ஜெர்மனியில் இருக்கும் ஹம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் ப்ரசித்தி பெற்றது. இது ஐரோப்பாவில் அமைந்த இந்துக் கோவில்களில் மிகப் பெரிய ஆலயம் என்று சொல்கிறார்கள். அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் காமாட்சியைக் குடும்பத்தாரோடு தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
டுசல் டார்ஃபிலிருந்து 120 கிமீ தூரத்தில் சீகன்பெக்ஸ்ட்ராஸே என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலை ட்ராட்மண்ட் என்ற இடம் வரை ட்ராம் வண்டி மூலமாகவும் அதன் பின் பேருந்து மூலமாகவும் சென்று அடைந்தோம்.
ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து நீண்ட பூத்தோரணம் கொண்ட நடையைத் தாண்டியதும் கோவில் அமைந்துள்ளது. எழில்மிகு திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாளை தரிசித்தோம்.
இக்கோவில் திரு. பாஸ்கரன் என்ற ஈழத்தமிழரின் முயற்சியால் உருவானது. 1985 இல் இருந்து வழிபாட்டில் இருந்தாலும் இக்கோவில் உருவானது 2002 ஆம் ஆண்டுதான்.
தமிழ்க்கோவில் அமைப்புப்படி உருவானது இக்கோவில்.
சந்நிதியின் எதிரே கொடிமரம்.
பலிபீடமும் சிம்ம வாகனமும்.
எழில்வடிவான துவாரபாலகியர் இருபுறமும் நிற்கிறார்கள்.
உற்சவர் திருமேனி.
உள்ளே சக்தியின் இன்னும் சில எழில் உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன .
பிரகாரத்தில் நவக்ரஹ சன்னிதி.
வெள்ளியன்று மிகவும் விசேஷம் என்பதால் மதிய பூஜைக்குச் சென்றிருந்தோம். ஈழத்தமிழர்கள் அநேகரைக் காண முடிந்தது.
வடிவழகான தூண்களுடன் ப்ரகாரம். முருகனும் விநாயகரும். சண்டேசரும் குடிகொண்டிருக்கிறார்கள்.
ஆதி சங்கரர்.
திரும்பவும் அம்மன் சந்நிதி. மற்றும் உற்சவர். ஜூலை 7 ஆம் தேதி வாகில்தான் ஆண்டுத் தேர்த்திருவிழா முடிந்திருந்தது.
தேர்த்திருவிழாவின் போது காவடி எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் ஆகியன நேர்ந்து கொண்டு செய்கிறார்கள் பக்தர்கள்.
உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட 15,000 பக்தர்கள் வந்து கலந்து கொள்ளும் தேர்த்திருவிழா இது.
இத்திருவிழாவுக்காக ”ஹம் காமாட்சி புகையிரதம்” என்று ஹாம் புகைவண்டி நிலையத்திலிருந்து தமிழில் எழுதப்பட்ட சிறப்புப் பேருந்தும் இயக்கப்படுகிறது !
சிவன் மற்றும் பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
வள்ளி தெய்வானை முருகன், லெக்ஷ்மி நாராயணன் , ஐயப்பன் ஆகியோரும் காட்சி அளிக்கிறார்கள்.
முழுவதும் அர்ச்சனையும் தீபமும் பார்த்துப் பிரதட்சிணம் செய்து வணங்கி அமர்ந்தோம். மனம் நிறைவாக இருந்தது.
இங்கே மதிய உணவும் கிடைத்தது. அதை இன்னொரு இடுகையில் சொல்கிறேன்.
இது கோவில் வாசல் கதவு. மிகப் பிரம்மாண்டம்.
வாயிலின் இருபுறமும் அன்னைக்குக் காவலாய் விநாயகரும், முருகனும்
அம்பாளுக்கும் பூங்கொத்து.
இங்கே திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
தேர்க்கொட்டகை. !
ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திற்குரிய சிறப்புப் பண்டிகைகளோடு மாதாமாதம் தேவி மஹாத்மிய ஹோமம் நடப்பதாகக் கூறினார்கள்.
கோவில் நந்தவனம்
ஜூலையில் நடந்து முடிந்த ஆண்டுத் தேர்த்திருவிழா விவரம்.
கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலுக்கு உணவுக் கூடம் இக்கோவிலுக்கு எதிரிலேயே தனியாக அமைந்து உள்ளது.
அதில் சங்கராச்சாரியார் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் சித்திரமாக வரையப்பட்டுள்ளது சிறப்பு. காமாட்சி என்றால் அங்கே சங்கரர் இல்லாமலா. இக்கோவிலே ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி கோவில் என்றுதான் அழைக்கப்படுகிறது.
இக்கோவில் காலை 8 முதல் மதியம் 2 வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும்.
அடியவர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித்தரும் காமாட்சியின் பிரசாதத்தை அடுத்த இடுகையில் தருகிறேன். :)

நீங்கல் பாட்டுக்கு ஜெர்மனி பிரான்ஸ் என்று வலம் வருகிறீர்கள். நியூ ஜெர்சிக்கு வரும் ஐடியா உண்டா?
பதிலளிநீக்குஜெர்மனியில் காமாட்சி அம்மன் ஆலயம் - உங்கள் தயவில் நாங்களும் தரிசித்தோம். நன்றி சகோ.
பதிலளிநீக்குவரணும் செல்லப்பா சார். எப்போன்னுதான் தெரில. வந்தா சொல்லுறேன் :)
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
நல்ல தகவல்
பதிலளிநீக்குவாழ்க வளத்துடன்