எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சுயமும் சுயம் போன்ற ஒன்றும்

இறுக்கச்சாத்திய கதவிற்குள்ளும்
முழுக்க முளைத்த தூசி
அப்பிக் கிடக்க...
துடைக்கத் துடைக்க அழுக்கு..
செந்தாமரையோ., வெண்டாமரையோ.,
கதவின் மரைக்குள்ளும்
மரை கழலும் நிலையில்...
ஹிஸ்டீரியாவா .,ஃபிட்ஸா .,
செலக்டிவ் அம்னீஷியாவா .,
அல்ஸீமர் வேண்டும் வெற்றுப் பிடிவாதம்..

வார்த்தைகள் அறுத்துப் போட்ட
பல்லி வாலாய் நாக்கு..
மௌனமும் .,புறக்கணிப்பும் கூட
சாணை பிடித்த ஆயுதமாய்..
சுத்தம் செய்யாத தொட்டித்தண்ணீராய்
வீச்சமடிக்கும் வார்த்தைச் செதில்கள்...
ஜன்னல் கதவுகளும்., திரைச்சீலையும்
போதவில்லை ஒளிந்துகொள்ள..
தற்குறிகளும் .,ஏனையவும்
மனக் கருவியைக் குழப்பி...
ரோஷார்ஷ் சித்திரங்களாய்..
சைபீரியச் சிறைக்குள்
ரஸ்கோல்னிகோவாய்
தவறைத்தவறென்று உணராமல் உணர்ந்து...
ஆளை மீறிய வாலும்., கொம்புகளும் .,
கோரைப்பல்லும் அவ்வப்போது
மிரட்டலாய்க் கிளைத்து
தன்னையறியாமல் தனக்குள்ளிருந்து...
உடைகளும் .,பதவிகளும் .,
கல்வியும்., தகுதியும் மீறி
அவ்வப்போது சுயமும்
சுயம் போன்ற ஒன்றும் ...

44 கருத்துகள்:

  1. //ஆளை மீறிய வாலும்., கொம்புகளும் .,
    கோரைப்பல்லும் அவ்வப்போது
    மிரட்டலாய்க் கிளைத்து
    தன்னையறியாமல் தனக்குள்ளிருந்து.../

    எல்லோர்க்குள்ளும் இருக்கு வால் முளைத்த மிருகம்

    பதிலளிநீக்கு
  2. அப்பப்பா.. புரட்டிப் போடுறீங்க.. தட கட முடன்னு ஓடுது வார்த்தைகள்.. வரிகள்.

    கவிதை எழுதணும்னா இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கணுமா.. அதையும் தேவக்கேத்த மாதிரி இப்படி அழகா பயன்படுத்தணுமா.. ம்ம்..

    பதிலளிநீக்கு
  3. மிகச் சில வார்த்தைகளில்,
    பலப் பல அர்த்தங்களைச் சொல்லி,
    சிந்திக்க வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒரே மிரட்டலா இருக்கு போங்க. மொத்தத்தில் சாபாஷ்.

    பதிலளிநீக்கு
  5. நல்லாதான் இருக்கு.

    அன்பரசு செல்வராசு

    பதிலளிநீக்கு
  6. ம்க்கும்...சுத்தம்...
    வாழ்த்துகள் கவிஞரே

    பதிலளிநீக்கு
  7. கலக்கிட்டீங்க தேனக்கா...பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. வார்த்தைகள் அறுத்துப் போட்ட
    பல்லி வாலாய் நாக்கு..

    .....இதுக்கு மேல சிறப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை. சூப்பர், அக்கா.

    பதிலளிநீக்கு
  9. \\மௌனமும் .,புறக்கணிப்பும் கூட
    சாணை பிடித்த ஆயுதமாய்..\\
    அழகா சொல்லியிருக்கீங்க. கவிதை அருமை!!!!

    பதிலளிநீக்கு
  10. திரும்பத் திரும்ப வாசித்து ரசித்த கவிதை. ரொம்ப பிடிச்சிருக்கு தேனம்மை அக்கா.

    பதிலளிநீக்கு
  11. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. ////மௌனமும் .,புறக்கணிப்பும் கூட
    சாணை பிடித்த ஆயுதமாய்..////

    நல்லா இருக்கு. தூசி படிந்த தரையில் ஈரக்கால் தடம் போல்

    தரையில் ஈரமும், காலில் தூசியுமாய் கவிதை மனதில் பதிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  13. தலைப்பிலேயே நின்னுட்டேன்..

    அருமை வரிகள்..:))

    பதிலளிநீக்கு
  14. நன்றி அண்ணாமலையான்

    நன்றி சந்தான சங்கர் உண்மை எல்லோருக்குள்ளும் கடவுள் பாதி மிருகம் பாதி சங்கர்

    பதிலளிநீக்கு
  15. நன்றி செல்வா

    நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  16. ஆமாம் ஹுசைனம்மா மனசின் அழுக்கு

    பதிலளிநீக்கு
  17. நன்றி மதுரை சரவணன்

    நன்றி மேனகாசத்யா

    பதிலளிநீக்கு
  18. நன்றி நான் ரசித்த ...உங்க முதல் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. நன்றி நவாஸ் மிக அருமையான புரிந்துணர்வு

    பதிலளிநீக்கு
  20. நன்றி சங்கர் பலாவான உங்களை விடவா

    பதிலளிநீக்கு
  21. சுத்தம் செய்யாத தொட்டித்தண்ணீராய்
    வீச்சமடிக்கும் வார்த்தைச் செதில்கள்...

    வாளைவிட கூர்மையான வார்த்தைகள்.
    அசத்தலான கவிதை

    பதிலளிநீக்கு
  22. a lot of details within the poem. beautiful and very sharp style. :)

    பதிலளிநீக்கு
  23. தொடர்ந்து அருவி போல் விழும் வார்த்தை பிரயோகம்தான் உங்கள் பலமே.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  24. ஆமாம்..ஆமாம்...

    "மௌனமும் .,புறக்கணிப்பும் கூட
    சாணை பிடித்த ஆயுதமாய்..
    சுத்தம் செய்யாத தொட்டித்தண்ணீராய்
    வீச்சமடிக்கும் வார்த்தைச் செதில்கள்.."

    ரசித்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி அபுல் பசர்

    நன்றி வித்யா

    பதிலளிநீக்கு
  26. //PPattian : புபட்டியன் சொன்னது…

    அப்பப்பா.. புரட்டிப் போடுறீங்க.. தட கட முடன்னு ஓடுது வார்த்தைகள்.. வரிகள்.

    கவிதை எழுதணும்னா இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கணுமா.. அதையும் தேவக்கேத்த மாதிரி இப்படி அழகா பயன்படுத்தணுமா.. ம்ம்..//
    இதே feelings தாங்க.. அருமை தோழி..

    பதிலளிநீக்கு
  27. நன்றி திவ்யாஹரி

    நன்றி புலவரே

    நன்றி அப்துல்லா

    பதிலளிநீக்கு
  28. தேனு அருமை.எல்லோரிடமும் ஒரு சுயம் நிச்சயமாய்.அது எப்படியாய் இருக்கிறது என்பதில்தான் அவரது குணம் தோலுரிக்கும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...