கதை கேளு.. கதை கேளு…
”கதை கேளு கதை கேளு சுகமான கதை கேளு..மைக்கேல் மதன
காம ராஜன் கதையை நல்லா கேளு “ என்று பாடிக் கொண்டிருந்தது காரின் 106.4. எஃப் எம்.
சவுண்டைக் குறைத்த ஸாம் இன்னிசைத்த
ஃபோனை டாஷ்போர்டிலிருந்து எடுத்தான். அவரது பிஸினஸ் பார்ட்னரும் நண்பருமான குமாரிடமிருந்துதான்
ஃபோன் .
பயணத்தின்போது சைலண்டில் போட்டு டாஷ்போர்டில் போடவேண்டுமென்பது தேவியின் கட்டளை. ப்ளூ டூத்தும் உபயோகிக்கக் கூடாது. அன்று சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டான். காரின் வைப்பர்கள் சர் சர் என அசைந்து கொண்டிருந்தன.