எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

அடைப்பு..

அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..

இறங்கிக் கறுப்பாகி.,
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்.,
அள்ளிப் போட்டவனுக்கு...,


ஆயிரத்தை ஐநூறாக்கி
அனுப்பிய பின்..
கறுப்புத் திட்டாய்
நாறிக் கிடக்கிறது..

வயிற்றுப் பசியோடு
வந்த அவனை
இறக்கி விட்டதற்கான
உறுத்தல்..

டிஸ்கி:- இந்தக் கவிதை வியாழன் 30., டிசம்பர்., 2010 கீற்றுவில் வெளிவந்துள்ளது..

19 கருத்துகள்:

  1. //வயிற்றுப் பசியோடு
    வந்த அவனை
    இறக்கி விட்டதற்கான
    உறுத்தல்..//

    இந்த வரிகள் மனதை ஏதோ செய்கிறது அம்மா,

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கவிதை மிக அருமை.

    "நாற்சதுரம்" என்பது சரிங்களா? (வெறும் சதுரம் என்று இருக்க வேண்டுமோ?)

    பதிலளிநீக்கு
  3. //இறங்கிக் கறுப்பாகி.,
    இடுக்கெல்லாம் குத்தி..
    மயிற்கற்றையும்.,
    பஞ்சுக் குப்பையும்.,
    அள்ளிப் போட்டவனுக்கு...,

    ஆயிரத்தை ஐநூறாக்கி
    அனுப்பிய பின்..
    கறுப்புத் திட்டாய்
    நாறிக் கிடக்கிறது..

    வயிற்றுப் பசியோடு
    வந்த அவனை
    இறக்கி விட்டதற்கான
    உறுத்தல்..//

    அருமையான கவிதை அம்மா.
    எதற்கெல்லாமோ பேரம் பேசுகிறோம்? இதற்குமா?பாவம்.பாதாள சாக்கடை சுத்தம் பண்ணுபவர்கள் நிலை!
    கவிதை கீற்றுவில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அவர்களை இப்படி வேலை வாங்கி விட்டு இன்னும் கொஞ்சம் தொகை கொடுத்து இருக்கலாம் பாவம், வயிற்றுப் பசிக்காக இந்த மாதிரி வேலை செய்கிறார்கள் என்று மனம் உறுத்தும்.

    மன உறுத்தலை அழகாய் கவிதை ஆக்கிவிட்டீர்கள் தேனு.

    கீற்றுவில் வெளி வந்ததிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. துப்புரவு தொழிலாளரக்ளைப்பற்றி ஒரு அருமையான கவிதை பாடி அசத்திட்டீங்க தேனம்மை.

    பதிலளிநீக்கு
  8. / வயிற்றுப் பசியோடு
    வந்த அவனை
    இறக்கி விட்டதற்கான
    உறுத்தல்.. /

    சில நேரங்களில் சில விசயங்களை மறந்துவிடுகிறோம்.. :(

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  9. கீற்றுவில் தாங்கள் ஆரம்பித்திருக்கும் சகாப்தம் தொடர வாழ்த்துகள் தேனம்மை..மிகவும் அழகான கவிதை மனதை மிகவும் பாதித்த வரிகள்..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. உறுத்தல் மன அடைப்பை நீக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  12. மிக அருமையான படைப்பு தேனம்மை.

    கீற்றில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!

    பதிலளிநீக்கு
  13. உண்மை தொண்டையை அடைகிறது!
    :) புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  14. நன்றி சண்முககுமார்., மாணவன்., பிரபாகரன்., கலா நேசன்.. ( அவென்யூவில் பார்த்தால் பள்ளம் எல்லாப் பக்கமும் சதுரமாய் இருக்கு கலா நேசன்.. எனவே நாற்சதுரப் பள்ளம் என எழுதினேன் ) ., ஜிஜி., கோமதி., சசி., சாரல்., அஷோக்., ஸாதிகா., வினோ., வெற்றி., நிஜாம்., கதிர்., இரவு வானம்., ராமலெக்ஷ்மி., சரவணன்., இளம்தூயவன்...

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...