எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 மார்ச், 2021

எனர்ஜி பூஸ்டர் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேடம்

 சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத் தலைவி &  தலித் பெண்கள் நல சங்கத் தலைவி மணிமேகலை மேடம் என் நலம் விரும்பி.எப்போது நான் புத்தகம் வெளியிட்டாலும் உடன் வந்து தோள் கொடுப்பார். என் முதல் நூல் சாதனை அரசிகளில் இடம் பெற்ற சாதனை அரசி இவர். மனித நேயம் மிக்கவர். 

இவர் எங்கே இருந்தாலும் அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம் உணரலாம். அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இவர் தற்போது ஒரு நூல் எழுதி வருகிறார். அதன் வெளியீடு விரைவில் இருக்கும். 







நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். 





இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். 


மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி.
எனது ஒன்பதாவது நூல் காதல் வனத்தை வெளியிட்டபோது அனைவருக்கும் அண்ணல் அம்பேத்காரின் உருவப்படத்தை வழங்கி மகிழ்ந்தவர். 


அட்சயா ஃபவுண்டேஷன் மூலமும், ரோட்டரி சங்கத்தின் மூலமும் பல்வேறு சமூக நலப்பணிகளும் பள்ளி கல்லூரிகளுக்கு அத்யாவசிய வசதிகளும் செய்து கொடுக்கிறார். மனிதர்களுக்குத் தகுந்த சமயத்தில் உதவுவது மட்டுமல்ல வேனில்காலத்தில் பறவைகளுக்கு நீரும் உணவும் வழங்கும் திட்டத்தைத் தான் நிறைவேற்றுவதோடு வளரும் மாணாக்கருக்கும் எடுத்துச் செல்கிறார். மனித நேயத்துக்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

அவருக்கு லேடீஸ் ஸ்பெஷல் மற்றும் ரோட்டரி சங்கத்தில் இந்த மாதம் ஸ்ரீ சக்தி விருது வழங்கப்பட்டது. ஸூமில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று ஸ்ரீ சக்தி விருது வாங்கியமைக்காக எனது எனர்ஜி பூஸ்டர் மணிமேகலை மேடத்தையும் விருதை வழங்கி உரையாற்றியமைக்காக எனது பத்ரிக்கை குரு கிரிஜா ராகவன் மேடத்தையும் வாழ்த்திப் பேசினேன். :)


அல்லும் பகலும் பெண்கள் நலனுக்காவே போராடித் தனது கொள்கைகளுக்காகவே வாழும் மணிமேகலை மேம் எனது எனர்ஜி பூஸ்டர். அவர் புத்தகம் சிறப்பாக வெளிவந்து அவரைப் பற்றி இன்னும் பலர் அறிய வேண்டும் என்பது எனது பேரவா. வாழ்த்துக்கள் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேம். எனது அளப்பறிய சக்தியே. !!!

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...