கறையான்கள்
”தேவி கருமாரியம்மா சிறந்த உபகாரி. அவள் தேசம் எல்லாம்
காக்கும் அருள் செல்வி அவதாரி “ என்று பாடிக்கொண்டிருந்தது பெரியபாளையத்தம்மன் கோவிலின்
லௌட் ஸ்பீக்கர். அன்று ஆடி வெள்ளியாதலால் புற்றுக்குப் பால் ஊற்ற பெண்கள் கூட்டம் க்யூ
கட்டி நின்றது.
கூட்டத்துக்கு நடுவில் வாழையிலையில் தட்டு வைத்து அதில் மூன்று மாவிளக்கு உருண்டைகள் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து நடுவில் குழியாக்கி நெய் ஊற்றித் திரிப் போட்டு ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார் நீலாக்கா. சிறிது நேரத்தில் காரின் அருகில் வந்து மாவிளக்கைக் கொடுத்துவிட்டு ”தேவிம்மா கூட்டம் கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு. அதுனால சீக்கிரம் எட்டிப்பார்த்துக் கும்பிட்டு வந்துடலாம் வாம்மா” என்றார்.