எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அடுத்த தடத்துக்காய் ..................

உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..

கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....

உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,

புதன், 28 ஏப்ரல், 2010

நான் நிலவு

துரத்தத் துரத்தத்
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...

யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...

தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

யாளியும் ட்ராகனும்

பார்த்தால்தானா.....
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...

சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...

கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நமக்கு மட்டுமேயான அம்மா

கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......

தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...

கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...

திங்கள், 12 ஏப்ரல், 2010

க்ரீடங்களும் கடையேழு வள்ளல்களும்


அய்யாவுக்கென்றும்.,
அம்மாவுக்கென்றும்.....மட்டுமல்ல.,
அக்காவுக்கென்றும் ..................
சிம்மாசனமும் க்ரீடங்களும்
செங்கோலும் .,ராஜ்யமும் .,
பூங்கொத்தும் .,பூமாலைகளும்.,
வெற்றிக் கோப்பைகளும் .,
நியாயச் சுத்தியலும் ஈந்த
அன்பு நெஞ்சங்களுக்கு .,
அவார்டுகளை அள்ளி வழங்கிய
கடையேழு வள்ளல்களுக்கு நன்றி...!!

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ட்ராகுலாவும் வாம்பயரும்

சிம்பன்ஸியாகவோ
சாத்தானாகவோ இருப்பது
உன் விருப்பம் ...
என்னை ஏன் பிறாண்டுகிறாய்..?
நானும் உன் போல்தான் ....!
இருந்தாலும்...???

நீ யாருடன் பேசுகிறாய் என
நான் கண்காணிப்பதில்லை...
நான் எதுபற்றி பேசினாலும்
கவலையுறுவதாய் பசப்புகிறாய்..

புதன், 7 ஏப்ரல், 2010

வலியில் இன்பம்

மழை விட்டும் தூவானம்
மரம் வெட்டிய பின் இலைத்துளி....

வெட்டுப்பட்ட தண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்

தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பச்சை வண்ண புடவைக்காரி

பழைய பேருந்துகள்
சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..

திங்கள், 5 ஏப்ரல், 2010

கைவசம்

உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...

உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...

சனி, 3 ஏப்ரல், 2010

வருடம் முழுதும் வசந்தம்

வீடெங்கும் வாசனைப் பூந்தொட்டிகள்..
வண்ண வண்ண ரோஜாக்கள் ..
நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
இனிப்பான பேச்சுக்களும்
இன்பமான நினைவுகளும்
ருசிக்கத் தருவேன்..
சபரி ராமனுக்கு ஈந்தது போல்..
மனதையும் பொதித்துக் கைகளுக்குள்..

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்

படத்திறப்பு:-
அமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்தனப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...
Related Posts Plugin for WordPress, Blogger...