எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 மார்ச், 2011

பொம்மைக்காரிகள்..

கரடி பொம்மையின்


கைபிடித்து தரதரவென


இழுத்து வந்தது குழந்தை..





தரையில் கிடந்த


இன்னொன்றைப் பார்த்து


அதைக் கீழேயே விட்டு


இதைத் தூக்கியது..



கொஞ்சி சலித்தபின்


டீப்பாயில் இருந்த


மற்றொன்றை எடுத்தது..



அதற்கு சோறூட்டி


தூங்கப் பண்ணிய வேளையில்


அதிரடி சத்தத்தோடு வந்தார்கள்..


அதன் பொம்மைக்காரிகள்..



தூங்கிய பொம்மைகள்


விழித்துத் துள்ளின


எவ்விடம் இருப்பதென..



வலதும் இடதும் பற்றி


பொம்மைகளை


பொம்மைக்காரிகளிடம்


கொடுத்தபின் ..



தனது மட்டுமேயான


கரடி பொம்மையை


எடுத்து மார்போடு


அணைத்துக்கொண்டது குழந்தை..








நன்றி உயிரோசை..:)


16 கருத்துகள்:

  1. அக்கா, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அட..அருமையாக இருக்கு.குழந்தையின் சுபாவத்தை அழகாய் வடித்துள்ளீர்கள்.தலைப்பும் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  3. கவிதை அழகு!

    எனக்கு Toy Story திரைப்படத்தை ஞாபகத்துக்கு கொண்டு வந்தது!

    பதிலளிநீக்கு
  4. குழந்தையின் மெய்யில்
    மெய்யுணர்ந்த பொம்மைகள்..
    மெய்யற்றவர்களுக்காக..
    பொய்யாகி போக துடித்தது..


    உணர்ந்தது சரியா தோழி..

    பதிலளிநீக்கு
  5. பொம்மைக்காரிகள் எப்பவுமே இப்படித்தான்.மோசமானவர்கள் !

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து இதழ்களில் வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைகளின் உலகத்தில் நுழைந்து மிக அவதானித்து எழுதியிருக்கீங்க தேனக்கா! :)

    பாலா

    பதிலளிநீக்கு
  8. பொம்மைகாரிகள் எப்போதும் அழகு தான்

    பதிலளிநீக்கு
  9. குழ்ந்தை மனதை இயல்பாகச் சொல்லிய கவிதை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி சித்து

    நன்றி ஸாதிகா

    நன்றி ராஜா

    நன்றி மாதவி

    சரிதான் சங்கர்

    ஆமாம் ஹேமா.

    நன்றி அக்பர்

    நன்றி பாலா

    நன்றி குமார்

    நன்றி சசி

    நன்றி சக்தி

    நன்றி முனியப்பன் சார்

    நன்றி ராஜி

    நன்றி ரிஷபன்..

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...