எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 அக்டோபர், 2011

அதீதத்தில் வேதாளம்..

சந்தேகச் சுக்கான்கள்
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்

ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..



புயலடிக்க., மழைபெய்ய
யாருமற்ற தீவு வீடு
எல்லைக் கோட்டைத்
தாண்டினேனோ
நானறியும் முன்னரே
எதிர்கொண்டு
சிதறடிக்கின்றன
வார்த்தை குண்டுகள்

சிதறிக் கிடக்கிறோம்
முழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை. புதன் செப்டம்பர் 1 அதீதத்தில் வெளிவந்துள்ளது.

10 கருத்துகள்:

  1. //சிதறிக் கிடக்கிறோம்
    முழுதாகவே நானும்
    எண்ணங்களும்.
    வன்மமாய் இருக்கிறாய்
    என் சுயத்தை
    சுருளவைக்கும்
    முயற்சியில் இன்னும்.//

    அசத்தல் தேனக்கா :-)

    பதிலளிநீக்கு
  2. அக்கா...
    கவிதை அசத்தல்.
    அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆழமான உணர்வுகளுடனான கவிதை !

    பதிலளிநீக்கு
  4. //ஒற்றை வார்த்தை
    துடுப்பா., தடுப்பா
    அலமலங்க வைக்கிறது
    எதிர்பாரா தத்தளிப்பில்.
    லயமற்ற இசையில்.
    ஆட்டத்தில் நீயும் நானும்
    நமது வாழ்வும்..//

    அருமையான கவிதை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  5. சந்தேகச் சுக்கான்கள்|கைப்பிடிக்குள் அடக்கி|காற்றுனக்கு சாதகமாக|பாய் மரப்படகு|விரித்த|படுதாக்களைச் சுருட்டி|நினைத்த திசைக்கு|இழுத்துச் செல்கிறாய்

    என் மன வேதாளத்தைக் கட்டுக்குள் அடக்க சமயங்களில் பெரும்பாடு பட வேண்டியிருக்கும். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  6. ஆட்டி வக்கும் வேதளமாய் மனம்தானே தேனக்கா !

    பதிலளிநீக்கு
  7. சிதறிக் கிடக்கிறோம்
    முழுதாகவே நானும்
    எண்ணங்களும்.
    வன்மமாய் இருக்கிறாய்
    என் சுயத்தை
    சுருளவைக்கும்
    முயற்சியில் இன்னும்.//
    கவிதை அசத்தல்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //சிதறிக் கிடக்கிறோம்
    முழுதாகவே நானும்
    எண்ணங்களும்.
    வன்மமாய் இருக்கிறாய்
    என் சுயத்தை
    சுருளவைக்கும்
    முயற்சியில் இன்னும்.//
    ARUMAIYAANA VARIKAL..VAALTHTHUKKAL

    பதிலளிநீக்கு
  10. நன்றி சாந்தி

    நன்றி குமார்

    நன்றி கௌசல்யா

    நன்றி கோபால் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி ஹேமா

    நன்றி மாலதி

    நன்றி மாதவி

    நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...