எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஜனவரி, 2024

ஜெயங்கொண்டார் சதகம்

 என்னிடமிருந்த ஜெயங்கொண்டார் சதகத்தை ஸ்கேன் செய்து போட்டு உள்ளேன். இதை யூ ட்யூபில் பாடலாகவும் பாடி உள்ளேன். 



யூ ட்யூபில் 2461 - 2470 வீடியோக்கள்

2461.திருவருட்பா l இது நல்ல தருணம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=oArCXuHL998


#திருவருட்பா, #இதுநல்லதருணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #ITHUNALLATHARUNAM, #THENAMMAILAKSHMANAN,



2462.திருவருட்பா l ஐந்தாம் திருமுறை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SS4CVP0wyqc


#திருவருட்பா, #ஐந்தாம்திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #AINTHAMTHIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,

சனி, 27 ஜனவரி, 2024

மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காத்த கந்தவேலன்

 மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காத்த கந்தவேலன்


ந்த செயலைச் செய்தாலும் ஆழ்ந்த சிரத்தையோடு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் பலன் சிறப்பாக இருக்கும். ஏனோ தானோவென்றோ அல்லது பல பக்கமும் கவனம் சிதறவோ ஒரு காரியத்தைச் செய்தால் அது துர்ப்பலனை அளித்துவிடும். அப்படிக் கவனம் சிதறியதால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன் ஒரு தண்டனை அடைந்தார். அதிலிருந்து எப்படி, யாரால் விடுபட்டார் என்பதையும் பார்ப்போம்.

தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” “தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தது கார்முகி. அது குதிரை முகமுடைய ஒரு பெண்பூதம். திருப்பரங்குன்றத்தின் பொய்கைக் கரையில் நின்று சாலையின் இரு மருங்கையும் பார்ப்பதும் பின் முகத்தைக் கோணி விரலை மடித்து நொடித்துச் சொடுக்கி அலுத்துக் கொள்வதுமாய் இருந்தபோது அங்கே ஒரு புலவர் வந்தார்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று முணுமுணுத்தவர் ”உண்மையைச் சொன்னதற்கு இந்தத் தண்டனை தேவைதான் சொக்கநாதா. கோபப்பிரசாதம் பாடியும் தீரவில்லையே உன் கோபம் சோமசுந்தரா.” எனக் கூறிப் பொய்கையின் கரையில் அமர்ந்தார். அவர் மதுரைக் கணக்காயனாரின் மகனான நக்கீரனார்.

யூ ட்யூபில் 2451 - 2460 வீடியோக்கள்.

2451.திருவருட்பா l கீர்த்தனை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lKHTbvjOqys


#திருவருட்பா, #கீர்த்தனை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #KEERTHANAI, #THENAMMAILAKSHMANAN,



2452.சாய்பாபா துதிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tbx6ep9R_S4


#சாய்பாபாதுதிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SAIBABA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 25 ஜனவரி, 2024

பயணங்கள் முடிவதில்லை பூர்ணிமா பாக்கியராஜ்

பயணங்கள் முடிவதில்லை பூர்ணிமா பாக்கியராஜ்


“இளைய நிலா பொழிகிறதே, மணி ஓசை கேட்டு எழுந்து, சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும், தோகை இளமயில் ஆடி வருகுது, வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன், முதன் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ” என இனிமையும் சோகமுமான மெலோடீஸ் நிரம்பியது பூர்ணிமா ஜெயராம் நடித்த பயணங்கள் முடிவதில்லை படம். நிறைவேறா ஏக்கமும் கனவுகளுமாக மனதை வருத்தும் காதல் கதை. வழக்கமான பாணிதான்.

”அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது, சின்னச் சின்னக் கண்ணா சேதி சொல்லும் மன்னா” இந்தப் பாடல்களோடு ”விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறலாம் ஓ ஓ ஓ ஓ ஜூலி ஐ லவ் யூ.. லா ஆ லா லலா லலா லலா என்று கல்லூரிப் பருவத்தில் இப்பாடலை ஜூலி என்ற பெயருள்ள பெண்களைப் பார்த்து நாங்கள் பாடிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் எங்கள் அம்மா வீட்டில் வேலை செய்து வந்த அக்கா ஒருவர் அப்போது பிறந்த தன் குழந்தைக்கு ஜூலி என்றே பெயரிட்டார். இத்தனைக்கும் அவர் இந்து. அவ்வளவு தாக்கம் ஏற்படுத்திய பேர் அது. கிளிஞ்சல்கள் (லவ் நெவர் ஃபெயில்ஸ்) என்ற கேப்ஷனோடு வந்த படம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

சர்வதேச இனிப்புகள்

 


////”இனிப்பைச் சாப்பிட்டு இனிப்பாகப் பேசுங்கள்” என்பது ஒரு துருக்கியப் பழமொழி . கடந்த ஐந்தாண்டுகளாக ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் வசிக்கும் நான் குமுதம் சிநேகிதிக்காக ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பல்கேரிய, எகிப்து, ஒட்டாமான், ஐரிஷ், டர்க்கிஷ் இனிப்பு வகைகளை (சிலவற்றை டெஸர்ட் என்றும் சொல்லலாம்) அனுப்பி உள்ளேன். கேக் வகையறாக்கள் ஜெர்மனியில் பிரசித்தம், ப்ளாக் ஃபாரஸ்ட் என்பது ஜெர்மனியில் இருக்கும் ஒரு இடம். துருக்கிய இனிப்புக்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சீனிப்பாகு அதிகம். ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை. எனவே இந்த இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

நன்றி

அன்னபூரணி சபாரெத்தினம்

ஜெர்மனி.////


சனி, 20 ஜனவரி, 2024

செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - அறிமுகம்

 


ஒரு நூற்றாண்டுக்கான நகரத்தார் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவை இக்கதைகள். மத்தியதர வர்க்கத்துப் பெண்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் செட்டிநாட்டு வட்டார வழக்குமொழியில் புனையப்பட்டவை. 

யூ ட்யூபில் 2441 - 2450 வீடியோக்கள்.

2441.மரணபயம் போக்கும் மயில்வாகனன் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_pGP4LyFSXY


#மரணபயம்போக்கும்மயில்வாகனன்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



2442,வாட்டும் பிணி தீர்க்க, விபத்துகள் நேராதிருக்க வடிவேலன் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/EctlQU2GsDo


#வாட்டும்பிணிதீர்க்கவிபத்துகள்நேராதிருக்கவடிவேலன்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 18 ஜனவரி, 2024

13.கருமுட்டைகளும் கருத்தரிப்பும்

13.கருமுட்டைகளும் கருத்தரிப்பும்


இனப்பெருக்க வயதில் ஆரம்பித்து மெனோபாஸ் காலம் வரைக்கும் பெண்ணின் கருப்பையில் முட்டைகள் மாதாமாதம் உருவாகின்றன. இவை ஓவா எனப்படுகின்றன. கடைசி மாதவிடாய் நாளிலிருந்து பதினான்காவது நாள் வரை இம்முட்டை வளர்கிறது. சொல்லப் போனால் பத்தாம் நாளில் இருந்து இருபதாம் நாள் வரை கூட வளர்வதாகக் கணிக்கிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் உருவாகும் இவ்வாறான கருவுறத் தகுதியான முட்டை ஓவோசைட் எனப்படுகிறது. அச்சமயம் அது விந்தணு மூலம் கருவுறாவிட்டால் முதிர்ந்து மாதவிடாயுடன் வெளியேறுகிறது.

ஒவ்வொரு மாதமும் கருவகத்தில் முட்டை கருவுறத் தயாரான நிலையில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். வெள்ளைப்படுதல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் பாலியல் இச்சை அதிகரித்தல், மார்பகங்கள் கனப்பது அதே சமயம் கருப்பை வாய் மென்மையாவது போன்றவை ஏற்படும். வெள்ளைப்படுதல் மூலம் வெளியேறும் ம்யூக்கஸ் என்னும் திரவம் விந்தணு முட்டையை அடைவதை எளிதாக்குகிறது.

யூ ட்யூபில் 2431 - 2440 வீடியோக்கள்.

2431.உமையவள் பாமாலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3h7_JcVZYtE


#உமையவள்பாமாலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#UMAIYAVALPAMALAI, #THENAMMAILAKSHMANAN,



2432.மங்கள நாயகி ஒன்பது கோவில் l  சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=c9pxgo9fH7c


#மங்களநாயகிஒன்பதுகோவில், #சேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANGALANAYAKI, #SEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 16 ஜனவரி, 2024

திருமுக விலாசம்

 இந்தத் திருமுக விலாசத்தை நான் யூ ட்யூபில் என்னுடைய சேனலில் பாடிப் பதிவேற்றியுள்ளேன்.

திருமுக விலாசம்

https://www.youtube.com/watch?v=1fNN61Aqacw



யூ ட்யூபில் 2421 - 2430 வீடியோக்கள்.

2421.சுகப்ரசவமாக ஓதவேண்டிய பதிகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=p0swBi8PdYQ


#சுகப்ரசவமாகஓதவேண்டியபதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,



2422.ஸ்ரீ இராகவேந்திரர் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QvRo_Gsx8Yc


#ஸ்ரீஇராகவேந்திரர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIRAGHAVENDRARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

குமரேச சதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் – தேனம்மைலெக்ஷ்மணன்

குமரேச சதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் – தேனம்மைலெக்ஷ்மணன்

முன்னுரை:- சதகம் என்றால் நூறு பாடல்கள் கொண்டது. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று இச்சதக அமைப்பு. குமரேசர் என்று சொல்லப்படும் முருகக் கடவுள் பற்றிய 100 செய்யுட்களால் யாக்கப்பட்டது இந்நூல். 18 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புல்வயல் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் மீது பக்தியுற்று இதை இயற்றியவர் குருபாததாசர் எனப்படும் முத்து மீனாட்சிக் கவிராயர்.

நூல் அமைப்பு:- புறப்பொருள் பற்றிய இந்நூலில் ஒவ்வொரு அடியின் முடிவிலும் புல்வயலில் உறையும் குமரேசக் கடவுளை வாழ்த்தும் முகமாகவும், உட்பொருளாக மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய பக்தி, அன்பு, அறம், ஒழுக்கம், நேர்மை ஆகிய வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தியும், தமிழின், திருக்குறளின் மாண்பைச் சிறப்பிக்கும் வண்ணமும் பாடல்கள் அமைந்துள்ளன. காப்பு, அவையடக்கம் இவை தவிர 100 பாடல்கள் நூற்பயனுடன் ஆசிரிய விருத்தப் பாவில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடுபொருளிலும் அதன் சார்பாகவும், எதிராகவும் பத்துமுதல் பன்னிரெண்டு பொருட்களை ஈடாகக் கூறி விளங்க வைக்கிறார் குருபாத தாசர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாணக்ய நீதிக்கும், சௌரியப் பெருமாள் தாசர் என்பாரால் இயற்றப்பட்ட ஸ்ரீ பார்த்தசாரதி மாலை என்ற 100 பாடல்கள் கொண்ட நூலுக்கும் இந்நூலுக்கும் கருத்தளவில் அதிக ஒற்றுமை உள்ளது.

யூ ட்யூபில் 2411 - 2420 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

 2411.பாரம் l பிரியா கிருஷ்ணசுவாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=DYPy2WuyMLU


#பாரம், #பிரியாகிருஷ்ணசுவாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BAARAM, #PRIYAKRISHNASWAMY, #THENAMMAILAKSHMANAN,



2412.Shimla Mirchi l Ramesh Sippy l ThenammaiLakshmanan,

https://www.youtube.com/watch?v=jtex30lyXBQ


#ShimlaMirchi,  #RameshSippy, #ThenammaiLakshmanan,

சனி, 13 ஜனவரி, 2024

பண்பாட்டு முரண்கள் - முபீன் சாதிகா

துருக்கியசமூகம், தமிழ்ச்சமூகம் பற்றி முபீன் சாதிகா 



 

முபீன் சாதிகா. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமை. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் என இவரின் தமிழ்ப்பணி அளப்பரியது. தொடர்ந்து செயல்பட்டு இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் இளம்தலைமுறையினர் அறிந்து பயன்படும்வண்ணம் எளிமையாக்கித் தருபவர்.  

 

கோவை மாவட்டத்தில் பிறந்தவர். அம்மா இல்லத்தரசி. அப்பா மருந்தாளுநராக, தமிழக அரசில் வேலை பார்த்தவர். அண்ணன் நிஜந்தன். ஊடகவியலாளர்.

 

கோவை மாவட்டத்தில் சிறுவயதில் மருத்துவத்துறையினருக்கான குடியிருப்பில் வளர்ந்தவர். அப்போது அங்கு அடர்த்தியான மரங்களும் பூங்காக்களும் இருந்தன. அவற்றில் இருந்த செடிகளின் பெயர்களை மனப்பாடமாக அறிந்திருந்தவர். மரங்களுடன் பேசுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது. கோழிகள், பூனைகள் எல்லாவற்றுடனும் நல்ல நட்பைப் பேணி வந்தார். (இது குழந்தை மனோபாவத்துடன் இவரின் நூறு புராணங்களின் வாசல் தொகுப்பில் வெளிப்படும்.)  நான்காம் வகுப்புப் படிக்கும் போது அப்பாவின் வேலை மாற்றல் காரணமாகச் சென்னை வந்தவர்.

யூ ட்யூபில் 2401 - 2410 வீடியோக்கள். கம்பன் விழாக்கள்.

 2401.கம்பன் விழா l மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும் l சொ.சொ.மீ l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZkZqgGoxMCI


#கம்பன்விழா, #சொசொமீ, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAMBARVIZHA, #CHOCHOMI, #THENAMMAILAKSHMANAN, 



2402.கைகேயி படைத்த கம்பன் l கம்பனடிசூடி பழ.பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2xV5rSV2RF4


#கைகேயிபடைத்தகம்பன், #கம்பனடிசூடிபழபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAIKEYIPADAITHAKAMBAN, #KAMBANADISUDIPALAPALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 9 ஜனவரி, 2024

வெளிநாட்டு நாணயங்கள். காயின் கலெக்‌ஷன் - 2

 

காயின் கலெக்‌ஷன் - 1. 1 பைசா முதல் 25 பைசா ( நாலணா) வரை.


பஹ்ரைன்  மற்றும் மொரீஷியஸ் நாணயங்கள். 
பஹ்ரைன் தினார்.


மொரீஷியஸின் நாணயத்தில் இடம் பெற்றிருப்பவர் டாக்டர் தி ரைட் ஹானரபிள் ஸீவூசகுர் ராம்கூலம். மொரீஷியஸின் ஆட்சியாளர். சீப் மினிஸ்டர், ப்ரைம் மினிஸ்டராக இருந்தவர். இந்த நாணயம் 10 ரூபாய். 

யூ ட்யூபில் 2391 - 2400 வீடியோக்கள்.

2391.வேல் வணக்கம் l சுப்ரமண்யபாரதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YRlt1niDJ1o


#வேல்வணக்கம், #சுப்ரமண்யபாரதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VELVANAKKAM, #SUBRAMANIABHARATHI, #THENAMMAILAKSHMANAN,



2392.தினம் ஒரு துதி l திருமுருக கிருபானந்த வாரியார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=X7wUt6UxtdM


#தினம்ஒருதுதி, #திருமுருககிருபானந்தவாரியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THIRUMURUGAKIRUBHANANDHAVARIYAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 8 ஜனவரி, 2024

காவல்தெய்வம் டாமி

 காவல்தெய்வம் டாமி

ஹேய் ஹோய் ஹூ என்று மிஷின் இம்பாஸிபிளின் பின்னணி இசை ஒலிக்க டாம் க்ரூஸ் மலையேறிக் கொண்டிருந்தார்,. காரை ஓட்டிக் கொண்டிருந்த ஸாம் பென் ட்ரைவை எடுத்து இசையை நிறுத்திவிட்டு கடற்கரைச் சாலையில் நிறுத்தினான். சிறிது தூரத்தில் அவனது அன்பிற்குரிய முத்தழகி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆதி தேவதை..அற்புத சௌந்தரி. ரோஜாப்பூ.

 

வேகமாக வந்தவள் மூச்சிறைத்தாள். ’என்னாச்சு டாமிக்கு?” . கேட்கும்போது அவள் குரலில் பதட்டம் நிலவியது. மூன்று நாளாயிற்று டாமி இறந்து. அதைச் சொல்ல அவனுக்கும் வருத்தம் மனதைப் பிய்த்தது. டாக் ஷோவில் எல்லாம் டாமி முதல் கப் வாங்காமல் திரும்பியதே இல்லை. அவர்கள் குடும்பத்தில் யார் எந்த மனநிலையில் இருந்தாலும் அதை மாற்றும் மந்திரம் டாமியின் கொஞ்சலில் இருந்தது.

வியாழன், 4 ஜனவரி, 2024

தங்கநிறச் சிங்கக்குட்டிகள்

தங்கநிறச் சிங்கக்குட்டிகள்

வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃபாவில் கிடந்தான் சாம். வாழ்நாள் பூரா அவன் தேடியது என்ன. பாசம் காதல் , குழந்தைகள் எல்லாம் தேவைக்கதிகமாகவே கிடைத்துவிட்டது. ஒன்றுக்கு மூன்றாகக் காதல், இரண்டாகக் குழந்தைகள். பாசத்தில் மூழ்கடிக்கும் தேவி. அவனுக்கென்ன குறை. 

 

எங்கே சென்றுவிட்டாள் இந்த ராணி ? அவளுக்கென்ன கேடு ? ஏன் சொல்லாமல் போனாள். ’பாதுகாப்பான இடத்துக்குத்தான் போகிறேன். தேடவேண்டாம்’ என்று இரண்டே வரிகள் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பாவி.

 

நந்தன் நந்தினியின் பிறந்தநாள் என்னவோ கோலாகலமாகத்தான் நடந்தது அவர்களைப் பெற்றவள் இல்லாமல். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசியது அவ்வப்போது அவன் காதுகளிலும் விழத்தான் செய்தது. “ இவங்க சரோகேட்ஸ் பேபீஸ் தெரியும்தானே. ! “ “ யெஸ் ஐ கேம் டு நோ இட் ஃப்ரம் செந்தில்நாதன் “

யூ ட்யூபில் 2381 - 2390 வீடியோக்கள்

2381.சத்திய அறிவிப்பு l திருவருட்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UPr8IX2XvT4


#சத்தியஅறிவிப்பு, #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SATHIYAARIVIPPU, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,



2382.ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_xYTt1JkjjA


#ஆறுபடைவீடமர்ந்தஆறுமுகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 2 ஜனவரி, 2024

”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்

”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்




அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. சக எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. சிறகு விரிந்தது என்றொரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர்.


யூ ட்யூபில் 2371 - 2380 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்

 2371.அகநாழிகை l பொன்வாசுதேவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=wXIWPfienzU


#அகநாழிகை, #பொன்வாசுதேவன்,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#AGANAZHIGAI, #PONVASUDEVAN, #THENAMMAILAKSHMANAN,



2372.பேசும் புதிய சக்தி l கவிதா ஜெயகாந்தன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PmBEBwRtxK0


#பேசும்புதியசக்தி, #கவிதாஜெயகாந்தன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PESUMPUTHIYASAKTHI, #KAVITHAJAYAKANTHAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 1 ஜனவரி, 2024

எனது 25 ஆவது நூலுக்கு கவிதாயினி மதுமிதா அவர்களின் முன்னுரை

வாஞ்சைமணம் பரப்பும் வாடா மலர்கள்


தேவானை, திருநிலை, ஒப்பிலாள், உண்ணா, ஒமையாமற்றும் செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - தேனம்மைலெக்ஷ்மணன் சிறுகதைத்தொகுப்பு நூல். 

உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. பல லட்சம் வருடங்களுக்கு முன்பு உலகில்உயிர் தோன்றி, பல்கிப் பெருகி ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிராக பரிணாமமடைய ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக, பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொடரும் வாழ்க்கைப் பயணத்தின் நீட்சியில், ஆதி மனித வாழ்க்கை, கற்கால வாழ்க்கை எனத் தொடர்ந்து மனித நாகரீகம் உருவாகி வரும் பாதையில்,ஆயிரம் வருடங்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கைவரையிலும் இன்னும் ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கின்றன. செப்பேடுகளும், கல்வெட்டுகளும், பனையோலைகளும் இந்த உண்மைகளைக் கண்டறியும் ஆய்வில் துணை நிற்கின்றன. அச்சுத்துறை முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அந்தந்த காலத்தில் எழுதப்பட்டவை எழுத்தின் மூல ஆதாரங்களாக உள்ளன.

இதோ இன்றைய காலக்கட்டத்தில் நம் கண் முன்பாக கீழடியில்அகழ்வாராய்ச்சி நடப்பதைக் காண்கிறோம். பல உண்மைகளைக் கண்டடைந்து கொண்டிருக்கிறோம்.

யூ ட்யூபில் 2361 - 2370 வீடியோக்கள்.

2361..அறம் காக்கும் தேவா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XSRYHe6KJPw


#அறம்காக்கும்தேவா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN,



2362.தந்தையின் உடல்நலம் மனநலம் சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம் l திருவெழுக்கூற்றிருக்கைlதேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BfO3zfGXfgs


#தந்தையின்உடல்நலம்மனநலம்சீர்பெறுவதற்குஓதவேண்டியபதிகம், #திருவெழுக்கூற்றிருக்கை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVELUKKOOTRIKKAI, #SIVA, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...