வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் பாராயணம் திருக்கோவிலூரில் அடிகளார் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாக கம்பர்விழாவில் கம்பன் அடிசூடி அவர்கள் குறிப்பிட்டார்கள். திருவாசகம் முற்றோதல், திருப்புகழ் பாராயணம் போல இது மாபெரும் முயற்சி.
கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு கோகுலம் சார்பாக திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி ஒன்றை கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் ஏற்பாடு செய்து சகபதிவர் திரு மாயவரத்தான் கி ரமேஷ்குமார் அவர்களையும் என்னையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.
கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது.
நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் , கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் , ஆங்கில கோகுலத்தின் ஆசிரியர் திருமதி மங்கா ஆகியோரின் அறிமுகம் நிகழ்ந்தபின் போட்டிகள் ஆரம்பித்தன.
மினிஷா நாயர் தொகுத்து வழங்க கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து குழந்தைகள் திருக்குறளை ஒப்புவிக்கத் துவங்கினார்கள்.
மனனம் செய்வது என்பது பதின்பருவங்களோடு முடிந்து விடுவதால் அந்தப் பருவத்துக்குள் முடிந்தவற்றை படித்துவிடுவது உத்தமம் என்று கூறினேன்.