எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 செப்டம்பர், 2024

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். தன் பேரனுக்குக்கூட பீம் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார். மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி.


தன் பணிக்காலத்தில் பெண்கள் உடல் மன நலன்களுக்காகப் பல்வேறு பெண் பிரபலங்களை சாஸ்திரி பவனில் உரையாற்ற அழைத்துள்ளார். உடல் நலனுக்குப் பல்வேறு முகாம்களும் ஏற்படுத்தி எல்லாப் பெண்களுக்கும் உற்ற தோழியாக விளங்கி வருகிறார். சீத்தலைச் சாத்தனார் இருந்திருந்தால் இவரைப் பார்த்துப் பெருமை அடைந்திருப்பார்.

பொதுத் தொண்டில் ஈடுபாடு உள்ள இவர்  லயன்ஸ், ரோட்டரி மூலம் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள், மேலும் கழிவறைகள் வகுப்பறைகள் அமைக்க உதவுகிறார். சிறார்களை மேம்படுத்துவதுடன் கோடைகாலங்களில் பறவைகளுக்கும் உணவும் நீரும் அளிக்கும் திட்டமாக உயர்ந்து விளங்குகிறது இவரது கையில் உள்ள அட்சய பாத்திரம். இதெல்லாம் ஆரம்ப அத்யாயம் இன்னும் தொடர்கின்றன இவரின் பொதுப்பணிகள். ரிடயர்ட் ஆனபின்னும் உளவியலில் முதுகலை படித்து மாணாக்கர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்து நல்வழிப்படுத்துகிறார். 

மனித நேயத்துக்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. சென்ற வருடம் பல்வேறு துறைகளில்  பணிபுரியும் சாதனைப் பெண்களைத் தேர்ந்தெடுத்து தனது அட்சயா ஃபவுண்டேஷன் மூலம் விருது வழங்கி மகிழ்ந்தவர். சமீபத்தில் முகநூலில் உள்ள துக்ளக் வாசகர்கள் குழுமம் இவரது சேவைகளைப் பாராட்டு விழா நடத்தி உள்ளது சிறப்பு.

இவரது முதல் நூல் ”இவள்தான் மணிமேகலை”. இந்நூலில் தொலைத் தொடர்புத்துறையில் பணிபுரிந்த போது ஏற்பட்ட வெள்ளைத்தோல் அரசியல்களை எல்லாம் தோலுரித்துக் காட்டியுள்ளது இவரது தைரியத்துக்கு எடுத்துக்காட்டு.

சிறந்த எழுத்தாற்றல் உள்ள இவரின் இரண்டாவது நூல் பயணக் கட்டுரைகளாக மலர்கிறது. என் அன்புத்தோழியின் மனிதநேயமிக்க மனுஷியின் இந்நூலும் முதல் நூல் போல் மாபெரும் வெற்றி பெற என் அன்பான, கனிவான, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...