எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
நலமா .? எப்படி இருக்கிறீர்கள் .?.உங்கள் அன்பு
தோய்ந்து நானும் நலம் அம்மா...

உங்கள் எழுத்துப்பயணத்தில் எங்கேனும் இளைப்
பாற வேண்டுமெனில் எங்கள் இதயம் இருக்கிறது
அம்மா.. அருவி போல அணைத்து ஓடி கூழாங்
கற்களாய்க்கிடந்த எங்களை ( நான்., உமாமகேஸ்.,
சிகப்பி., இன்னும் பலர்) சாளக்கிராமமாய்
மாற்றினீர்கள்...கனவுச் சிறகு பொருத்தி திசை
யற்றுத்திரிந்த பறவைகளான எங்களை புலம்
பெயர் பறவைகளாக்கி பெயர் பெறும் பறவை
களாக்கினீர்கள்..நிமிர்ந்த நன்னடை., நேர்கொண்ட
பார்வை.,கம்பீரக்குரலால் எங்களை ஆட்சி செய்த
பேரரசி ...!!!குறைவொன்றுமில்லை அம்மா.
உங்களின் நிறைவான அன்பில் நான் ...!!!
.

என் அத்தைக்கு உங்கள் அம்மா தலைமை
ஆசிரியையாக வந்ததும் சிவகங்கைப்பூங்காவில்
பலவருடம் கழித்தும் அவர்கள் கண்டு கொண்டு
அணைத்துக்கொண்டதும் அதேபோல் உங்களையும்
நானும் காணும் ஆவலில்.....எங்கே .,எப்போது.,
என்பதாய் ...இந்தியத் தலைநகரில் நீங்களும்.,
தமிழகத்தலை நகரில் நானும் உங்களின் வருகை
யை எதிர் நோக்கி.. வாழ்க்கை வட்டத்தில் சுற்றி
வந்து உங்கள் எழுத்து மூலமே உங்களைக்
கண்டடைந்து....., எனக்கும் ஒரு வலைத்தளம்
அமைத்து இதெல்லாம் நம்பவே முடியவில்லை ..

என்றும் நீங்கள் எங்கள் சரஸ்வதி... வீணை மீட்டும்
ஒலி எப்போதும் கேட்கிறதே.. வலை வழியாய்.,
நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்
கிறது அம்மா... சொட்டுச் சொட்டாய் அருந்தக்
கிடைக்கும் அமிர்தம் போல் உங்கள் எழுத்து. ..
சாகாவரம் பெறும் ஆசையில் நான் பருகிப்பருகி..
இறப்பே இல்லை உயிர்த்தே கிடப்பேன்...தடை
ஓட்டங்களிலும் தாண்டிச் செல்லப் பயிற்றுவித்த
தோழி., வழிகாட்டி.,ஆசிரியை. தொடுவானம்
போல் நீங்கள் ..உங்களைத்தொட்டு விடும்
ஆசையில் நான்..

உங்களுக்கு அகவை அறுபதா.. ? பிரபஞ்சச் சுருளில்
எங்கெங்கோ உழன்றாலும் என் நினைவு உங்களைச்
சுற்றும் கோளாய் ,,,உங்களிடமிருந்தே அனைத்தை
யும் பெற்றேன்.. அதைக்கொண்டே என்னைத் திருத்தி
உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.. என்னைப்போல..
இன்னும் பலரைச் செதுக்க அம்மா உங்கள் செல்லப்
பெண் மனம் நெகிழ., மகிழ்வு பொங்க வாழ்த்து
கிறேன் நூறாண்டு வாழ்க....!!!!

டிஸ்கி:- பாத்திமாக் கல்லூரியில் எனக்குத்தமிழ்
பயிற்றுவித்த என் தமிழன்னை எம்.ஏ.சுசீலாம்மா
அவர்களுக்கு நாளை அறுபது வயது பூர்த்தி
ஆகிறது.. அவர்களைப் பற்றி முழுமையாக
எழுத இந்த இடுகை போதாது.. அவர்கள் வலைத்
தளம் சென்று இந்த வயதிலும் பேரன்போடும்
பெருமுயற்சியோடும் நம்மை வழிப்படுத்த
எழுதும் அவர்களுக்கு வலைப்பதிவர் அனைவர்
சார்பிலும் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டு
கிறேன் அவர்கள் வலைத்தளம்...
http://masusila.blogspot.com/

45 கருத்துகள்:

  1. அன்புள்ள பதிவு

    தங்கள் தமிழ் ஆசிரியர் சுசிலாம்மாவுக்கு வாழ்த்துகள் அப்போ நாளை மறுதினம் 61வது பிறந்ததின வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துவதற்கு வயதில்லை என்பதால் வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  3. அறிமுகத்துக்கு நன்றி.. எவ்வளவு சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார்.. இனி எங்காவது புத்தகக் கடைக்கு சென்றால் சுசீலாம்மாவின் படிப்புகளை வாங்க வேண்டும்.

    அவருக்கும் அவர் மாணவிக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. அறிமுகத்துக்கு நன்றி. வணங்கி வாழ்த்துவோம்:)

    பதிலளிநீக்கு
  5. உங்கள் தமிழ் அன்னை மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் பக்தியும் பதிவு முழுவதும்........

    convey our wishes to her!

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியையின் அறிமுகத்துக்கு நன்றி அக்கா!!

    தமிழ் அன்னைக்கு இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்!! அவருக்கு என் வணக்கங்கள்....

    பதிலளிநீக்கு
  7. அன்பின் தேனம்மை,வகுப்பறையையே சுவாசமாய்க் கொண்டிருந்த எனக்கு...என் அன்பு மகளும்,அருமை மாணவியுமான உன்னிடமிருந்து வந்திருக்கும் வாழ்த்து,நான் இது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கிறது என்பதைப் புரிய வைத்து என்னை நெகிழ்த்துகிறது...மெய் சிலிர்க்க வைக்கிறது.
    மேலும் அதை வலையிலும் வெளியிட்டு என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டாய்.குறும்புக்காரிதான் நீ.
    உன் வளர்ச்சியும்,கவிஞர் தேனம்மையின் ஆசிரியர் எனக் குறிப்பிட்டு எனக்கு வரும் அஞ்சல்களும் என்னை ‘ஈன்ற பொழுதின்’பெரிதுவக்கச் செய்கின்றன.
    தொலைவுகள் பிரித்தாலும் மனங்கள் நெருங்கியிருப்பதே மேலானதல்லவா.
    வாழ்த்துக்கள் என் அன்புப் பெண்ணே.

    பதிலளிநீக்கு
  8. அறிமுகத்திற்கு நன்றி தேனம்மை. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான படைப்புகளுக்கு சொந்தக்காரர்.. பல்லாண்டு வாழ்க.. நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. இப்படிப் பட்ட ஆசிரிய அன்னையை வாழ்த்த எனக்கு வயதில்லை...வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சுசீலாம்மா பற்றி கிருஷ் சார் பக்கத்தில் ஏற்கெனவே படித்துள்ளேன். இப்போது உங்கள் பக்கத்தில் படித்து ஃபாத்திமா கல்லூரி என்று பார்த்ததும் அந்தக் கல்லூரியின் பழைய தமிழ் மாணவியான என் மனைவியிடம் காட்டினேன். நெகிழ்ந்து போனாள். அவரை வாழ்த்துவதிலும், வணங்கி ஆசி பெறுவதிலும் நாங்களும் பங்கு பெறுகிறோம்

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அக்கா.. அருமையான அறிமுகம்.. ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! அவருக்கு என் வணக்கங்கள்....

    பதிலளிநீக்கு
  13. நெகிழவைத்த இடுகை....

    நாங்களும் உரிமையோடு வணங்கலாம் உங்கள் ஆசிரியையை....
    ஒரு சிறப்பான ஆசிரியையின் கருத்துகள் நேரடியாக வகுப்பறையில் கிடைக்காவிட்டாலும் சமுதாயத்தில் அவர்கள் தூவிச் சிதறும் கருத்துக்கள் அணாணிமஸாகவே பலரையும் அவருக்கு மாணவராக்கிவிடும்தானே.....
    எனவே ஒரு மாணவனாகவே வணங்குகிறேன் குருவை...

    தேர்ந்த வார்த்தைகளால் ஈன்ற பொழுதின் பேருவகையைக் கொடுத்திருக்கும் தங்களுக்கும் வணக்கம்.....
    ஃபாத்திமா கல்லூரி?? நீங்கள் மதுரையா?? நான் அமெரிக்கன் கல்லூரி....

    பதிலளிநீக்கு
  14. எம்.ஏ.சுசீலாம்மா அவர்கள் பூரண ஆயுளுடன் சிறப்பாக வாழ வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. தேனம்மை

    பதிவில் அன்பும், பாசமும் தேனாய் ஓடுகிறது..

    தமிழன்னை எம்.ஏ.சுசீலாம்மா அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    (வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பது இன்றைய அரசியல் வழக்கு சொல் ஆகி விட்டதால், நேரடியாக வாழ்த்தி விட்டேன்...)

    தேனம்மை... உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  16. தேனம்மை... உங்கள் தமிழாசிரியை போல் எனக்கும் ஒரு தமிழாசிரியர்... அது குறித்து பிரிதொரு நேரத்தில் பகிர்கிறேன்.

    இப்ப..., உங்கள் கல்வித்தாயை வாழ்த்த நாம் என்ன பெரியவர்களா... அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. என் சார்பில் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  18. தமிழன்னைக்கு வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  19. மனம் நெகிழ வைத்த இடுகை தேனு.அவர் பாதம் தொடவைத்தமைக்கு நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  20. நன்றி வசந்த் உங்க முதல் வாழ்த்து அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுருச்சு

    பதிலளிநீக்கு
  21. நன்றி தமிழ் உதயம் வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  22. நன்றி பட்டியன் வாழ்த்துக்கு ஆமாம் நிறைய புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் கதை கட்டுரை மொழிபெயர்ப்பென்று

    பதிலளிநீக்கு
  23. நன்றி வானம்பாடிகள் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  24. நன்றி சித்ரா தெரிவித்து விட்டேன் உங்க வாழ்த்தை

    பதிலளிநீக்கு
  25. நன்றி மேனகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  26. நன்றி அம்மா உங்கள் கடிதத்துக்கு ...எப்போ பார்ப்போம்னு இருக்கு

    பதிலளிநீக்கு
  27. நன்றி கோபிநாத் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  28. ஆம் ரிஷபன் அருமையான படைப்புகளுக்குச் சொந்தக்காரர் நன்றி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  29. நன்றி புலிகேசி உங்க வணக்கத்துக்கு

    பதிலளிநீக்கு
  30. நன்றி ராம் தனிப்பட்ட முறையிலும் சென்று அவரை வாழ்த்தியதற்கு

    பதிலளிநீக்கு
  31. நன்றி சங்கர் உங்க வணக்கத்துக்கு

    பதிலளிநீக்கு
  32. மிக அருமையாகச் சொன்னீர்கள் பிரபு எந்த வருடம் படித்தீர்கள்

    பதிலளிநீக்கு
  33. நன்றி சை கொ ப உங்க வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும்

    பதிலளிநீக்கு
  34. நன்றி கோபி உங்க வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும்

    பதிலளிநீக்கு
  35. நன்றி சே குமார் உங்க வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி திவ்யாஹரி வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஹேமா உங்க அன்புக்கும் பரிவுக்கும்

    பதிலளிநீக்கு
  38. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...