எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 டிசம்பர், 2010

கவிதை என்பது என்ன..?

”I THINK POETRY COMES TO U WHEN U R RESTLESS., UNEASY ., DEPRESSED..... ” -- DHARMENDRA.. --IN HINDU ..

IS IT SO ALWAYS..DHARAM.. ??

கவிதை என்பது இருப்பு கொள்ளாத நிலையிலோ., சரியில்லாத சூழலிலோ., மனச்சோர்வுற்ற போதோ வருவதுதானா.. தரம் தியோல்..

ஏன் காதல்., இன்பம் ., அமைதி., போர்., எல்லாம் இல்லையா..


ஏதோ ஒன்றைப் பகிருதல் என்பதுதானே கவிதை.. நான் நினைத்த ஒன்றை அடுத்தவரையும் உணரச்செய்தல்.. இன்னும் சொன்னால் உணர்வுக் கடத்தல்..

”பாஜ் மன் ஹரி கா நாம்.. ” ( BAAJ MAN HARI KAA NAAM) “இறைவன் பேரைப் பாடு மனமே .” தனிமையில் எழுதப்பட்டதாயிருக்கலாம்..

வருத்தம்., வெறுப்பு., சோகம்., பக்தி தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது..

தென்னகத்தின் ட்ரீம் கேர்ள் ஹேமாவை மணம் புரிந்தபோது., வரவில்லையா கவிதை மனதில்.. இரண்டு கம்பீரமான பையன்கள்., இரண்டு அழகுப் பெண்களின் அப்பாவாகவும் ஆனபோது..

ஷோலேயில் பார்த்த தர்மேந்திராவுக்கு இப்போது 75 என்பது ஆச்சர்யம்தான்.. YAMLA PAGLA DEEWANA வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. ரஜனிகாந்த் அவார்டு கிடைத்ததற்கும்.. மூன்று தலைமுறையாக வெற்றிகரமான ஹாண்ட்சமான ஹீரோவாய் இருப்பதற்கும்.. மூன்று நடிகர்களை கொடுத்ததற்கும்,, சன்னி., பாபி., ஈஷா..

டிஸ்கி:- கவிதை என்பது என்ன ..? உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்துக்குங்க மக்காஸ்.. இதை கேக்கதான் தரம் தியோலோட கருத்தை இங்கே பகிர்ந்தேன்..

லேடீஸ் ஸ்பெஷலில் இன்னும் நிறைய கருத்துக் கணிப்பு இருக்கு.. அதுக்கு முன்னோட்டம்தான் இது..

33 கருத்துகள்:

  1. ஒரளவு உண்மைதான் தேனம்மை.. ரொம்பவும் மனசு சங்கடப்படும் போது, restless யா உணரும் போது தான் வருது.. அது காதலா இருக்கட்டும், காதல் தோல்வியா இருக்கட்டும். அமைதியை, சந்தோசத்தை வேறு மாதிரியும் பகிர்து கொள்ளலாம்.. பாரதி மிக நெருக்கடியான காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் தான் அவரின் சிகரம் ..கண்ணதாசனையும் குறிப்பிடலாம்..

    பதிலளிநீக்கு
  2. ஒரளவு உண்மைதான் தேனம்மை.. ரொம்பவும் மனசு சங்கடப்படும் போது, restless யா உணரும் போது தான் வருது.. அது காதலா இருக்கட்டும், காதல் தோல்வியா இருக்கட்டும். அமைதியை, சந்தோசத்தை வேறு மாதிரியும் பகிர்து கொள்ளலாம்.. பாரதி மிக நெருக்கடியான காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் தான் அவரின் சிகரம் ..கண்ணதாசனையும் குறிப்பிடலாம்..

    பதிலளிநீக்கு
  3. உங்க வருத்தம் புரியுது. ஆனா, இதை ஒரு பொறுப்பான பெரிய மனிதர் சொல்லிருந்தா சீரியஸா எடுத்துக்க வேண்டியதுதான். இவர் சொல்றதைப் போய் ஏன்....?

    பதிலளிநீக்கு
  4. கவிதை பற்றி நல்லதோர் பகிர்வு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஏதோ ஒன்றைப் பகிருதல் என்பதுதானே கவிதை.. நான் நினைத்த ஒன்றை அடுத்தவரையும் உணரச்செய்தல்.. இன்னும் சொன்னால் உணர்வுக் கடத்தல்..

    YES ::)))

    பதிலளிநீக்கு
  6. கவிதைய பத்தி அழகா எழுதியிருக்கறீங்க....

    பதிலளிநீக்கு
  7. சந்தோஷத்தின் உச்சத்திலும் கவிதை
    சோகத்தின் உச்சத்திலும் கவிதை
    குழப்பத்தின் உச்சத்திலும் கவிதை
    தெளிவின் உச்சத்திலும் கவிதை
    உயிர் பெற்று அதன் முழுவடிவம் பெறுகிறது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  8. கவிதை வெளிப்படும் தருணம் உணர்வின் முழு வெளிப்பாடாகத்தான் இருக்கும். அப்போது எழுதுபவரும் ரெஸ்ட்லஸ் ஆக உணர்வதில் வியப்பென்ன?!

    பதிலளிநீக்கு
  9. கவிதை வெளிப்படும் தருணம் உணர்வின் முழு வெளிப்பாடாகத்தான் இருக்கும். அப்போது எழுதுபவரும் ரெஸ்ட்லஸ் ஆக உணர்வதில் வியப்பென்ன?!

    பதிலளிநீக்கு
  10. கவிதை என்பதை வாசித்து, கும்மி அடிக்கும் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.

    கும்மி அடிப்பதற்கு தோதா எழதப் படும் கவிதைகளை நாங்க வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு, கவிதையை வாசிக்க மட்டும் தான் தெரியும். அதை எந்த மன நிலையில், கவிஞர்கள் எழுதினார்கள் என்று ஆராய்ந்து பார்த்ததில்லை. நீங்க எல்லாம் காரணம் சொன்னால் கேட்டுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //கவிதை என்பது என்ன ..? உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்துக்குங்க மக்காஸ்.. //
    இது புது விதமா இருக்குதே...

    பதிலளிநீக்கு
  13. கவிதை...
    உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு..
    யாருடைய வாழ்வையும் நாம் வாழ கிடைத்த இளைப்பாறல்..

    பதிலளிநீக்கு
  14. சித்ரா மேடம் சொன்னதை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. கவிதையென்பது ஒரு அழகிய மொழி.அது ஒரு சுய தேடல்.
    கவிஞனின் அக உந்துதலின் கலாப்பூர்வமான வெளிப்பாடு.
    வார்த்தையெனும் காலிக் குடுவையை தன் உணர்வுகள் நிரப்பி
    பிரிதொரு பிரபஞ்சம் படைக்கும் ரசவாதம்.வாய்த்திருக்கும் ஒரே வாழ்க்கையில் சகல ஜீவராசிகளின் வாழ்க்கையையும் வாழ்ந்து தீர்த்திடத் துடிக்கும் பேராவலின் நீட்சி...

    பதிலளிநீக்கு
  16. எனக்கு கவுஜ தான் எழுத தெரியும் ..

    வரியா வரியா எழுதினா கவிதை

    பதிலளிநீக்கு
  17. உள்ளத்தின் வெளிப்பாடு தான் கவிதை தேனம்மை.

    எல்லோருக்கும் மனதில் கவிதை வரும் ஒரு சிலரே வெளிப்படுத்துவர்.

    பதிலளிநீக்கு
  18. //ி:- கவிதை என்பது என்ன //

    என்னை மாதிரி ஆட்கள் தலையை பிய்த்துக்கொண்டால் வருவது ரெண்டு வரி
    அதே புலவர்கள் பிய்த்துக்கொண்டால் வருவது ரெண்டாயிரம் வரி

    புலவர்கள் பிறக்கிறார்கள் ..பிறப்பிக்க படுவதில்லை...!!

    பதிலளிநீக்கு
  19. மனதின் சூட்சமத்திலிருந்து உதிரும் ஒலிகள் - கவிதை

    பதிலளிநீக்கு
  20. கவிஞர்கள் எல்லாவற்றையும் கவிதையாய் பார்க்கலாம்.. கவிஞனுக்குத்தான் அது தெரியும். என்னைப் போன்ற கத்துகுட்டிகளுக்கு அமைதியின்மைதான் கவிதைக்கான சூழலை உருவாக்குகிறது என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  21. உணர்வுக்குவியல் செய்யும் கடத்தல்தான் கவிதை.. அதற்கு மனச்சோர்வோ, அழுத்தமோ தேவையில்லை. உண்மையில் சந்தோஷமான மன நிலையிலும் சோகக்கவிதை பிறப்பதுண்டு..

    பதிலளிநீக்கு
  22. ஆசியா ஓமர் சொன்னதுடன் உடன்படுகிறேன். மேலும் நான் எழுதிக் கவிதை என்று பிறரால் ஒத்துக் கொள்ளப்பட்டவை ஒரு விதமான தீவிர மனநிலையில் எழுதப்பட்டவை தாம். வேறுவிதமாக வெளிப்படுத்த முடியாத ஆழ்மனதின் ரகசியங்களும் கவிதையாகக் கூடும்.

    பதிலளிநீக்கு
  23. நமது எண்ணங்களை உணர்வுகளுடன் பகிர்ந்து கொள்வது...

    கவிதையைபற்றி சிறப்பாக சொல்லியிருக்கீங்க அருமை

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    பதிலளிநீக்கு
  24. Only those who are different from normal beings are poets. I mean, all of us are normal as we look at things as they are. Not as they should be, or as they should not be. The perspective of the poet is different from us. It should be expressed interestingly in prose, and, with interest and beauty in poetry.

    Therefore, it is not sufficient to have different perspective; it is essential to have subtle and deep understanding of the language in which the poet expresses himself, plus to have the clever way to manipulate the language to bring out what is in his mind to make you understand him and enjoy his feelings naturally.

    His mind, his choice of words, and his unique perspective - are things you cant attain. Mostly, the poets are born with such minds, and later aquire the deep understanding of their languague, by reading fellow authors.

    Out of such a mind of poet, poetry comes out.

    You dont write such blog post asking your blogger friends to post their views. Instead, just take the anthology of Bharathi poems, read them again and again, and also, read all about his life.

    You will soon come to know who the poets are; and why we, the normal beings, should call them 'mad'!

    Dont mistake me: Unless they are 'mad', they cant be poets!

    kaviththuvam enbathu sol nayamum porul nayamum, vinotha paarvaiyumaakum. kavithtuvam illaamal kavinjan illai.

    பதிலளிநீக்கு
  25. //" கவிதை என்பது என்ன ..?"//

    மனசுக்குப் பிடிச்சது எல்லாமே கவிதைதான். ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப் பட்ட வரிகள் மட்டுமல்ல, குழந்தையின் சிரிப்பு, மனைவியின் நாணம், தாய்மையின் அன்பு, மலர்கள், வனம், வானம், பூமி....!!

    பதிலளிநீக்கு
  26. ///என்னை மாதிரி ஆட்கள் தலையை பிய்த்துக்கொண்டால் வருவது ரெண்டு வரி
    அதே புலவர்கள் பிய்த்துக்கொண்டால் வருவது ரெண்டாயிரம் வரி////

    நான் சொல்ல நினைத்ததை அப்பிடியே சொல்லிட்டீரய்யா சூப்பர்....

    பதிலளிநீக்கு
  27. Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.
    கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது . -கலில் ஜிப்ரான்

    பதிலளிநீக்கு
  28. கவிதை

    க-னவுகளும் கற்பனையில் காணலிடை
    வி-தைத்த விதை விளைந்திங்கு
    தை-மாத அறுவடையில் கவிதையாக

    பதிலளிநீக்கு
  29. கருத்துக்களுக்கு நன்றி வெற்றி., ஹுசைனம்மா., ரோஷணி., சக்தி., சங்கவி., ஆசியா., ரிஷபன்.,, ராகவன்நைஜீரியா., சித்து., பாரதி., அக்பர்., வருணன்., நசர்., கோமதி., ஜெய்., அஷோக்., அமைதிச்சாரல்., தீபா., டி வி ஆர்., மாணவன்., சை கொ ப., பெயரில்லா., ஸ்ரீராம்., ஆர் ஆர் ஆர்., நாஞ்சில் மனோ., பிரபு., தினேஷ்.

    பதிலளிநீக்கு
  30. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...