தற்போது அருகி வரும் ஹாபிக்களில் ஒன்று ஸ்டாம்ப் கலெக்ஷன்.
சும்மா சுவாரசியத்துக்காக சேர்க்க ஆரம்பிச்சு அப்பிடியே கிடப்பில் கிடக்கும் விஷயங்களில் இந்த தபால் தலை சேகரிப்பும் ஒண்ணு. கிட்டத்தட்ட 15 வருடத்துக்கு முன் வரை சேகரிச்சு வைச்சிருக்கேன். அதுக்கப்புறம் தபாலும் அதிகம் வரல. தபால் தலைகளும் சேகரிக்கலை. அதுவரை இருந்ததை இங்கே போடுறேன். இது பத்தி அதிக தகவல்களை இந்தப் பக்கம் கொடுக்குது.
https://en.wikipedia.org/wiki/Philately
என் கலெக்ஷன் மட்டுமில்ல இது என் அம்மா & சின்னப் பையனின் கலெக்ஷனும் கூட. இதில் என் மாமா, தம்பி எல்லாரின் பங்களிப்பும் இருக்கு ( ஏன்னா அவங்க வெளிநாட்டில் இருந்து அனுப்பிய தபால் தலைகளும் இருக்கு :)
ஸ்டாம்ஸ் மட்டுமில்ல. கவர்களும் சிலது சேர்த்திருக்கு. அது கிடைச்சதும் போடுறேன்.
இனி ஃபோட்டோஸ்.
முதல்ல மலேயா/ மலேஷியா. இதுல முக்கோண தபால் தலைகளும் கூட இருக்கும்.இதுல மலேய ஆட்சியாளர்களுடன் ப்ரிட்டிஷ் ராணியின் தபால்தலைகளும் இருக்கு.
அடுத்தது சிங்கப்பூர். இதுல மங்குஸ்தான் ரம்புஸ்தான் ஆர்க்கிட்ஸ் ப்ரதானம்.