821. ஒரு சந்தி பிடித்தல் - தினம் தலைகுளித்து காலையில் பூஜை செய்து ஒருவேளை மட்டும் உணவருந்துதல்.
822. சோறு உண்ணு/உண்ணுதல்/உங்கையில்( உண்கையில் ) :- சாதம் சாப்பிடுவது/சாதம் சாப்பிடும்போது
823. காங்கை அடித்தல் :- உடம்பு சுடுதல். காய்ச்சல் இல்லை ஆனால் உடல் கதகதப்பாக இருத்தல்
824. நோர/நுவரநாட்டியம் :- வியாக்யானம், தகராறு, குசும்பு, கோளாறு, புகார், வம்பு செய்தல்,
825. பொக்குன்னு :- உடனே., திடீரென்று, அவசரமாக,
826. பொசகெட்ட :- கிடைக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டு ஏங்குதல். ஒரு பொருளின் மேல் அதீத ஆசை .வைத்தல் ( சோத்துக்குப் பொசகெட்டவன் ).
827. சொட்டவாளங்குட்டி:- மிக அழகான குழந்தைகளை இப்படிகூப்பிட்டுக் கொஞ்சுவார்கள்.
828. நச்சுப்புடுவா/ன் - தான் நினைத்ததைச் சாதிக்க அனைவரையும் படுத்தி எடுத்தல்.
829. இழுப்புளுக்கி/ இலுப்புளுகி - ஒரு விஷயத்தை இங்கிட்டும் அங்கிட்டும் சொல்லிக் கொடுத்து சண்டையைப் பெரிசாக்கி விடுபவர்களுக்குப் பெயர்.
830. சீர்தனம் - பெண்ணுக்குத் திருமணத்தின்போது தாய்,தந்தையால் அளிக்கப்படும் பணம். இதை டெப்பாசிட் செய்து கொடுப்பார்கள். இது பெண்ணுக்கு நல்லது கெட்டது நடக்கும்போது மூலதனமாகப் பயன்படும். இதை வட்டிக்குக் கொடுத்து அந்தப் பணத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை பெற்றுக் கொள்வார்கள்.
831. கொள்வினை கொடுப்பினை - இருவேறு குடும்பத்தார் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ள அதிர்ஷ்டம் அமைந்தால் கொள்வினை கொடுப்பினை இருக்கு என்று சொல்வார்கள். முன்ன பின்ன செய்த அதிர்ஷ்டம் என்றும் சொல்வதுண்டு.
832. பெண் எடுக்கிக் காட்டுதல்- திருமணத்தின்போது மாப்பிள்ளை அழைத்தவுடன் பெண்ணை எடுக்கிக் காட்டுதல் அக்காலத்தய நடைமுறை. ( ஏனெனில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயதுதான் இருக்கும். :)
833. குணம் வாழும் பிள்ளை/குலம் வாழும் பிள்ளை - குடத்தில் இருக்கும் நீரில் இந்த குலம் வாழும் பிள்ளையைப் போட்டு எடுப்பார்கள். ( இது வெள்ளியால் செய்யப்பட்ட சிறு குழந்தை உருவம் ) .
834. அம்புட்டு வெள்ளம் கொண்டுக்கினு வந்தாள் - அதிகமாக சீதனம் கொண்டு வந்த பெண்களைக் குறிப்பது.
835. தாக்க(ல்) - சேதி, விபரம், செய்தி, விஷயம், ஒருவர் வீட்டு விஷயம்.
836. சவுத்துப் போச்சே/சவுத்துப் போதல் - வீரியம் இழந்து போதல். சுவை குன்றுதல், அளவுக்கு அதிகமாக இருத்தல்
837. மேலைக்கு இருக்கேனோ இல்லையோ - வயதானவர்கள் கூறும் வார்த்தை இது. மேலைக்கு என்றால் அடுத்த வருடங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அல்லது அனுவல்களுக்கு இருக்கனோ இல்லியோ இன்னிக்கே பேத்தியைக் கல்யாணம் செய்து பார்த்துவிடணும் என்று பெரியவர்கள் கூறுவது.
838. ஒண்ணுமத்தவுக - ஒன்றுமில்லாதவர்கள். வசதி குறைவானவர்கள், கொடுக்க மனம் இல்லாதவர்கள்.
839. வாவரசி - வாழ்வரசி என்பதைக் குறிப்பது. மஞ்சள் குங்குமத்தோடு கணவன் மறைவுக்கு முன்பே இறக்கும் பெண்ணை இப்படிக்கு குறிப்பிடுவார்கள்.
840. பெருமாளும் தேவியும்போல/ஈசனும் தேவியும் போல. - கணவனும் மனைவியும் சிவச்சின்னங்கள் தரித்து விருந்து விசேஷங்களுக்கோ,கோயில் கண்ணிக்கோ போகும்போது இப்படிக் குறிப்பிடுவார்கள்.
"ஆம்பிள்ளையானும் பெண்டாட்டியும் பெருமாளும் தேவியும்போல / பார்வதியும் பரமேஸ்வரனும் போல எழுந்தருளிட்டாக " என்பார்கள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

ஆவணப்படுத்தப்படவேண்டியவற்றை நீங்கள் தொகுத்து ஆவணப்படுத்தும் விதம் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை அக்கா...
பதிலளிநீக்குசோறு சோறுதான் ஆதிகாலம் தொட்டு, தமிழ் பேசும் எந்த நாட்டிற்கு போனாலும்
பதிலளிநீக்குசோறென்றே சொல்வாா்கள். சாதம் என்று கேட்டால் அங்கே புாியாது. சாதம் என்பது
தமிழ்ச்சொல்லிலை................ சாதம் சென்னையில் பிராமணா் பேச்சுவழக்கில் உள்ள சொல். தயவு செய்து குளப்பிக்க வேண்டாம்.
nandri Jambu sir
பதிலளிநீக்குnandri Kumar sago
nandri Vijay. ok.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!