இது 7.09. 2011, குரோம்பேட்டை RFVV பள்ளியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் சென்றபோது எடுத்தது. ஆனால் இந்தக் கவிதை கல்லூரிப் பருவத்தில் எழுதியது. :) |
15.1.85 நாங்கள் ஐவர் பங்கு பெற்ற விவேகானந்தரைப் பற்றிய கவியரங்கம். அதில் எனக்குக் கிடைத்த தலைப்பு விவேகானந்தர் சீடர்.
கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்
தெரியாமல் மிழற்றினேன் மழலையிலே
தெரிந்தே உளறுகிறேன் இளமையிலே
இன்பத்திலும் துன்பத்திலும்
வார்த்தைச் சிதறுகிறேன்.
மலையைக் குடையும் புழுவாய்
மனம் நோகப் பண்ணிடினும் மனம் நெகிழ்ந்து
மடிமேலமர்த்தும் ப்ரிய தாய்க்கு
எச்சிற்பட்ட வார்த்தை முத்தங்கள்.
தரிசாய்க்கிடந்த என்னைச் செதுக்கி
நன்செய்யாக்கிய பாத்திமா உரத்துக்கு
ஆயிரம் கோடி வந்தனங்கள்.
தலைமைச் சந்திரனுக்கும்
பக்கத்தாரகைகளுக்கும் வணக்கங்கள்.
ஆசிரிய உழவர்க்கும் நன்செய்ப் பயிர்களுக்கும்
நேசம் நிறைந்த நமஸ்காரங்கள்.