மாபெரும் குற்றம் செய்தவர்கள் ராஜாவின் பிள்ளையானால் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பி விடுவார்கள். ஆனால் ஒரு ராஜா குற்றம் செய்தவன் தன் மகன் என்று தெரிந்ததும் நீதி கேட்ட ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனை ஈடு கொடுக்கிறார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழ நாட்டினைத் திருவாரூரில் இருந்துகொண்டு ஆட்சி செய்து வந்தான் ஒரு மன்னன். நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் மனு நீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டான். அவனது பிரியத்துக்குரிய மகன் பெயர் வீதிவிடங்கன் என்றழைக்கப்படும் பிரியவிருத்தன். மன்னனுக்கு மகன் மேல் அளவிடமுடியாத பாசம் உண்டு.