எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஆனந்த விகடன் சொல்வனத்தில் ..என் பொம்மை உலகம்...






தோழி பொம்மை..:_
*****************************
ஒவ்வொருவரிடமும்
இருக்கிறது
ஒரு கரடி பொம்மையோ
தன்னைச் செதுக்கும்


பெண் பொம்மையோ
ஒரு நெளிந்து நிற்கும்
தோழி பொம்மையோ..

சில பொம்மைகள்
கைகூட்டி முழங்கால் மடித்து
கண் சாய்த்து அமர்ந்து

ஸ்நேகிதனை
கண் கொட்டாமல்
அல்லும் பகலும்
கண்ணாடிக் கவருக்குள்ளிருந்து
பார்த்தபடி

அவர்கள் தன்னோடு்
தன் கவலைகளோடு
பேசிக் கொள்ளும் போது
காதுகள் கொடுத்து

மகிழ்ச்சியாய்
தோழர்கள் ஆடும் போதும்
புன்னகைத்தபடி

கூட இருப்பதே
ஒரு தவமாய் இயற்றி
விட்டுச் சென்ற
இடத்திலேயே காத்து., கிடந்து

புறக்கணித்தோ
பரணிலோ.,
குப்பைத் தொட்டியிலோ
வீசிச் செல்லும்
நண்பர்களை குறை கூறாமல்
அங்கும் மௌனமாய்..
அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்.


டிஸ்கி:- பொம்மை உலகம் என்ற என்னுடைய இந்தக் கவிதை 27.04.2011 ஆனந்த விகடன் சொல்வனத்தில் வெளிவந்துள்ளது..:) நன்றி விகடன்...:)

20 கருத்துகள்:

  1. ஆனந்தம்:)! வாழ்த்துக்கள் தேனம்மை. கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. சமீபகாலத்தில் பொம்மைகளை வைத்தே நிறைய கவிதைகள் எழுதி விட்டீர்கள். எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு தோழரே...தெரிந்த, தெரியாத விடயங்கள் இன்று தெளிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை.. விகடன் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. விகடன் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. நல்லாயிருக்கு ஜி... (என் மனம் போல வெறுமையாகவும் :)

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் மேடம். குமுதம், விகடன் என 2 சூப்பர் ஸ்டார் இதழ்களில் வந்தாச்சு.. இனி அடுத்த இலக்கு என்ன? தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் கணையாழி இதழ் வந்து விட்டது.. அடுத்து அதற்கு ட்ரை பண்ணவும்

    பதிலளிநீக்கு
  9. ஆனந்த விகடனிலும் படித்தேன்.கவிதை நல்லா இருக்குங்க.வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. உறைய வைக்கும் உண்மை ...

    உணராமலே போய்விடுகிறோம் என்பது தான் கொடுமை ...

    பதிலளிநீக்கு
  11. கவிதை அருமை தேனம்மை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை அக்கா.

    பொம்மை உலகம் போலவே சில நேரம் பெண்கள் உலகமும்.

    விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராம்லெக்ஷ்மி

    நன்றி சசி

    நன்றி கருன்

    நன்றி சௌந்தர்

    நன்றி ரமேஷ்

    நன்றி நாகசுப்ரமணியன்

    நன்றி அன்புமணி

    நன்றி சமுத்ரா

    நன்றி ரிஷபன்

    நன்றி ராஜி

    நன்றி அஷோக்

    நன்றி செந்தில்

    நன்றி கோமதி

    நன்றி ஜிஜி

    நன்றி செந்தில்

    நன்றி நியோ

    நன்றி ஸாதிகா

    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  14. நன்றி ராம்லெக்ஷ்மி

    நன்றி சசி

    நன்றி கருன்

    நன்றி சௌந்தர்

    நன்றி ரமேஷ்

    நன்றி நாகசுப்ரமணியன்

    நன்றி அன்புமணி

    நன்றி சமுத்ரா

    நன்றி ரிஷபன்

    நன்றி ராஜி

    நன்றி அஷோக்

    நன்றி செந்தில்

    நன்றி கோமதி

    நன்றி ஜிஜி

    நன்றி செந்தில்

    நன்றி நியோ

    நன்றி ஸாதிகா

    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...