1101. அதமப்பொருத்தம் - ஜாதகம் பார்க்கும்போது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 3 பொருத்தங்களுக்கு மேல் இல்லாவிட்டால் அது அதமப் பொருத்தம். மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு வயசு அதிகமாய் இருந்தாலும் அது அதமப் பொருத்தம்.. ரஜ்ஜை தட்டினாலும், பெண் ராட்சச கணமாகவும் ஆண் தேவ அல்லது மனித கணமாக இருந்தாலும் அது அதமப் பொருத்தம். பெண்ணின் ராசி அல்லது நட்சத்திரத்திற்கும் பிறகு ஆணின் ராசி அல்லது நட்சத்திரம் வந்தாலும் அது அதமப் பொருத்தம். இப்படிச் செய்துவைக்கப்படும் மணங்கள் அதிக நாள் நீடிக்காது என்பது நம்பிக்கை.
1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !