அவர்கள் கணவர் வெங்கட்ராமனும் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த ஒத்துழைப்பு. கணவர் பக்கபலமாக இருந்து அனைவரையும் வரவேற்றார். புகைப்படங்கள் எடுத்தார். போரூர் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஒருவரும் இந்த க்ளப்பில் மெம்பராக இருந்தமையால் அவர் அங்கு பிள்ளைகளை செலக்ட் செய்திருந்தார். பொதுவாக எல்லா இடங்களிலும் எனக்குத் தோன்றுவதுதான் இது. பிள்ளைகள் அனைவரும் கற்பூரபுத்திக்காரர்கள். அம்மா அப்பா உதவி இருந்தால் இன்னும் ஜொலிப்பார்கள். முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகள் அல்லது அம்மா அப்பா மிகுந்த கஷ்டத்தோடு (அடிப்படைக் கல்வி மட்டும் படித்தவர்கள். பிள்ளைகளுக்குச் சொல்லித்தரத் தெரியாது.) ஜீவனம் செய்பவர்கள்.
ருக்கு அம்மா அடிப்படையில் டீச்சர் என்பதால் தெனாலி ராமன் , பீர்பால் கதைகள் எல்லாம் சொல்லி குழந்தைகளுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்தினார்கள். அம்மா சொன்ன குட்டிக் கதைகளில் நானும் மயங்கிவிட்டேன். மொத்தக் கூட்டமும் கூட. ( அம்மா வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை ஜெயா தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்கு கதை நேரம் என்ற தலைப்பில் கதை சொல்கிறார்கள். நேரமிருப்பின் கேளுங்கள்.). அம்மாவின் ஸ்பீச் ஒரு பர்ஃபெக்ட் ஸ்பீச்.
அடுத்து நான் சில வார்த்தைகள் அறிவுரை கூறினேன்., “ கலைஞர், சூப்பர்ஸ்டார், ருக்கு அம்மா போன்ற பெரிய ஆளுமைகள்தான் குட்டிக் கதைகள் சொல்வார்கள். எனக்கு குட்டிக் கதைகள் எல்லாம் சொல்லத் தெரியாது. “ என்றவுடன் அனைவரும் புன்னகைத்தார்கள்.
“ படிப்பு ஒன்றுதான் நம்மை உயரவைக்கும். படிப்பு ஒன்றுதான் கள்வர் கொள்ள முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையை யாரும் அபகரிக்கவோ இல்லையென்று சொல்லவோ முடியாது. எந்த சூழ்நிலையிலும் விடா முயற்சியோடு படியுங்கள். அரசாங்கம் நிறைய வசதிகள் செய்து கொடுத்திருக்காங்க. மதிய உணவு , கல்வி எல்லாம். நன்கு படித்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் சலுகைகளும் கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவருக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. நன்கு படியுங்கள். நல்ல உத்யோகங்களில் அமருங்கள். ஆனால் லஞ்சம் கட்டாயம் வாங்காதீர்கள். ஊழல் செய்யாதீர்கள்.
அப்புறம் முக்கியமான விஷயம் என்னன்னா இந்த லேடீஸ் க்ளப் மெம்பர்கள் எப்படி உங்க கல்விக்கு உதவுறாங்களோ அதுபோல நீங்களும் நன்கு படித்து நன்கு சம்பாதிக்கும்போது உங்களால் முடிந்த கல்வி உதவிகளை அடுத்தவர்க்கு செய்யுங்கள். PAY IT FORWARD என்பார்கள். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். என்பதுபோல நீங்களும் அடுத்தவருக்கு உதவ வேண்டும். அதுதான் உண்மையான தொண்டு. எப்போதும் நாம் வாங்குபவராகவே இருக்கக் கூடாது., கொடுப்பவராகவும் உயரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்பிய செய்தி.”
இந்த க்ளப்பை சேர்ந்த எல்லாரும் மொத்தமாக சீருடை, புத்தக செலவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தனியாக தங்களுடைய அன்பளிப்பாக நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்குப் பணப்பரிசு அளித்தார்கள்.
பின் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த லேடீஸ் கிளப்பின் சேவைகள் போரூர் டைம்ஸில் வந்துள்ளதாக சொன்னார்கள். அனைவருமே லேடீஸ் ஸ்பெஷலின் வாசகியர். ஒவ்வொருவரும் தங்கள் ஹாபியையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்கள். பத்மாமணி அம்மா விதம்விதமான நகைகள் செய்கிறார். இன்னும் இருவர் புடவைகளில் எம்ப்ராய்டரி செய்கிறார்கள். இன்னும் இருவர் சின்னதாக விலைமதிப்புள்ள ஸ்டோன்ஸ் எல்லாம் ஒட்டிய பெயிண்டிங்குகள் செய்கிறார்கள். சிலர் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறார்கள். சிலர் இலவசமாக ஸ்லோகம் வகுப்புகள் எடுக்கிறார்கள். முடிந்த எல்லா சேவைகளும் செய்கிறார்கள். அவர்களோடு உரையாடி வந்தபின் எனர்ஜி பூஸ்டர் போட்டது போல் இருந்தது. வாழ்க விக்னேஷ்வரா., வளர்க அவர்களின் சேவை. !!!
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபடிப்பு ஒன்றுதான் நம்மை உயரவைக்கும். படிப்பு ஒன்றுதான் கள்வர் கொள்ள முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையை யாரும் அபகரிக்கவோ இல்லையென்று சொல்லவோ முடியாது.
பதிலளிநீக்கு-மிகப் பயனுள்ள அறிவுரைகள் சொல்லியிருக்கிறீர்கள். ருக்கு அம்மா சொன்ன நல்ல கதைகளில் ஒன்றிரண்டை எங்களுக்கு வழங்கியிருந்தால் நாங்களும் ரசித்திருப்போமே தேனக்கா... சரி, வரும் ஞாயிறு ஜெயா தொலைக் காட்சியில் பார்க்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். அருமையான சில விஷயங்கள் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன. நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதொலைகாட்சியில் பார்க்கிறேன்
நன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
நன்றி ஸாதிகா
நன்றி கோபால் சார்
நன்றி நேசன்
நன்றி குமார்
நன்றி சரவணன்