அபூர்வ ராகம் ஸ்ரீவித்யா
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மங்கையர் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள், பாடும் வண்டைப் பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை, மாலே மணிவண்ணா மாயவனே, அன்பே உயர்ந்தது அவனியிலே என்று ஸ்ரீ வித்யா பாட ஜெயாம்மா ஆட என அட்டகாசமான காம்பினேஷன். இதைவிட கேள்வியின் நாயகனே டாப் க்ளாஸ். இல்லாத மேடையிலே, எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் – நாம் எல்லோரும் பார்க்கின்றோம் என வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை என்பதை உணர்த்திய பாடல்.
அகன்ற பெரிய கண்கள் கொண்ட அபூர்வ ராகங்கள் பைரவியை மறக்கமுடியுமா என்ன. தன் 22 வயதில் 17 வயது ஜெயசுதாவுக்கு அம்மாவாக நடித்தவர். அதே வயதில் பங் கிராப், பெல்பாட்டத்துடன் அதில் நடித்த கமலையும் காதலித்திருக்கிறார். கைக்கிளைப் பெருந்திணைக் காதலைச் சித்தரித்த படத்தின் கதை போலவே அவரது காதலும் கைகூடாமல் போனது. ’என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகளுக்கு மாமனார்” என்றால் அவருக்கு எனக்கும் என்ன உறவு?" எனச் சிக்கலான உறவை முதன் முறையாகத் தமிழ்த்திரையில் முன் வைத்த படம்.
.jpg)