ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து செல்லப் பல்வேறு விமானங்களும் பல்வேறு விமானத்தளங்களும் இருந்தும் நாங்கள் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அங்கே எங்கள் பெரிய மகன் வேலை செய்து வருகிறார்.
அபுதாபி வழியாகச் செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸில் டிக்கெட்டும் வாங்கியாச்சு. விசா, டிக்கெட், இன்சூரன்ஸ் எல்லாம் உட்பட ஒரு நபர் சென்று வர ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை செலவானது. சின்ன மகன் அழைத்துச் சென்றார் என்பதால் எனக்கு இதன் செலவு விபரங்கள் எல்லாம் சரியாகத் தெரியாது :) :) :)
ஜெர்மனி சென்றாச்சு. இருமாதம் தங்கி ஐரோப்பா டூர் எல்லாம் முடித்து ஜெர்மனியில் இருந்து திரும்பும்போது எதிஹாடில் ஏறியபோது எடுத்த படம் இது.