எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மகர்மச் யா மஹாதேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகர்மச் யா மஹாதேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 நவம்பர், 2023

மகர்மச் யா மஹாதேவ்

மகர்மச் யா மஹாதேவ்

சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி.. ” பாடிக்கொண்டிருந்தது அந்த மஹேந்திராதாரில் மாட்டி இருந்த பென் ட்ரைவ். 

 

”இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ.. ” இப்பவெல்லாம் என்ன என்னவோ பாட்டைக் கேட்டுக் குட்டிச்சுவராகிப் போய்க்கொண்டிருக்கிறாள் தேவி. நல்ல வேளை சீரியல் எல்லாம் பார்க்காமல் இருக்காளே. நினைத்துப் பெருமூச்சு விட்டான் சாம்.

 

மெர்க்கராவின் எஸ்டேட். கொண்டை ஊசி வளைவுகளில் மடிக்கேரி என்று கன்னட எழுத்துக்கள் மின்னின. காஃபி எஸ்டேட்டின் வனப்புக்குள் புகுந்து புகுந்து சென்றது அந்த ஜீப்.

 

இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து காஃபியின் தவிர்க்கமுடியாத அரோமா எழும்பிக்கொண்டிருந்தது. பாசம் பிடித்த மண்ணில் பச்சையமிட்டிருந்தன ஏலச்செடிகளும் மிளகுக் கொடிகளும்.

Related Posts Plugin for WordPress, Blogger...