எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 செப்டம்பர், 2017

சென்னைக் கோவளமும் கேரளக் கோவளமும்:- எட்டு வித்யாசங்கள்.

கடலைப் பார்த்தால் மனதில் அலையடிக்க வேண்டும் கடல் புகைப்படத்தைப் பார்த்தாலும்.

கடலுக்கருகில் எடுத்த நிறைய புகைப்படங்கள் கரைந்துவிட்டதால் இருப்பவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

கேரளா சென்றிருந்தபோது திருவனந்தபுரத்திலிருந்த நண்பர் கொச்சுவேலி பீச்சுக்கும், கோவளம் பீச்சுக்கும் அழைத்துச்சென்றார்.
இரண்டுக்கும் பேர் ஒன்றானாலும் குறைந்தது ஆறு வித்யாசங்கள் இருக்கலாம்.

1. இரு கடற்கரைகளிலும் சிறு பாறைகள் காணப்படுகின்றன.

ஆனால் கேரளத்தில் பாறைகள் அதிகம். சுண்ணாம்புக்கல் பாறைப்படிவம் போல.


2. இரண்டாவது கேரளா கடற்கரையில் அலையை ஒட்டியே நிறைய உணவங்கள் உண்டு கேரளா கோவளத்தில்.  விதம் விதமான மீன்கள், கடல்சார் உணவுகள் பார்வையைக் கவரும். ஆனால் நாற்றமே இருக்காது. !

இங்கேயோ சென்னையில் மீன் வறுவல் கடைகள் உண்டு. ஆனால் பீச் முழுவதும் கவுச்சி வாடை ஆளைத் துரத்தும்.  


3. நம்மூரு பீச் சீரான பீச் ஆனால் கேரளா கோவளம் வளைந்து நெளிந்து நிறைய ரகசியங்கள் கொண்டது.
4. மணல் & பாறைகள் மேல் பச்சைக் கொடிகள் செடிகள் வளர்ந்து நிற்கும் கேரளாவில். ஆனால் இங்கே செடியும் கொடியும் பீச்சில் இருக்கவே இருக்காது.


5. வெளிநாட்டுக்காரர்களைக் கவர அங்கே பீச் தண்ணீருடன் கோப்பைத் தண்ணீரும் உண்டு. குடித்துவிட்டு ஆட்டம்போடுவது மட்டுமில்லை தண்ணீர் விளையாட்டுகளும் உண்டு. 
6. இங்கே நாமோ பெட்ஷீட் விரித்தமர்ந்து சுண்டல் கொண்டு சென்றோ வாங்கியோ சாப்பிடுவோம். அங்கே அவர்களுக்கு சுண்டல் என்றால் என்னவென்றே தெரியாது.


கடற்கரையிலும் கழிவுகளைக் கொட்டியும் ஆடுமாடுகளைக் கட்டியும்  மேய்ப்போம் நாம் அங்கே அது இல்லை.  
நம்முடைய காவல் தெய்வங்கள் கடற்கரையையும் காவல் காக்கின்றார்கள். அங்கே கோயில் எல்லாம் கிடையாது. அது ஒரு கேளிக்கை & வியாபார ஸ்தலம் மட்டுமே.
என்ன இருந்தாலும் சுண்டல் இல்லாத பீச் ஒரு பீச்சா. ? பீச் மண்ணு முகத்துல வீச சுட சுட ஊதியபடி பஜ்ஜியும், சின்னப்புள்ளைங்க மாதிரி புசுபுசுன்னு அமுக்கி பஞ்சு மிட்டாயும், கண்ணாடி போட்ட டின்னிலோ, இல்ல தூக்குவாளியிலோ வெதுவெதுப்பான தேங்காய் மாங்காயோட முழிச்சுக்கிட்டு இருக்குற பட்டாணியையோ வாங்கித் தின்னாட்டி பீச் விஜயம் முற்றுப் பெறுமா.

2 கருத்துகள்:

  1. படங்கள் அருமை
    ஒருமுறையேறும் இந்த கடற்கரை மணலில் கால் பதிக்க மனம் விரும்புகிறது

    பதிலளிநீக்கு
  2. nichayam summer holidays il sendru varungkal Jayakumar sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...