எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2009

அபியும் நானும்

பிறந்தபோதும், அமர்ந்தபோதும்,
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....

ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....

உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,

விடுதலை

பேரன்பே பெருநெருப்பாம்
மானிடர்க்கு

அன்பு கூட வலைதான்
பறக்க இயலாதபோது

சொடுக்கும் வார்த்தைகளால்
இளம் பறவைகள்
தாய்ப்பறவையைச் சீறும்

வியாழன், 30 ஜூலை, 2009

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

ஈழப்போரையும்
ஈராக் யுத்தத்தையும்.
நாமென்ன விமர்சிப்பது

நம்மிடமே உண்டு
குத்தீட்டீக் கண்களும்
கொடு வாளாய் நாக்கும்

அஹிம்ஸா தேவதை அவதாரம்
உடல் மொழியாலே உதறித் தள்ளுவோம்
ஒருவரை அறியாமலே.

புதன், 29 ஜூலை, 2009

அம்மாவின் அன்பு

நான்கும் ஒன்று என்று சொன்னாலும்
சில சமயம் தெரிந்துவிடுகிறது
அம்மாவின் தனிப்பட்ட அன்பு.

ஒரு தட்டில் மட்டும் வீழும்
அதிகப்படியான முருகலும் வறுவலும்.

எந்த ஒரு தனித் திறமையும் வெல்வதில்லை
அவளின் மனச் சூலின் தேனை அருந்த
அவளாக மனம் வைத்தால் உண்டு.

திங்கள், 27 ஜூலை, 2009

ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

தன்னை அறிதல்

அவரவர்க்கான தேடலில் அவரவர்.
பால் சுயம்போ கல்கியோ ரோஸோ
இருப்பை வெளிப்படுத்தவேணும்
உரக்கச்சொல்ல வேண்டும்

இவர்கள் திருநங்கைகள்
உணர்வால் மங்கைகள்
உலகின் இறை சக்திகள்

தேடல்

ஓசையிலாத இசையும்
வர்ணங்களில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும் கொண்டு அலைகிறேன்

குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

சிறகை இழந்த பறவைகள்
ஒரு போதும் பறக்கவே முயல்வதில்லை,
சிறகு வளர்ந்த பின்னும்.

இருப்பதற்கும் இரைப்பைக்கும்
இறகை சிறிது அசைப்பது தவிர
உயரப் பறக்க இசைவதில்லை
உள்ளமெல்லாம் பறந்தாலும்.

வியாழன், 16 ஜூலை, 2009

நன்றிகள்

என்னை நாடியும் சில பறவைகள்....
புதிய உயிராக்கிய வேரே... உனக்கு நன்றி !
விளை நிலமே ! என் இடு உரமே !
என் தாய் மண்ணே !
எனக்குப் பறக்கக் கற்றுத் தந்தவளே !!
உன் காலடியில் சர்வமும் சரணம் !!
நன்றி ! நன்றி !! நன்றி !!!!

புதன், 15 ஜூலை, 2009

அம்மாவுக்கு...

அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆக மாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா
Related Posts Plugin for WordPress, Blogger...