செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில் ஒரு நாள் அதிகாலையில் தென்காசி வந்தாச்சு. ஆனால் ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்.
தென்மேற்குப் பருவக் காற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுமாக பசுமை வயல்களுடன் மரம் செடி கொடிகளுடன் குளுகுளுவென அற்புத தரிசனம் தந்தது. ஜிலுஜிலுவென்று ஏசி போட்டதுபோல் இருந்தது. அங்கேயே இருக்கலாம்போல் ஒரு எண்ணம் வந்தது.
தென்காசி. காற்று அதிகம் என்பதால் இங்கே காற்றாலைகள் ( விண்ட்மில்) அதிகம் பொருத்தப்பட்டுள்ளன . குற்றாலம் அருவிகள் நிரம்பிய ஊர். இதற்குத் தேனூர் என்றொரு பேரும் உண்டாம். டபுள் குஷியோடு தேனூரின் அருவி நீரில் நனையச் சென்றோம் )
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்தான் குற்றாலத்தில் சீசன். சாரல் திருவிழா எல்லாம் நடக்கும். ஆறுமாசம் க்ளைமேட் அப்புறம் காத்தாடும் என்றார் ஆட்டோக்காரர்.
இங்கே நான்கு ஆறுகள் பிறக்கின்றன. ஒன்பது அருவிகள் புறப்படுகின்றன. குற்றால நாதர் கோவிலும் சித்திர சபையும் வெகு பிரசித்தம். சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம் எல்லாம் உண்டு. பராசக்தி மகளிர் கல்லூரியைப் பார்த்தேன்.
இதோ மெயின் அருவி.
ஆனால் அது ஒரு ஆடி வெள்ளி என்பதால் ஒரே கூட்டம். அதுவும் ஆண்கள் பக்கம் கூட்டம் கம்மி.
பெண்கள் பக்கம் கூட்டம் அதிகம் என்பதால் க்யூ. போலீஸ் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது.