எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

  தீபாவளிக்காகப் பட்டாசுக் கடைகள் நகரெங்கும் திறந்திருந்தன. புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொருவர் வீடுகளில் இருந்தும் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்ப்பாகு போன்றவை செய்யும் எண்ணெய் வாசமும் வெல்லப்பாகின் மணமும் வந்து கொண்டிருந்தன.

  “குலோப் ஜாமுன் மட்டும் செய்திடு. என் ஆஃபிசிலேயே ஸ்வீட்ஸ் டப்பா கிஃப்ட் கிடைக்கும். மத்த ஸ்வீட்ஸெல்லாம் அதிலேயே இருக்கும். அதுனால செய்ய வேண்டாம்.” என்றான் ராஜன்.

  ”தீபாவளிக்கு எண்ணெய்ப் பலகாரம் செய்யணும். அடுப்புல எண்ணெய்ச் சட்டி வைக்கணும். அதுனால இட்லியும் அரைச்சுவிட்ட சாம்பாரும் போட்டு வடையும் செய்திடுறேன்.” என்றாள் ரம்யா.

யூ ட்யூபில் 2161 - 2170 வீடியோக்கள்.

2161.ஸ்ரீ லெக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HFsZPA6Dk0c


#ஸ்ரீலெக்ஷ்மி, #அஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRILAKSHMI, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,



2162.மங்களம் துதிமலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FH0wH5DfyR0


#மங்களம், #துதிமலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANGALAM, #THUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 28 அக்டோபர், 2023

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்

 காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்


 


தொடுவதென்ன மலர்களோ தென்றலோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, அனுபவம் புதுமை, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ..என்ற பாடல்களை அறுபதுகளின் இளைஞர்கள் மறக்க முடியாது. களை சொட்டு முகம், வசீகரப் புன்னகை, துள்ளும் இளமை, துடிப்பான நடனம் இவையே ரவிச்சந்திரன் புகழ்பெறக் காரணம். நெற்றியில் சுருண்டு விழும் முடி, கவரும் காந்தப் பார்வை, கட்டுக்கோப்பான உருவம், சொஃபிஸ்டிகேட்டட் லுக் கொண்டவர்.

 

தன் கல்லூரிப் பருவத்தில் காலேஜைக் கட் அடித்துவிட்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பத்து முறை பார்த்ததாகச் சொல்லி என்னை வியக்கவைத்தார் என் பக்கத்து வீட்டுப் புஜ்ஜியம்மா. அவருக்கு ரவிச்சந்திரன் மேல் எவ்வளவு க்ரேஸ் என்றால் தன்னுடைய டிவிடியில் காதலிக்க நேரமில்லை கேஸட்டை வாங்கி வந்து போட்டு என்னைப் பார்க்கவைக்கும் அளவு அவ்வளவு பைத்தியம். அந்தக்காலக் கட்டத்தில் எம் ஜி ஆர் சிவாஜி அளவு அதிக ரசிகைகளைப் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன்.

யூ ட்யூபில் 2151 - 2160 வீடியோக்கள். கம்பர் விழாக்கள் & நூல்கள்.

2151.காரைக்குடி கம்பர்விழா l  படத்திறப்பும் புத்தக வெளியீடுகளும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PkUXzP_1ndA


#காரைக்குடி, #கம்பர்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDI, #KAMBARVISHA, #THENAMMAILAKSHMANAN,



2152.கவிக்கோ உரை l காரைக்குடி கம்பன் விழா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yE_3gAzu06U


#கவிக்கோஉரை, #காரைக்குடி, #கம்பன்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIKO, #KARAIKUDI, #KAMBANVIZHA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 25 அக்டோபர், 2023

டாமியும் டார்ட்டிங்கும்

டாமியும் டார்ட்டிங்கும்

ன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா இன்று வந்ததும் அதே நிலா “ என்று பாடிக்கொண்டிருந்தார் எம்ஜியார் சரோஜாதேவியுடன். பாவாடை குடை போல் விரிய கண்கள் குடை போல் மலர அழகுப் பூங்கொத்தாய் சரோஜாதேவி மலர்ந்துகொண்டிருந்தார். கைபிடித்துக் கைமாற்றி பூமாலையைப் போல அடுத்த அடுத்த ட்விஸ்ட்களிலும் காந்தமாய்க் கவர்ந்துகொண்டிருந்தார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்.

 

நடனம் என்றதும் டிவியிலிருந்து சுவாமிநாதனின் கவனம் முத்தழகிக்குப் பயணித்தது. அடுத்தடுத்த சேனல்கள் மாற்றும்போது மாஸ்க் ஆஃப் ஸாரோவில் ஆண்டானியோ பாந்தரஸ் கேதரின் ஸீடா ஜோன்ஸுடன் வளைத்து வளைத்து டாங்கோ ஆடிக்கொண்டிருந்தார். என்ன ரிதம் என்ன ரிதம். ஒரு கணம் மெய்மறந்து ஸாம் தான் செல்லமாக அழைக்கும் அழகி என்ற முத்தழகியின் கைபற்றி மைனஸ் ஒன் பப்புக்குச் சென்றான். ஜோடியாகச் சென்றால்தான் அந்த பப்புக்குள்ளே அனுமதி. காதல் ஜோடிகளின் தீப்பிடிக்கவைக்கும் நடனம் நிகழ்ந்துகொண்டிருந்தது அவன் மனக்கண்ணில்.

Related Posts Plugin for WordPress, Blogger...