தந்தை
சொல்லைக் காக்கவேண்டும் தாயையும் காக்க வேண்டும். என்ன செய்வது? முதலில் தந்தை சொல்லைக் கேட்போம் பின் தாயைக் காப்போம்
என முடிவெடுத்துக் கீழ்ப்படிந்தான் ஒரு இளம் துறவி. அவன் பெயர் பரசுராமன். அவன் சந்தித்த
இக்கட்டு என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
திரேதாயுகத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் இருந்தார். அவர் மனைவியின்
பெயர் ரேணுகாதேவி. அவர்களுக்கு நான்கு மகன்கள். நான்காவது மகனின் பெயர்தான் பரசுராமன்.
அவன் தாய் தந்தை இருவர் மேலும் பாசம் கொண்டிருந்தான்.
சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவருக்கு கோடாலி போன்ற பரசு
என்றொரு ஆயுதம் கிடைத்தது. அந்த ஆயுதத்தைத் தன் வலது கையில் எப்போதும் வைத்திருப்பார்.
தலையில் ஜடாமுடியும் துறவிகளுக்கே உரிய காவி உடையும் அணிந்திருப்பார். உடல்பலமும் மனோபலமும்
மிக்கவர்.