ப்ரிய
மாமா
”மா”
”மா” நீங்கள்.
இந்தக்
கவிதை
உங்கள்
மனவீட்டுக்குள்
அரிக்காத
வண்ணப்புகைப்படமாய்
இருக்க
வேண்டாம்
ஒரு
சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள
அனுமதியுங்களேன்
எப்படி
முடிகிறது உங்களால்
மனத்தடி
மண்ணில்
கப்பும்
கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க
நினைக்கும்
ப்ரிய
விதைகளை
ஆழப்
புதைக்க
இன்னும்
எனக்கு நீங்கள்
ஆச்சர்யம்
உண்டுபண்ணும்
மனிதர்தான்