171.
1971.திருப்பூட்டியவுடன் ஆசீர்வாதம் வாங்குதல் - திருப்பூட்டியவுடன் மணமக்கள் மாமக்காரர்களுடன் வளவிலிருந்து இரண்டாங்கட்டு வரை சென்று அனைவரையும் வணங்கி ஆசீர்வாதம் பெறுதல். பெரியவர்களிடம் முக்கியமாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும். இரு கரங்களையும் கூப்பி வணங்கியபடி ஜோடியாகச் சென்று வர வேண்டும்.
1972.திருப்பூட்டும் முறை – மேலவட்டகையில் மாப்பிள்ளை மணவறையில் நின்று கீழே நிற்கும் பெண்ணுக்குத் திருப்பூட்டுவார். கீழ வட்டகையில் மணப்பெண் மணை மீது நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். தெற்கு வட்டகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் எதிர் எதிராக சரிசமமாக நிற்கத் திருப்பூட்டப்படுகிறது.