எனது வலைப்பூ சகோதரர் கரந்தை ஜெயக்குமார். இவர் ஆசிரியப் பணியில் இருப்பதாலோ என்னவோ இவரின் பதிவுகள் நச்சென்று இருக்கும். மிகத் தெளிவான கருத்துகள் கொண்டதாக மிளிரும். வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் என்று தற்போது ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். பரவலாக வலைப்பூ எழுத்தாளர்கள் பேராதரவைப் பெற்றவர். எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்து அருமையாக இருந்தால் யாவரையும் ஈர்க்கும்தானே. :) -- ( தேனம்மை நோ பொறாமை ப்ளீஸ் - எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :)
இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித் தரும்படி கேட்டேன். அவரது பதிவு அதிர வைத்தாலும் படிப்பினை கொடுத்தது. எல்லாம் தெரிந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் நாம் செயலற்று இருக்கிறோம் என்பதை அறைந்தது. இனி அவரைப் பற்றியும் அவரது எதிர்நீச்சல் பற்றியும் படியுங்கள்.
இது அவரைப் பற்றி அவர் வலைப்பூவில் கொடுத்திருக்கும் சுயவிபரம்.
///கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்.///
வடவாறு :-
************
முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்,தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச்சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.