போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரைப் பேட்டிக்காக எங்கள் வீட்டிற்கு மூவரும் வந்தபோது எடுத்த புகைப்படம். |
நிம்மதி
நிழல் தேடிடும் வேளையில்
கடந்துவந்த
காலத்தின் காற்று
கனலாய்
இருக்கும் சில வேளைகளில்
அதில்
கருணை மழையும் பொழிந்திடும்.
நம்
பருவ வயதில் – அதில் காதல் இப்போதைக்கு
அது
தேவையில்லை. ஆம் வாழ்க்கைப் பயணமோ
நம்
பிறப்பு இறப்பு தண்டவாளத்தில் – நாம்
பிறந்துவிட்டோம்
உழலும் உலகத்தில் –
சுகாதாரம்
அதில் பாதி. சீர்கேடு அதன் மீதி
இறந்துவிடுவோம்
எதிர்காலத்தில்
ஏதாவது
செய்திடுவோம் பெயர் விளங்கும்
விதத்தில்
சுயநலமின்றி- பொதுநலன் கருதி
செய்திடுவோம்
இரத்த தானம்.
செத்தாலும்
பார்த்துக் கொண்டிருப்போம்
சிறந்தது
கண் தானம். உடல் உறுப்புகள்
தானம்
– தம்பி ஹித்தேந்திரனே முன்னுதாரணம்
மண்ணுக்கும்
போகாது நெருப்பிலும்
வேகாது
நமது முழு உடல்தானம், மருத்துவ
ஆராய்ச்சி
மகத்துவத்திற்கு சிறந்த சாதனம்
மனிதன்
மனிதனுக்காகவே ! என்றும் மனித நேயத்துடன்
உலக
அரங்கில்நமது நாடு. ஆமாம்
நிலையில்லா
உலகினில் நமது செயல்
என்றும்
நிலையானதோடு.