திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு
ஸ்ரீ நரியங்குடி
கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்
காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக்கோவில்கள். சிவகங்கைப் பகுதியில் அதிகம். இவை பல்வேறு இனத்தாருக்கும் குலதெய்வக் கோயில்களாகத் துலங்குகின்றன. அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக்கருப்பர் கோவில்.