எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

யூரோப் டூரின் எட்டாம் நாள் தங்கிய ஏழாவது ஹோட்டல் இது. பாரீஸில் இருக்கும் இந்த ஹோட்டல் நோவோட்டல் ஹோட்டல்களின் குரூப் ஹோட்டல்.


அன்று இரவு பாரீஸ் பை நைட் பார்க்கச் சென்றதால் முதலில் உணவருந்திவிட்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு அதன் பின் ஹோட்டலுக்கு உறங்கச் சென்றோம்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நசிகேதன் கேட்ட கேள்விகள் . தினமலர் சிறுவர்மலர் - 30.

எமனையே கேள்வி கேட்ட நசிகேதன்.
சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளுக்கு விளக்கம் சொல்வார்கள். ஆனால் நசிகேதன் என்ற சிறுவன் எமனிடமே சென்று சில கேள்விகள் கேட்டான். அதற்கு எமனும் பதில் அளித்தார். அக்கேள்விகள் என்னென்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
வாஜ்ரவஸ் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தி வந்தார். அவரது மகன்தான் நசிகேதன். மிகுந்த அறிவாற்றலும் அழகும் நிரம்பிய குழந்தை அவன்.
யாகம் நடத்தியவர்கள் யாகத்தின் முடிவில் எளியோர்களுக்குத் தானம் கொடுப்பார்கள். கோதானம் என்று பசு தானமும், பூமிதானம் என்று நிலமும் கொடுப்பார்கள். இது அவரவர் சக்திக்கு உட்பட்டது. ஆனால் வாஜ்ரவஸ் முனிவர் பால் சுரப்பு வற்றிய பசுக்களை கோதானம் கொடுத்தார். தரிசான நிலங்களை பூமிதானம் செய்தார்.
அதைப் பார்த்து நசிகேதன் வருந்தினான். சிறுவனாய் இருந்தாலும் அடுத்தவர்க்குச் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரோடி இருந்தது. அதனால் அவன் தன் தந்தையிடம் சென்று “ தந்தையே என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகின்றீர்கள் ? “ எனக் கேட்டான்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையைப் பார்த்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு அசதியுடன் வந்து சேர்ந்தோம். 

ஏழாம் நாள் இரவு ஞாயிறன்று இரவு. மிக அருமையான இரவு உணவை உண்டுவிட்டு உறங்க இந்த ஹோட்டலுக்கு வந்தோம். பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளபடியே பெஸ்ட் ஹோட்டல்தான்.



திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ரைண்டெர்ம் ( ரைன் டவர் & ரிவர்) .மை க்ளிக்ஸ். RHEINTURM. MY CLICKS.

ட்ரபீஸிய வடிவத்தில்  கண்ணாடிச் சுவர்கள் கொண்ட ஒரு டவரைப் பார்த்திருக்கிறீர்களா. அதுதான் ரைன் டவர். ஜெர்மானியர்களின் கட்டுமான அறிவுக்கு எடுத்துக்காட்டாக நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இருந்தாலும் இந்த டவரின் அமைப்பு வெகுவாகவே ஆச்சர்யப்பட வைத்தது. இதில் இரு தளங்கள் உண்டு. முதல் தளத்தில் அப்சர்வேஷன் டெக்கும் இரண்டாம் தளத்தில் சுழலும் உணவகமும் செயல்படுகிறது.

டுசில்டார்ஃப் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டவர் ஒரு தொலைத்தொடர்பு கோபுரம். ஜெர்மனியின் வெஸ்ட்பாலியா என்ற கூட்டாட்சி மாநிலமான டுஸில்டார்ஃபில் அமைந்துள்ளது . 1979இல் இருந்து 1981 வரை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த கான்க்ரீட் டவரின்  உயரம் 174.5 மீட்டர்.

170 மீட்டர் உயரத்தில் இதன் அப்சர்வேஷன் டெக் இருக்கிறது. ரேடியோ, டிவி, எஃப் எம் ஆகியவற்றுக்கான ட்ரான்ஸ்மீட்டர் ஏரியல் மேலும் டிவிபி ( டிஜிட்டல் விடியோ ப்ராட்கேஸ்டிங் ) க்கான வான்வெளி ஆண்டனாவும் பதிக்கப்பட்டுள்ளது.

1981 டிசம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த டவரின் அப்சர்வேஷன் டெக்  தினமும் காலை 10 மணியிலிருந்து இரவு 11.30 வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

இதன் மேல் தளத்தில் ஒரு சுழலும் உணவகம் உள்ளது. இந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமானால் அங்கே பியர் அருந்தச் சென்றால் மட்டுமே அனுமதி உண்டு !!! ( பூமி என்னைச் சுத்துதே சுத்துதேன்னு பாடலாமில்ல :)

இந்த கோபுரத்தின் தண்டு மீது ஒரு ஒளிரும் சிற்பம் டிஜிட்டல் கடிகாரமாக வேலை செய்கிறது. இதை ஒளிநேர நிலை என்றழைக்கிறார்கள். வித்யாசமான இதை வடிவமைத்தவர் ஹார்ஸ்ட் ஹெச். பாமன் என்ற சிற்பி. உலகத்திலேயே ரைண்டெர்மில் இருக்கும் இந்த டிஜிட்டல் கடிகாரம்தான் மிகப் பெரிய டிஜிட்டல் கடிகாரம். !

இந்த ரைன் நதி யூரோப்பில் இருக்கும் மிகப் பெரும் நதிகளுள் ஒன்று. வோல்காதான் முதல் நீண்ட நதி. இது இரண்டாவது பெரிய நதி. ஸ்விட்ஜர்லாந்தில் உற்பத்தி ஆகி ரோம், ஃப்ரான்ஸ், இத்தாலி, டச், ஜெர்மனி , நெதர்லாண்ட் என அநேக ஐரோப்பிய நாடுகளில் ஓடி நார்த் சீ எனப்படும் கடலில் கலக்கிறது. இதன் மகாத்மியங்களை இன்னும் வரும் இடுகைகளில் பகிர்வேன். :)


சனி, 24 ஆகஸ்ட், 2019

ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

இத்தாலியில் இருக்கும் இன்னுமொரு அழகான ஹோட்டல். !

யூரோப் டூரின் ஆறாம் நாள் தங்கிய இடம் இது. எடுத்தவுடனே நீண்ட காரிடார்களும் இரு உயர சேர்களும் வரவேற்றன. ! 





கானல்நீர் காட்சிகளும் டார்ட்மெண்ட் நூலகத்தில் எனது நூல்களும்.

2321. தினமணி சிவசங்கரி - சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளில் ஒன்றான ”வாடாமலர் மங்கை” என்ற என்னுடைய சிறுகதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. 
நன்றி தினமணி & வானதி பதிப்பகம். "கானல்நீர் காட்சிகள் “




2322. எனது இருபத்தி இரண்டாவது மின்னூல், “ சினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே.

https://www.amazon.de/dp/B07WHZ9KN5

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

யூரோப் டூரின் நான்காம் நாள் வியாழனன்று இரவு இத்தாலியில் இருக்கும் நோவோட்டல் ரோமா எஸ்ட் என்ற ஹோட்டலில் தங்கினோம். ரூம் சாவியோடு வைஃபைக்கான பாஸ்வேர்டும் கொடுப்பார்கள். அது ரொம்ப சுவாரஸியமானதாக இருக்கும். சில சமயம் ஹோட்டல் பேர்தான் யூஸர் நேம். நம் ரூம் நம்பர்தான் பாஸ்வேர்ட் !!!

மிக அருமையான காம்பாக்டான ரூம்.  வசதியான படுக்கைகள், ரீடிங் டேபிள், லாம்ப், தொலைக்காட்சி, அறையைக் கதகதப்பாக்கும் வசதி, மினி ஃப்ரிட்ஜ், இண்டர்காம், பாத்ரூம் அஸ்ஸசரீஸுடன் மூன்று செட் சிறிய பெரிய டர்க்கி டவல்களும் தந்தார்கள். 




வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - சினிமா விமர்சனம்.

RILIGIOUS CRIMES.

இதை துப்புத் துலக்குவதுதான் இந்தப் படம். அதற்கு நகைச்சுவை முலாம் பூசி அழகாகக் கொடுத்திருக்கிறார்கள்.ஹீரோ & ஹீரோயின் இளமை ததும்புகிறார்கள். அதுவும் ஹீரோவின் புன்னகையும் ஹீரோயின் சினேகாவின் உருளும் கிண்டல் விழிகளும் செம.

மற்ற துப்பறியும் படங்கள் போல லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. ஒரு டிடக்டிவ் (கணேஷ் ) வசந்த பாணியில். அவருக்கு ஒரு பெண் உதவியாளர். இவர்கள் இருவரும் சேர்ந்து மதச் சடங்குகள் என்று கூறி நிகழும் குற்றங்களை ஆய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்.


சுமார் ஒன்றரைக் கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் மிக நல்ல வசூலைத் தந்திருப்பதாகக் கேள்வி.

புதன், 21 ஆகஸ்ட், 2019

குட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.

புத்தகங்களைப் பராமரிப்பது குறித்து ஜெர்மானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். டூயிஸ்பர்க், இம்ஷ்லிங்க் சிட்டி லைப்ரரிக்கு மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது அங்கே இருந்த இரு பெண் லைப்ரரியன்களும் ரிடர்ன் வந்த புத்தகங்களை டிஷ்யூ மூலமாக சுத்தமாகத் துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். டூயிஸ்பர்க் இம்ஷ்லிங்கில் இருக்கும் சிட்டி லைப்ரரி மிக அழகானது. DUISBURG STADTBIBLIOTHEK. ( ஜெர்மனியில் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி )

வந்த தினத்தில் இருந்து பல்வேறு ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் இந்த லைப்ரரியும் புத்தகப் பராமரிப்பும் இங்கே வருகை தந்து வாசித்த குட்டீஸ்களும் பிரமிப்பூட்டியதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை இளஞ்சிறார்களிடம் விதைக்கும் ஜெர்மானியர்களின் திறம் வியக்கத்தக்கது.

வாசிப்பை ஊக்குவிக்க புக் கிளப், ஆசிரியர்கள் மூலம் புத்தகப் பரிந்துரைகள், புக் பைக் மூலம் மக்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்த்தல், குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிக்கச் செய்தல் ஆகியவற்றோடு சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது. சில வருடாந்திரத் திட்டங்களும் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. IKIBU -

IKiBu - Internationale Kinderbuchausstellung in Duisburg


நவம்பர் 2019 இல் இது நடைபெறப் போகிறது. 

ட்ராம், ட்ரெயின் ஆகியவற்றில் கூட புத்தகங்களுடன் பயணிக்கும் மக்களை நீங்கள் காண முடியும்.

வருடத்துக்கு 15 யூரோ செலுத்துவதன் மூலம் இந்த நூலகத்தில் அங்கத்தினராகலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம்.

மிக அழகான இந்த லைப்ரரியை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம் வாங்க. அநேகமா எல்லா புக்கின் தலைப்பையும் படிக்க முடியும் . ஏன்னா ஓரளவு ஜெர்மனும் ஆங்கிலம் போல் இருப்பதால் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனா புரியாது :) இங்கே ஆங்கிலப் புத்தகங்களே கிடையாது என்பதை அந்த ஜெர்மனி நூலகர் பெண்மணி சொன்னார்.



திங்கள், 19 ஆகஸ்ட், 2019

யூரோப். க்ளிக்ஸ். உலகப் புகைப்பட தினம்.EUROPE.CLICKS. WORLD PHOTOGRAPHY DAY.

Marlin Manroe  Strasbourg — at 7Hotel&Fitness.


cuckoo clocks in black forests



ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ப்ரஸில்ஸ் வழியாக ( பெல்ஜியம் ) முதலில்  ஃப்ரான்ஸ், அதன் பின் ஸ்விஸ், தற்போது இத்தாலி வந்தடைந்தோம். இங்கே தங்கிய ஹோட்டலின் பெயர் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா.

இதன் முகப்பு மிக அழகாக வி ஷேப்பில் இருந்தது. இது பக்கவாட்டுத் தோற்றம்.


முதல் நாள் இரவு சென்றதும் ஸ்டார் டூர்ஸில் சொல்லியிருந்தபடி நார்த் இந்தியன் டின்னர்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

செலவழிப்பது எப்படி ? HOW TO SPEND IT.

என்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இந்த இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீன் இது. இன்னும் இதில் என்னென்ன இருக்கு, எப்பிடி எல்லாம் செலவழிக்கலாம், எதிலெல்லாம் செலவழிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. !


புக்கே ரெண்டு ஏ ஃபோர் ஷீட்ஸை இணைச்ச பிரம்மாண்ட சைஸில் இருக்கு. சொல்லப்போனா பேப்பரை மடிச்சா இருக்கும் சைஸ். இதுல உலகளாவிய பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களோடு அவை எதனால் எந்தெந்த நிகழ்வுகளை/ விளையாட்டுக்களை/ போட்டிகளை நடத்துகின்றன, எப்படிப் புகழ் பெற்றனன்னும் தெரிய வருது.

சனி, 17 ஆகஸ்ட், 2019

ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

முதல் நாள் இரவு இல்க்ரிச் 7 ஹோட்டல்ஸில் தங்கல். மறுநாள் ப்ளாக் ஃபாரஸ்ட்ஸ், மதியம் இன்கேங்க், இந்தியன் பாலஸில் சாப்பாடு, ரெய்ன் ஃபால்ஸ்,  மாலை லூசன்லேக்கில் அன்னங்கள் நீந்தும் ஏரிக்காட்சி, லயன் மான்யுமெண்ட் பார்த்துவிட்டு  ஸ்விட்ஜர்லாந்தின் எங்கள்பர்க் ஹெச் ப்ளஸ் ஹோட்டலில் இரவு தங்கல்.

இது வரவேற்பறை.


மிக நீண்ட காரிடார்கள். எங்கெங்கும் ஒளிவெள்ளம். மரத்தால் ஆன தரை.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

1301. மெத்த சந்தோஷம் - மிகுந்த மகிழ்ச்சி/ அளவற்ற சந்தோஷம். 

1302. பீம சாந்தி - 55 ஆவது பிறந்ததினம்.

1303. சாந்திக் கல்யாணம்/உக்ர ரத சாந்தி/சஷ்டியப்த பூர்த்தி  - 60 ஆம் கல்யாணம். ( 60 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சாந்திக்கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது ). கணபதி பூஜை, ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்ரஹ சாந்தி ஆகியன செய்து உற்றம் சுற்றம் அனைவரையும் அழைத்து ஹோமத்தில் வைக்கப்பட்ட கும்ப நீர் சொரிந்து அபிஷேகம் செய்து கொள்வார்கள். ( 59 ஆம் பிறந்த நாளிலும் திருக்கடையூரில் ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வார்கள் ) 

1304. பீமரத சாந்தி - 70 ஆவது பிறந்த தினம். 

1305. விஜய ரத சாந்தி - 75 ஆவது பிறந்த தினம்.  

1306. சதாபிஷேகம் - 80 ஆவது பிறந்த நாள் . ஒருவர் தன் வாழ்நாளில் ஆயிரம்பிறை கண்ட நாளைக் கொண்டாட சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

யூரோப் டூர் செல்வதென முடிவான பின் பல்வேறு டூர்ஸ் & ட்ராவல்ஸை செக் செய்து ஸ்டார் டூர்ஸில் போவதென முடிவாயிற்று. ஆனால் அது லண்டனில் இருந்து புறப்பட்டு ஃபெரி வழியாக கடலைக் கடந்து பெல்ஜியம் வந்து அதன் பின் எல்லா தேசமும் சுற்றி வரும். ஆனால் பெல்ஜியத்தில் ஏறிக் கொண்டாலும் லண்டனில் இருந்து புறப்பட்டு லண்டனுக்குத் திரும்பச் செல்லும் பயணப்படியைச் செலுத்தியே ஆக வேண்டும்.

நாம் ஜெர்மனியில் இருந்து புறப்படுவதால் ப்ரெஸில்ஸில் இருந்து பிக் அப் பாயிண்ட் குறித்து அனுப்பிப் புறப்பட்டோம். டூர் அனுபவங்கள் தனியாக எழுதுவேன் இந்தத் தொடரில் ஸ்டார் டூர்ஸ் & ட்ராவல்ஸ் எங்களைத் தங்க வைத்த ஹோட்டல் பற்றிய அனுபவங்களைத் தொடர்கிறேன்.

நாங்கள் சென்ற மெர்ஸிடிஸ் பென்ஸை கோச் என்று குறிப்பிடுகிறார்கள். ( டூர் முழுக்க அழைத்துச் செல்பவர் டூர் மேனேஜர் - இவர் பெயர் சந்தோஷ் ராகவன், கோச்சை ஓட்டிச் செல்லும் ட்ரைவரை கேப்டன் என்று அழைக்கிறார்கள். இவர் பெயர் கிறிஸ்டியன். )

இந்த கோச்சுகளில் முழுக்க முழுக்க ஏசி வசதியும் பாத்ரூம் டாய்லெட்டும் கூட உண்டு. டிவிடி பார்க்கலாம். விசிறி மடிப்பு திரைச்சீலைகள், செமி ஸ்லீப்பர் ஸீட்டுகள், ஸீட் பெல்ட் கட்டாயம் போடணும். ( 100 கிமீ வேகத்துக்கு மேல இஞ்ச் கூட அதிகமா போக மாட்டாங்க இருந்தும் :)

ஃப்ளைட் போல லக்கேஜுகளை ( ஒரு ஆளுக்கு 20 கிலோ அலவ்ட் ) பேக் பேக் 5 கிலோ இருக்கலாம்.  நெக் பில்லோ, கையுறை, காலுறை, இரண்டு ஸ்வெட்டர்கள், கோட் இதெல்லாமே மூன்று நான்கு கிலோ வந்துவிடும். டாப்லெட் ( சாம்சங் ) ஒரு கால் கிலோ இருக்கலாம். நொறுக்குத்தீனிகள், வாட்டர் பாட்டில், ஒவ்வொரு சீட்டுக்கும் குப்பை போட பைகள்.இத்யாதி.

சரி வாங்க நாம ப்ரெஸில்ஸில் அட்டாமியம், மினி யூரோப் பார்த்துட்டு இரவு தங்க 7 ஹோட்டல்ஸுக்கு போவோம். இது இல்க்ரிச், ஸ்ட்ராஸ்பர்க், ஃப்ரான்சில் இருக்கு.

பத்து மணிக்கு உள்ளே நுழைந்தோம். மர்லின் மன்றோ வரவேற்குறாங்க நம்மை. ( எப்பவுமே ஹோட்டல்களுக்கு இரவு விசிட்தான் பகல் பூரா நகர்வலம் ). இந்தியன் வகை உணவு சுடச் சுடத் தயாரா இருந்தது. போய் வெட்டுமுன்னாடி ரூமை ஒரு க்ளிக்.



இதுக்கு கிங் பெட்னு பேரு. இதுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெட் . மூன்று பேர் தங்கினால் இதில் படுத்துக் கொள்ளலாம். இது இரவில் பெட் பகலில் இதை மடித்தால்  சோஃபா.

பிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை. தினமலர் சிறுவர்மலர் - 29.


சொன்ன சொல்லைக் காப்பாற்றியவன்/ பிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற உயிரைக் கூடக் கொடுப்பார்கள் சிலர், ஆனால் இறைவனைப் பாடிய பாடல்களின் பலனைக் கொடுக்கமாட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தான் நம்பாடுவான் என்ற மனிதன். அவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
திருக்குறுங்குடி என்றொரு ஊருக்கருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்தான் நம்பாடுவான் என்றொரு மனிதன். அவன் தினமும் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்கள் முடித்து திருக்குறுங்குடிப் பெருமானை நியம நிஷ்டைப்படி வணங்கி வந்தான். கைசிகம் என்ற பண் இசையால் அவன் தினமும் இறைவனைப் பாடித் துதித்து வந்தான்.
தினமும் அவன் கோயிலுக்குச் செல்வதை ஒரு பிரம்ம ராட்சசன் கவனித்து வந்தான். ஒரு நாள் நம்பாடுவான் கோயிலுக்குச் செல்லும் போது வழியில் ஒரு பெரிய உருவம் தோன்றித் தடுத்தது. அதுதான் அந்த பிரம்ம ராட்சசன். பூமிக்கு வானுக்கும் இடையே கருத்த உருவத்தில் பிரம்மாண்டமாக இருந்த  அந்த பிரம்ம ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்து வைத்துக் கொண்டான்.
”ஐயோ பசிக்கிறதே.. நீ எனக்கு இப்போதே உணவாக வேண்டும் “ என்று அலறியவாறு தன் கரியகைகளால் நம்பாடுவானைப் பிடித்து வாயின் அருகில் கொண்டு சென்றான் பிரம்ம ராட்சசன். அதைக் கண்டும் பயப்படாமல் நம்பாடுவன் “ ஹே ராட்சசா , சிறிது நேரம் பொறு . நான் பெருமானை வழிபட்டு வந்தபின் உனக்கு உணவாகிறேன் “ என்றான்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பறக்கும் கோட்டைகளை எரித்த பரமன். தினமலர் சிறுவர்மலர் - 28.

பறக்கும் கோட்டைகளை எரித்த பரமன்.
நாம் பறக்கும் வானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வித்யாதரர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் ஆகியோர்தான் அவர்கள் . ஆனால் பறக்கும் கோட்டைகளைப் பற்றியும் அவற்றை பரமன் ஏன் எதிர்த்தார் என்பது பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மனுக்கு கேட்டவர்க்கெல்லாம் மனம் இரங்கி வரம் கொடுப்பதே வேலை. அவ்வளவு இளகிய மனம் படைத்தவர். தாரகாசுரன் என்ற அசுரனுக்கு மூன்று புதல்வர்கள். அவர்கள் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர்.
அவர்கள் அரக்கர் குலமாயிருந்தாலும் தேவர்களை விட அதிக பலமுள்ளவர்களாத் திகழ வேண்டி பிரம்மனைக் குறித்துத் தவமிருந்தார்கள். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி காலின் பெருவிரலில் மட்டும் நின்றபடி கோரத்தவம் செய்தார்கள். நிலத்தில் மட்டுமல்ல நெருப்பிலும் தவம் செய்தார்கள்.
அவர்களின் தவம் தேவலோகம் வரை சென்று தேவர்களை வாட்டியது. தனது இந்திர பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோவென இந்திரனும் பயந்து போனான். அனைவரும் பிரம்மாவிடம் சென்று  அவ்வரக்கர்களுக்கு வரம் ஏதும் கொடுத்துவிட வேண்டாம் என இறைஞ்சினர்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ஜெர்மனியில் ஒரு பார்பக்யூ.

ட்ராம் மற்றும் ட்ரெயின் வசதிகளால் டூயிஸ்பர்க்கிலிருந்து சுமார் 131 கிமீ தூரத்தில் உள்ள வேர்ல் என்ற நகரில் மகனின் நண்பர் யுஹானஸ் ( ஜெர்மனியின் ஜெ எல்லாம் யே என்று உச்சரிக்கப்படுகிறது. - ஜோகானஸ் ) என்பவரின் வீட்டிற்கு எளிதாகச் சென்றோம். அவர் மனைவி கேதரின், பேனாஃப் என்ற ஸ்டேஷனில் ரிசீவ் செய்து அநாயசமாகக் கார் ஓட்டிக்கொண்டே எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ) 

அது ஒரு சனிக்கிழமை. அதனால் என்ன பார்பக்யூ ஏற்பாடு செய்திருப்பதால் அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும் எனச் சொல்லப்பட சென்றேன். :) அங்கே வெஜ் இல்லை எல்லாமே நான்வெஜ்தான். நாமும் மாமிசபட்சிணிதானே.

இதோ நண்பர் வீடு வந்தாச்சு. இங்கே வீடு பராமரிப்புதான் கொஞ்சம் கஷ்டம். இது தோட்டத்தோடு சேர்ந்த வீடாக வேறு இருந்தது. அங்கே சூரிய காந்தி, ஆப்பிள், இன்னும் பல செடிகளும் பழங்களும் இருந்தன. புல் வெளியின் ஓரத்தில் குழந்தைகள் விளையாடும் பார்க் போல ஊஞ்சல் எல்லாம்.

யுஹன்னஸின் மகள் பெயர் அலிஷா, மனைவி பெயர் காதரின். அவரின் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். யுஹான்னஸின் வீட்டில் இரு கெஸ்ட்களும் இருந்தார்கள். துருக்கி மற்றும் ஈஜிப்டில் இருந்து இரு மாணவியர் அங்கே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாள் சிறப்பு விருந்தினராக அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் இவரது மகள் அலீஷாவும் கல்லூரிப் பருவத்தில் இப்படி அயல்தேசத்தில் விருந்தாளியாகத் தங்கி அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல், சமூக அரசியல், கல்வி முறைகளை அவதானிக்க முடியும்.


நிற்க. இப்போ நாம பார்பக்யூவுக்கு வருவோம்.

ஜெர்மனியில் வாடகை வீட்டு காண்ட்ராக்ட் போடும்போதே பால்கனியிலோ, தோட்டத்திலோ இம்மாதிரி பார்பக்யூ அடுப்பு ( கரி ) வைக்கவும் ஷரத்து எழுதிக் கையெழுத்திட்டுக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனியின் வீடு, ரோடு ஆகியவற்றில் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் அதிகம். சுத்தமாக இருக்க வேண்டும். சத்தமே கூடாது. ( பார்ட்டிக்கு எல்லாம் நேரம் காலமிருக்கு) மதியம் இரண்டு மணிக்கு நம்ம பார்பக்யூ டைம்.

இதோ பார்பக்யூ அடுப்பு ரெடி. கரியும் கூட. லிக்னைட் கார்ப்பரேஷனில் வெட்டி எடுத்து வந்தமாதிரி பாறைக் கரித்துண்டுகள்.

இந்திரனின் துடுக்குத்தனம். தினமலர் சிறுவர்மலர் - 27.

இந்திரனின் துடுக்குத்தனம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் . அதனால் கிட்டிய அமிர்தத்தைக் குடித்து தேவர்கள் பலம் பெற்றார்கள். ஆனால் ஏற்கனவே அழகாபுரியில் அனைத்து ஐஸ்வர்யங்களோடும் இருந்த தேவர்கள் அமிர்தம் அருந்த வேண்டிய அவசியம் என்ன.? எல்லாவற்றுக்கும் இந்திரனின் துடுக்குத்தனம்தான் காரணம். அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தேவலோகம் தங்கநிற வெளிச்சத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது. தன் யானையின் மேல் இந்திரபுரியின் இராஜபாட்டைகளில் உலாவந்து கொண்டிருந்தான் இந்திரன். அமரர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் கந்தர்வர்களும் கானமிசைக்க தேவலோக கன்னியர் நடனமாடி பூத்தூவியபடி முன் வந்தனர்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஹம் காமாட்சி கோவிலில் ஆதி சங்கரர் வரலாறு.

ஹம் காமாட்சி அம்மன் கோவிலின் எதிரிலேயே அக்கோவிலின் அன்னதான உணவுக்கூடமும் அமைந்துள்ளது. அங்கேயே முன்புறம் உள்ள இல்லத்தில் அக்கோவில் உருவாகக் காரணமாக இருந்த பாஸ்கரன் என்பவரும் வசித்து வருகிறார். பின்புறம் அன்னதானக் கூடமும் ரெஸ்ட் ரூமும் உள்ளது.

கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். :)


ஆதி சங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில். ஜெர்மனி.

ஜெர்மனியில் இருக்கும் ஹம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் ப்ரசித்தி பெற்றது. இது ஐரோப்பாவில் அமைந்த இந்துக் கோவில்களில் மிகப் பெரிய ஆலயம் என்று சொல்கிறார்கள். அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் காமாட்சியைக் குடும்பத்தாரோடு தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

டுசல் டார்ஃபிலிருந்து 120 கிமீ தூரத்தில் சீகன்பெக்ஸ்ட்ராஸே என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலை ட்ராட்மண்ட் என்ற இடம் வரை ட்ராம் வண்டி மூலமாகவும் அதன் பின் பேருந்து மூலமாகவும் சென்று அடைந்தோம்.

துர்வாசரைத் துரத்திய சக்கரம். தினமலர். சிறுவர்மலர். 26.

துர்வாசரைத் துரத்திய சக்கரம்.
சிறியவர்கள் துஷ்டத்தனம் செய்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் முனி சிரேஷ்டர் ஒருவரே ஒரு முறை அல்ல இருமுறை இப்படி துர்ப்புத்தியோடு செயல்பட்டு அல்லலுக்கு ஆளானார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முன்னொரு முறை பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது துரியோதனனின் துர் எண்ணப்படி வனத்துக்குத் தன் சிஷ்யர்களோடு உணவருந்த வந்தார் துர்வாசர். நீராடிவிட்டு உணவருந்த வருவதாகக் கூறிவிட்டு சிஷ்யர்களோடு சென்றுவிட்டார்.
சூரியன் பாண்டவர்களுக்கு அளித்த அட்சய பாத்திரம் ஒருநாளில் ஒருமுறையே உணவளிக்க வல்லது. துர்வாசர் வந்த அன்று அப்பாத்திரத்தில் உணவு பெற்று கழுவிக் கவிழ்த்துவைத்துவிட்டாள் திரௌபதி. அதனால் திடீரென வந்தவர்க்கு உணவளிக்க முடியாமல் தன் அண்ணனாம் கண்ணனை வேண்ட அவர் அப்பாத்திரத்தில் ஒட்டி இருந்த உணவுத் துணுக்கை உண்டு திருப்தியாக தன் வயிற்றைத் தடவ  நீர் நிலையில் நீராடிய துர்வாசருக்கும் அவரது சிஷ்யருக்கும் வயிறு நிறைந்தது. அதனால் அவர் தர்மரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு தன் சிஷ்யர்களுடன் உணவை மறுத்து நடையைக் கட்டினார்.  அக்கதையை நாம் அறிவோம்.
இன்னொரு முறையும் அவ்வாறே அவர் அம்பரீஷன் என்ற மன்னனிடம் செயல்படுத்த திருமாலின் சுதர்சனம் துர்வாசரைத் துரத்தியது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சனி, 3 ஆகஸ்ட், 2019

கர்ணன் செய்யாத தானம். தினமலர் சிறுவர்மலர். 25.

கர்ணன் செய்யாத தானம்.
பொன், வைரம், வைடூரியம், நவரத்தினம் மட்டுமல்ல தனது அவைக்கு வந்தவர்க்கெல்லாம் தனது கரூவூலத்திலிருந்து கை நிறைய மனம் நிறைய எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தவன் கர்ணன். கையில் எது இருந்தாலும் பிறர் கேட்டால் கொடுத்துவிடுவான். பிறந்ததில் இருந்து தனது உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களையும் வழங்கியவன். ஆனால் அவன் எத்தனைதான் தானம் செய்திருந்தாலும் ஒரு முறை கூட அன்னதானம் செய்யாததால் பட்ட துன்பத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
யதுகுலத்தைச் சேர்ந்த சூரசேனரின் மகள் பிரீதா. சூரசேனர் பெண்குழந்தை இல்லாத தன் நண்பரான குந்தி போஜருக்கு தன் மகளான பிரீதாவைத் தத்துக் கொடுத்தார்.  குந்தி போஜரின் மகளானதும் இவர் குந்தி என அழைக்கப்பட்டார். குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி கிடைத்த ஒரு மந்திரத்தைச் சோதிக்க எண்ணினார். அப்போது குளக்கரையில் நின்றதால் சூரியனின் ஒளி பட சூரியபகவானை நினைத்து இவர் அம்மந்திரத்தைக் கூற உடனே கர்ணன் பிறந்தான்.
கவசகுண்டலங்கள் அணிந்த அழகான குழந்தை. தந்தைக்குத் தெரியாமல் அக்குழந்தையை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வது. எனவே குந்தி அதை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அக்குழந்தையை அதிரதன் ஒருவர் கண்டெடுத்து தன் மகனாக வளர்த்து வந்தார். அவனை மன்னர்களுக்கிடையேயான  ஒரு போட்டியில் கர்ணன் போட்டியிட விரும்ப அவனை துரியோதனன் ஆதரித்து மன்னனாக்கினான்.
Related Posts Plugin for WordPress, Blogger...