ச்ச

கருகியோ, மருந்திலோ
கயிற்றிலோ ஓய்கிறது
கழுவிலேற்றப்பட்ட உயிர்..

டிஸ்கி:- இந்தக் கவிதை வெள்ளி 11. மார்ச் 2011 கீற்றுவில் வெளியானது.:)

12 கருத்துகள்:

  1. எல்லாம் மாறியும், ஏ(இ)தோ ஒன்று மாறாமல் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. மறக்க முடியாத அந்த நாட்களை நினைவு கூறும் அருமையான பதிவு.

    //கண நேர சந்தேகக் கணை//
    சமயத்தில் உயிரை வாங்கிவிடுவதென்னவோ வருத்தப்பட வேண்டிய உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  3. வருத்தப்பட வைக்கும் விஷயங்கள்...

    அருமையான கவிதை, கலங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வருத்தம் தருகிற உண்மை. நம் காலத்தை நினைக்காமலும் இருக்க முடியவில்லை இந்த செய்திகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும். நல்ல கவிதை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்.எப்படி பிரம்புகளும் சாக்பீசுகளும் ஓய்ந்தனவோ அப்படி
    உயிர்களின் மனோ பலமும் ஓய்ந்துதான் கிடக்கிறது.
    அதை தூசு தட்டி உயிர்த்தெழச் செய்வது
    பெற்றோரின் கடமை.ஒரு வேளை அதுவும்தான் ஓய்ந்திருக்கின்றதோ??

    பதிலளிநீக்கு
  6. //கண நேர சந்தேகக் கணை//

    கண நேர கோபத்தைக்கூடத் தாங்கிக் கொள்ளமுடியாத இளைய தலைமுறையின் மன உறுதியில் தவறா; கண நேரக் கோபத்திலேயே உயிரைப் போக்கும் விதமாய்க் கூறு போடும் ஆசிரியர்களின் மனப்போக்கில் தவறா??!!

    பதிலளிநீக்கு
  7. உண்மை ரமேஷ்.,

    நன்றி பனித்துளி சங்கர்.,

    நன்றி கோபால் சார்

    நன்றி சாந்தி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராஜி

    நன்றி குமார்

    நன்றி துபாய் ராஜா

    நன்றி ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...