எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 ஏப்ரல், 2023

ரைன் நதியின் சரக்குக் கப்பல்கள்.

 ஜெர்மனியில் பாயும் முக்கியமான நதிகளில் ஒன்று ரைன். இது ஐரோப்பா முழுமைக்குமே பாய்கிறது. முன்பே ரைன் டவரில்  ( ரொட்டேட்டிங் சர்க்குலர் டவர் ) ஏறி ரைன் நதியின் அழகுக் காட்சிகளை நாம் கண்டு களித்திருக்கிறோம். 


இந்த முறை மகனாருடன் அவரின் டூயிஸ்பர்க் வீட்டிற்கு அருகில் இருக்கும் ரைன் நதி வரை ஒரு நாள் மாலை  நடைப் பயிற்சி செய்யச் சென்றோம். 


இரும்புத் தளவாடங்களுக்கும் இரும்புப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற ஊர் ஜெர்மனி. இரும்பு உற்பத்தியில் இவர்கள்தான் உலகில் முதலிடம் வகிக்கிறார்கள். 


இந்த ரைன் ரிவருக்கு வாக்கிங் சென்றபோது நான் கண்டு பிரமித்த விஷயம் இந்த சரக்குக் கப்பல்கள். இதில் நிரம்பி இருப்பவை கோல் எனப்படும் கரி.
அம்மாடியோவ் என்னா பிரம்மாண்டம். இதன் பிரம்மாண்டம் எப்பிடின்னா நூறு கார்களை இவற்றில் அடுக்கி எடுத்துச் செல்லலாம். அவ்ளோ பிரம்மாண்டம். 

ஜெர்மனியில் ரைன் நதியை ஒட்டி மாபெரும் தொழிற்சாலைகள் ஒரு காலத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அதன் மூலம் ரைன் நதி மாசு அடைவது தெரிந்ததும் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. இதுதான் ஜெர்மனியில் நான்கண்டு ரசித்த விஷயம். 

தரை வழிப் போக்குவரத்துப் போல இங்கே ரைன் நதியின் வழிப் போக்கு வரத்து நடைபெறுகிறது. மாசு இல்லாததால் தண்ணீர் ஸ்படிகம் போல் தெள்ளியதாக இருக்கு. 
ஆலைக் கழிவுகள் இல்லாததால் நீர் எக்கோ சிஸ்டம் பாதுகாக்கப்படுது. 

அப்படியாப்பட்ட இடத்தில் நான் :) 

 அவர்கள் இந்த நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். 
இது நதியின் போக்கை ஒட்டிய நடை பாதை மேலும் சிறிது தூரத்தில் பூங்காக்கள் உள்ளன. 

நதியைச் செம்மைப் படுத்த ஜல்லிகளைக் கொட்டி கரையைக் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நதியின் பக்கவாட்டிலும் இதன் மேலும் கூட ரயில்கள் செல்கின்றன. 

மோனோ ரயில் மெட்ரோ ரயில் போன்றவை குறுக்கும் நெடுக்கும் ராட்சச சத்தத்துடன் இரும்புக் கிராதிகளின் மேல் விரையும்போது பக்கவாட்டிலிருக்கும் நடை பாதையில் நாம் நடந்து செல்வது த்ரில்லோ த்ரில்.

நம் தோள்பட்டை வரை இரும்புக் கிராதிகள் மறைக்கும். எட்டிப்பார்த்தால் மட்டும்தான் ட்ரெயின்கள் விரைவது தெரியும். திடும் திடும் என்று நெஞ்சப்பாரடிக்கும். 


இதோ பாருங்கள் இன்னொரு சரக்குக் கப்பல். இதில் ஒரு ஓரத்தில் ஒன்றிரண்டு கார்களை நிறுத்திக் கொண்டு வருகிறார்கள். 

இதில் தோராயமாக நூறு கார்கள் வரை கொண்டு செல்லலாமாம். 

இன்னொரு முறை இதில் 30 முதல் 40 கார்கள் வரை கொண்டு செல்வதைப் பார்த்தேன். 


மகனாருடனும் மருமகளுடனும் வாக்கிங் வந்தோம். 

டைட்டானிக் சைஸ் கப்பலை நான் பார்த்தது இங்குதன. 

கப்பல், ரயில், நதி என்று எல்லாமே இங்கே பிரம்மாண்டம். 

திரும்பி வரும்போது அந்தப் பாலத்தைக் கடந்த ஒரு ட்ரயினை எடுத்தேன். 

மாலை மங்கியதால் சரியாக விழவில்லை. 

எதையும் சிறப்பாகப் பயன்படுத்துவதில் ஜெர்மானியர்கள் நம்பர் ஒன். 

இதோ தெரியும் பாதைதான் டூயிஸ்பர்க் ட்ராம் ரூட்டில்  (ரோட்டில் ) இருந்து ரைன் நதிக்குச் செல்லும் நடை பாதை. அதோ தூரத்தில்தான் நதியும் பாலமும், ரயில்வே ட்ராக்கும் ஆரம்பிக்கின்றன. ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் ஆனதில் நானும் வீட்டுக்கு வரும் வழியில் சென்ற வழியை விவரிக்கிறேன் :) 

நம்மூரில் கேரளாவில்தான் இது போன்ற நீர்ப்போக்குவரத்தைப் ( மக்கள் பயணம் செய்ய)  பார்த்திருக்கிறேன். இங்கோ இவை சரக்கு கொண்டு செல்லப் பயன்படுகின்றன. ஜெர்மனியின் எளிய அழகிய அமைதியான சிற்றூர் டூயிஸ்பர்க். அன்று டூயிஸ்பர்க்கில் மிக அருமையான பொன்மாலைப் பொழுது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...