ஒளிய முடியாமல்
பால் ப்ரகாசம்
வழிந்து வழிந்து
மேகமாய் மரமாய்
கிளையாய் இலையாய்
நதியாய்.. நீளமாய்..
கனவில் நீளும்
இறக்கையோடு
கால் நனைத்துக்
கவ்விய மீனோடு
புலம் பெயர்ந்து
ஏதோ ஒரு புலத்தில்
கண்ணுக்குத் தெரியாத
காந்தமாய்..
காந்தமாய்..
கால் எடுக்க வாராமல்
இரும்பாய்..
நிற்கவோ.,
உறையவோ.,
உயிர்க்கவோ..
செப்பிடு வித்தையோ
செய் வினையோ
செப்பிடும் வித்தை.

18 கருத்துகள்:
நல்ல கவிதை.
இப்போது கவிதைகளை தேடி தேடி படிக்கிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா.
எளிமையான தமிழில் அற்புதமான கவிதை...
>>செப்பிடு வித்தையோ
செய் வினையோ
செப்பிடும் வித்தை.
good one
எளிமையான அழகான கவிதை!!
தேனிரும்பு இனிக்கிறது அக்கா
வாழ்த்துக்கள்
விஜய்
செப்பிடும் செப்பிடும் வித்தை அருமை.
தேன் போல் செப்பிடும் வித்தை உங்களுக்கு கைவந்திருக்கிறது!
அருமை அக்கா.
செப்பிடும் வித்தையோ
தேன்அருமை தேனக்கா
கவிதைய தலைப்பு அர்த்தப்படுத்துது :)
நல்ல கவிதை.
கலக்கல் கவிதை..
வாழ்த்துக்கள்..
மணமகள் தேவை உதவ முடியுமா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க...
http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html
Nice
நல்ல கவிதை சகோதரி.
நல்ல கவிதை!
நன்றி ரத்னவேல் சார்., கருன்., செந்தில் குமார்., மேனகா., விஜய்., இராஜ இராஜேஸ்வரி., மாதவி., அக்பர்., மலீக்கா., நேசன்., குமார்., சௌந்தர்., சசி., இளம் தூயவன்., ரவிக்குமார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக